"உரையாடல்" by Veena Sankar
எதிர் முனையாளர்: ஹலோ!
பெரியவர்: ஹலோ! யார் வேணுங்க?
எதிர் முனையாளர்: சார்! அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன்.
பெரியவர்: என்னப்பா! அப்பளமா?
எதிர் முனையாளர்: அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன்.
பெரியவர்: என்ன வேணும்?
எதிர் முனையாளர்: நீங்கள் அப்போலோவில் ஆர்டர் செய்திருக்கிறீர்களா?
பெரியவர்: ஆர்டரா? என்னது?
எதிர் முனையாளர்: நான் அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன்.
நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா?
பெரியவர்: நான் அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை.
எதிர் முனையாளர்: சார்! அப்பளம் இல்லை. அப்போலோ மெடிக்கலருந்து
பேசுறேன் நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா?
பெரியவர்: (சற்று கோபமாக) எத்தனை தடவை சொல்வது? நான்
அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை.
எதிர் முனையாளர்: சார் அப்பளம் இல்லை. நான் அப்போலோ மெடிக்க
-லேர்ந்து பேசுறேன் நீங்கள் மருந்து செய்தீர்களா?
(தற்போது தான் எதிர்முனையாளர் பேசியதை புரிந்து கொண்ட பெரியவர்)
பெரியவர்: ஓ! சாரிப்பா! நீங்கள் அப்போலோ என்று சொன்னது எனக்கு
அப்பளம் என்று தவறாக கேட்டு விட்டது. என்ன விஷயம்?
எதிர் முனையாளர்: நீங்கள் மருந்து ஆர்டர் சொன்னதில் ஒரு மருந்து
கிடைக்கவில்லை. நாளை தான் கிடைக்கும். அதனால்
நாளை அந்த மருந்தையும் சேர்த்து கொண்டு வரவா?
இல்லை இன்றிருக்கும் மருந்தை மட்டும் கொண்டு வரவா?
பெரியவர்: எல்லா மருந்துகளையும் சேர்த்து நாளை கொண்டு வாருங்கள்.
எவ்வளவு பணம் தேவைப்படும்?
எதிர் முனையாளர்: சரி சார். ரூபாய் இரு நூறு ஆகும். நாளைக்கு டெலிவரி
பண்ணும்போது பணத்தை வாங்கிக் கொள்கிறேன்.
இப்படியாக சுவாரஸ்யமான உரையாடல் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment