Friday, October 25, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



எழுதி முடித்த புத்தகத்தில் 

மீண்டும் இடம் பிடிக்க துடிக்கும் பெண்

 புரட்டிப் பார்த்த பின் தான் தெரியும்

அவள் ஏதும் எழுதப்படாத புத்தகம் என்று


 சுருட்டி வைத்த புத்தகத்தை

புரட்டிப் பார்த்த போது

தான் விளங்கியது

பத்திகளுக்கிடையே உள்ள

இடைவெளியைக் கூட நிரப்பலாம் என்று 

நிரப்பவும் முயசித்த

 போது தான் விளங்கியது

இடைவெளி இல்லாத

எதுவும் விளக்குவதில் சிக்கலே என்று

Thursday, October 24, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மந்திரம் சொல்லும் கிள்ளையல்ல இது


தந்திரம் தெரியா வயதும் இது


தன்னலம் கருதா காதலில் அழகும் காணாது இது


மிரட்ட தெரியாது மிரள வைக்கும் பருவமே இது


கை கோர்த்து நடை பயிலும் நேரமில்லை இது


மெய் சேர்த்து பந்தத்தை வலுவாக்கும் காலமிது


காற்றே இடைமறைத்தாலும் விலகாத சொர்க்கமிது


இன்றோடு முடியும் உறவுமல்ல இது


தந்தையின் உதவியோடு தாயிடம்

அடைக்கலம் இது


அடுத்த உறவினை எதிர்ப்பார்த்து நிற்கும் காலம் இது

Wednesday, October 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 விரல்களின் இறுக்கத்தால் ஒளிரும் மின் விளக்கா?

இல்லை 

விரல்களின் வடிவத்தால் பிறந்த தோற்றமா?


 ஒளிர்வது மட்டுமே சிறப்பல்ல


ஒளியை ஏற்றி தாங்கி நிற்பதும் சிறப்பே!


துணை கொள்வதும் மட்டுமே சிறப்பல்ல


அந்த துணையும் இனிதாய் அமைவதும் சிறப்பே!


தாங்குவது மட்டுமே சிறப்பல்ல


அப்படி தாங்குவதும் தெளிவாய் இருப்பது சிறப்பு


 ஐவிரல்கள் இருந்த போதும் தாங்க இரு விரல்கள் கூட போதுமே


 விரல் எனும் குடும்பத்தில் பூத்த விளக்கு


 மின்சாரத் தேவையில்லாத எரிந்த விளக்கு கை விரல்களுக்கிடையே


தேடல் இல்லாமல் பிறந்த மாயை விளக்கு

Tuesday, October 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


முகத்தின் வழி புன்னகையில் 


கண்களின் வழி பார்வையில் 


நாசியின் வழி சுவாசத்தில்


நாடியின் வழி உயிரில்


நாவின் வழி பேச்சில்


தனிமையின் வழி காலத்தில்


வாழ்வின் வழி செயலில்


வடிவத்தின் வழி பயிற்சியில்


சோகத்தின் வழி கண்ணீரில்


இவை அனைத்திற்கும் ஒரே வழி மௌனத்தில்

Monday, October 21, 2024

படமும் கருத்தும் by Winmeengal

  


Akhila: ஒருவர்: ஏம்பா.. உனக்கு அறிவே இல்லையா? உன் மூளையில் என்ன களிமண்ணா இருக்கு??


மற்றொருவர்: ஆமா … மண் தான்.. கூடவே நறுமணம் கமழும் அரும்பும்🥰 🌷🌱

 Akhila: மறந்தான்.. மறந்தான்.. 

மண்ணை மறந்தான்…

மரமும் மறந்தான்…..

விலை போனது சர்வமும்;

தலைக்கேறியது கர்வமும்;

அதை காலி செய்து,

துளிர்த்தது முதல் மொட்டு🌷

Veena Shankar: வாழ நினைப்பவனுக்கு வழியில் விழியிலிருந்து பூத்த மலர்

 வழி தேடிய விழிக்கு இடையில்

கிடைத்த பசுமை

விழி இழந்தாலும் வழி பசுமையானது

 மற்ற புலன்களாலே 


அடுத்தவருக்கு தானமான விழியும் காண்பது பசுமையை

 வழி நீண்ட வாழ்க்கை பயணத்தில்

விழியும் தேவையே!


நல்லதை மட்டும் காண நினைத்தால்

விழியின் வழியும் சரியே!


மாறாய் போகுமென்றால் விழியும் குற்றவாளியாகிடுமே!


சாலையோர பசுமை காண

விழியும் வேண்டுமே!


