இன்று என் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்கு ஒரு அம்மாவும் பொண்ணும் வந்தார்கள். அவள் அம்மாவிற்கு ஃபோட்டோ எடுக்கணும் என்று சொல்லி தன் அம்மாவிற்கு சேலையில் மடிப்பு வைத்து பின் பண்ணி, தன் கைக்குட்டையால் அம்மாவின் முகத்தை துடைத்து விட்டு, நிஜத்தில் தான் என் அம்மா எண்ணைய் தோய்ந்த முகமாக இருக்கிறார். போட்டோவிலாவது அழகாய் தெரியட்டும் என்று சொல்ல, இதைக் கேட்டதும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றேன். நான் ரொம்ப சந்தோஷப் பட்டு அந்த பெண்ணிற்கு கை குலுக்கினேன். உழைப்பிற்கு மதிப்பு கொடுக்க தெரிந்த அப்பெண்ணை மனதார பாராட்டினேன். மேலும் அவள் அம்மா பூ வைக்காத காரணத்தினால் போட்டோவில் பூ வைத்து அப்பெண்ணை என்னால் முடிந்த அளவிற்கு சந்தோஷப்படுத்தினேன். பாசத்தை காலத்தால் அழிக்க முடியாது. உழைப்புக்கும் முயற்சிக்கும் மதிப்பு உண்டு எந்நாளும். பிள்ளைகளின் செயல் தான் ஒரு தாய்க்கு விலைமதிக்க முடியாத மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

No comments:
Post a Comment