அந்த விழியும் பசுமையாகும் உயிர் போன பின் அடுத்தவர் வாழ்விலே!


இருப்பது பெரிதல்ல எதையும் துறப்பது கடினமே!


பிறப்பின் பால் நல்லதாய் அமைவது யாவும் சிறப்பே!

Veena Shankar: தேடலின் விடை தெரிந்த பின்னே விழியும்

விலகியது காதலனின் மெய்யினின்று

இங்கே இழந்த விழி

இன்னொரு இடத்தில் பூத்தது

பூத்ததிலும் பலன் உண்டோ? நீரில்லா இடத்தில் உயிர் பெற்றதால் மண்ணின் ஈரம் உள்ள வரை மட்டும் நிலைக்கும் 

இந்த காதலும்

அதற்குள் பூப்பறிக்க வருகிறோம் நாங்கள்

Veena Shankar: வெற்றிடம் இருந்தால் மட்டும் பூ பூக்காது

ஈரமும் வேண்டும் தானே

விழி போனதால் வந்த ஈரமும் உயிர் கொடுத்தது இந்த செடிக்கு

 Vidhya Nivash: 

மொட்டை மாடி காலி... குடியிருக்க வந்த மலர்!

சாம்பலாகி போகும் உடல் மீண்டும் உயிர்ப்பிக்க உறுப்பு தானம் செய்வீர்!

அதுவும் கண்ட கனவு மெய்ப்பிக்க கண்தானம் செய்வீர்!

 மீண்டும் அதில் துளிரும் வித்து புது விதைகளை தூவ வழிவகுக்கும் பாதை!

Vidhya Nivash: வயது வளர வளர வளரும் உறுப்புகள் வெளியே புலப்பட...

வளராத உறுப்புகள் ,வெளியே புலப்படா!

 ஆனால் அவை உள்ளே மலர,பண்பட என்ன செய்ய?


தியானமா!

தானமா!


Sakthi: இருக்கும் வரை தியானம், 

இறந்தபின் தானம்.

 Shanmugapriya: வேற்று கிரக வாசியின் 

முதல் பயணம் 

பூமியில் வந்து இறங்கியவன் 

செடியையும் பூவையும் 

அவன் நெற்றி கண்ணில் 

பார்த்து அதிசியத்த 

காட்சி ….

Kiruthika: இதற்கு மேல் 

பார்க்க

விருப்பம் இல்லை 

என

எங்கிருந்து வந்தானோ 

அங்கேயே சென்றிட 

தன்னை 

அர்ப்பணித்து விட முடிவெடுத்தான்...

இவன்..!..


தன்

பசிக்கு

புசிக்க தந்த

இயற்கை வள்ளலுக்கு...

தான் எதுவுமே 

செய்ய வில்லையே 

என 

தன்னையே 

கடைசியில் 

உரமாய் 

ஏற்றுக்கொள்

என 

கடைசி விண்ணப்பம் 

கொடுத்து விட்டு 

சென்றான் 

ஓர் 

புனிதன்...

Saturday, October 19, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


துன்பத்தில் மட்டும் நீ என்னை

நினைப்பதாலே உன்னை சோதித்துப் பார்க்கிறேன் நானும் என் விளையாட்டினுள் ஒன்றாய்


தரம் பிரித்து பார்த்தே 

அடைகிறேன் நானும் 

உன் நிம்மதி எனும் வடிவிலே


மனம் லயித்தே சொல்கிறேன்

நானும் உன் அடிமை என்று

நீ என்னிடம் கொள்ளும் பக்தியாலே

Friday, October 18, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அன்புடன் உறவாடினால் எதிலும் கிடைக்கும் இனிமையான இசை


வெட்டுக் கிளி 

விட்ட காற்றினால்

நம் வாட்டத்தை 

போக்கிய இசை


காற்றின் சுவாசம் போதும் கருவியை இசைக்க

இடைப்பவர் யாராகிலும்

- Veena Shankar 


என் காதலே என் காதலே

உன்னை அசைக்க காற்றை கடன்

 வாங்கி உயிரை மூச்சாகி

 இசைக்க பார்ப்போர் எல்லாம்

 கைத்தட்ட..

ஏன் உன் காதுகள் மட்டும்

செவிடானது!

படைத்தவனையே மிஞ்சும்

 படைப்பு ...உயிர்ஓவியம்

 கற்பனையால் பேசும் படம் 

இங்கே டிரம்பெட் இசைக்கிறது. 

- Vidhya Nivash 


Thursday, October 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


பயணத்தின் தேவைக்காக காத்திருக்கின்றன இவைகள், அணியும் சமயம் ஒருவருக்கு ஒரு ஜோடியே என்று

 நம்முடனே ஊர் சுற்றி திரிந்தாலும் நம்மை விட 

தேய்பவனும் இவனே!

வருமானம் இல்லாதவன் உழைப்புக்கு

 உதாரணமும் இவனே!

தேடி தேடி சுழலும் கால்களுக்கு 

பாதுகாப்பும் இவனே!

உபயோகத்திற்கேற்ப 

அழகிலும் வடிவிலும் 

மாறுபவனும் இவனே!

சேர்ந்த நாள் முதல் 

தேயும் நாள் வரை

நம் பாதை தொடர   

துணையும் இவனே!


 தன் ஜோடியை மாற்றத் தெரியாமல் தவிக்கும்  

பந்தங்கள் இங்கே தேய்வதேன்னவோ உறுதி 

என்றாலும் விட்டுக் கொடுக்க முடியாத

நட்புள்ளங்கள் இங்கே

கூட்டத்தில் எங்கே விட்டாலும் அதன் இணை அதற்கே


ஒருவர் தொலைந்தால் மற்றவர் தனித்து 

வாழ தெரியா இளஞ்சோடிகள் என்றும்

Tuesday, October 15, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: கைகள் சுட்டுக்கொண்டு கற்றுக் கொண்ட பாடம் இங்கே

சுட்டுப் போட்டாலும் வாராது தாயின் கைமணம்

Vidhya Nivash:

 அருங்காட்சியகத்தில் அதிகமாக தேடப்படும் காட்சிப் பொருட்கள்.

 காணமல் போனவர் பட்டியலில் சேர்க்கப்பட்டவை!

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குதே,தண்ணீரின்றி விளைச்சலின்றி சட்டியில என்ன சமைக்க!

அனைத்தும் காட்சி பொருளே ஆனால் சுட்டெரிக்கும் வெயிலும், நெருப்பை போல் எரியும்  பசியும் மட்டும் நிஜமே!

Veena Shankar: பசியின் தேவைக்கான கலன்களின் அணிவகுப்பு இங்கே

வெகு சுதந்திரமாய்

மிக்க வசதியாய்

கிடைக்குமா இன்று?

திரும்பவும் உருவெடுக்குமா இவையும் நாகரீக உலகில்?

 Veena Shankar: பசியின் மணம் அரங்கேறும் இடமும் இதுவோ?

இயற்கையின் பலனில் செயற்கையாக உருவான மனிதனின் வித்தை

அதுவும் விந்தை


தெரிந்து தெளிந்து 

கொண்டதில் பிறப்பு

என்றுமே சமையற்கலை சிறப்பு

Veena Shankar: எத்தனை மாற்றங்கள் 

சமையலிலும் சமையற்கட்டிலும் வந்தாலும்

ஆண் ஆதிக்கம் இல்லா ஓர் இடமே!


பருவம் வரும் முன்னே 


விரும்பினாலும் விருப்பம் இல்லையென்றாலும்

பசிக்கு தேடுவது யாவும் இங்கேயே !


கோபத்தில் சூடான வார்த்தைகளும் பதார்த்தங்களும் பரிமாறப்படுவதும் இங்கே தான்


விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை

சுட்டுக் கற்றோர் சுவையில் சோடை போவதில்லை



பனியிலும் அடுப்படி குளிரை தடுக்குமே


சுட்டுப் படுவதால் மட்டுமே பக்குவம் இங்கேயும் வாழ்க்கையிலும்

 Veena Shankar: விறகடுப்புக்கு ஈடாகுமா ?

 இது அரசர் காலத்து கலைக்கூடமல்ல 

நாம் ஓடி ஒளிந்த இடமே


 ஆயிரம் எண்ணங்கள் வந்தாலும் அம்மாவின் நினைவு பேசும் ஓர் இடம் சமையற்கூடம்

Friday, October 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


இந்த நட்பின் பயன் இரையை வேட்டையாடுவதில்


 அண்ணன் தின்னும் இரையின் மீதியை காத்திருந்து உண்ண நினைக்கும் தம்பி


உதவி பெற்றவுடன் பறந்து போகும் மனிதனை பார்த்து

கற்றுக் கொண்ட பறவை

தேவையின் தீர்வுக்கு ஒரு தேடல் தேடலின் பலன் கிடைத்ததும் 

பறப்பது என்பதே குறி

Thursday, October 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கேள்வியும் நானே 

பதிலும் நானே

சிந்தனையில் பூக்கும் 

பக்குவமும் என்னுள்ளே

தனிமையில் இருக்கும் போது தாங்கும்

நபர்களும் உண்டோ

தவிப்பில் வெறுப்பும்

சேருமே

நிர்பந்தத்தில் எடுக்கும் முடிவும் பலன் தாருமோ?

வாய்த்தது பூ என்றாலும் 

பூத்தது பூவல்லவே 

பூவென்றால் சாந்தமிருக்கும்

மகரந்ததைதை காப்பது போல் காவல் கிடக்கும்

இது ஏதும் கிடைக்காத நானும் இங்கே

வெறுமையிலும் தனிமையிலும்


 தயக்கம் தந்த மயக்கமா?

மனைவியின் இழப்பால் நேர்ந்த கதியா?

தேவைக்கு கூட கை நீட்ட தெரியாமல் வளர்ந்த விதமா?

பிள்ளைகளிடம் கூட அது தொடருமா?

பசிக்கு சோறு கிடைத்தாலும்

அது

அன்போடும் பாசத்தோடும்

பரிவோடும் பரிமாறப்படுமா?

ஆளுமை உள்ள உலகில் தள்ளாடி நினைவுகளை சுமப்பதும் சாத்தியமா?

சிலாகித்து பழகிய மனத்திற்கு வெறுமையும் தேவை தானா?

துணையுடன் பேசிய

காலங்களில் சண்டையிட்டதும்

அதுவே பின் காதலாய் மாறியதும் அடுத்தவர் யாருக்கும் புரியுமா?

யாத்திரை பயணத்தில் கூட நித்திரை கொள்ளாத

நிலையும் வேண்டுமா?

நிமிர்ந்தால் தெரிவது அவளே!

கண்ணயர்ந்தால் கூட கனவிலும் அவளே!

கரிசனம் கொள்ள பலர் இருந்தாலும் தரிசனம் கிடைக்குமா அவளின்?

பெருமூச்சு கூட வர மறுக்கிறது துணை அவள் என் உஷ்ணத்தை ஏற்க இல்லாததால்

சாத்திரம் படித்தால் மட்டும் போதுமா?

மனைவியின் அன்பையும் படிக்க வேண்டாமா?

தாயிடம் மட்டும் சேரும் 

உறவுகளும் உணர்வுகளும்

தந்தையிடம் அண்ணியப்பட்டு நிற்பதும் ஏனோ?

பத்திரத்தைக் கூட பத்திரமாக வைத்து பாதுகாக்க

மனைவியின் மனம் எனும் புத்தகத்தை படிக்க அல்ல புரட்டிக் கூட பார்க்க மறந்ததும் ஏனோ?

இதயம் பிரிந்த பின்னால் 

உதயமாகும் அறிவிற்கு

ஆதாயமும் உண்டோ?

சமுதாயமும் தூற்றுமே 

 அதில் 

நியாயமும் உண்டே!

Monday, October 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஆதிக்கம் எதில்

மயக்குவ திலா? மயங்குவதிலா?

யார் யாரால்?

என்ற வினாவும் எழுகிறதே

பொதிந்த வனப்பு யாவும் 

வெளிபட்டு நிற்க மறைத்து வைத்த பொருளும் யாது?

இருதயம் பரிமாறப்பட்ட பின்னால்

மற்ற உறுப்புக்கள் யாவும் 

அடிமையே!

அடி தொடுபவனுக்கும்

மடியில் கொள்பவனுக்கும் 

பிறையுள் சிறையான 

மர்மம் விளங்கும் முன்னே

கரங்கள் ஈர்த்தன

வாழ்வை ரசிக்க

சுகத்தை ருசிக்க

வசந்தத்தை வரவேற்க

உணர்வில் மட்டுமல்ல காமம்

இங்கே ஒழுகுகிறது 

கண்களிலும்

எவரிடமிருந்து என்று நோக்கையிலே 

நேரமும் கரைகிறது

Sunday, October 6, 2024

மெய்யழகன்கள் by Vidhya Nivash

 


மெய்யழகன்கள் இந்த நிழற்ப்படத்தை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. அதே தான் அந்த திரைப்படம் தான்.

என்ன படம்? பார்க்கும் முன் பலரும் சரியான அறுவ, பேசிக்கிட்டே இருக்காங்க, என பலவும்.

அட அதை தான் தொலைத்துவிட்டோம் பா,உணர்வின் வெளிப்பாடு,ஒரு அனுபவம் .சிங்கம் போல ,எனக்கு எதுவும் வேண்டாம் நானே ராஜா!என் வழி தனி வழி என பலரும்.ஆட்டுக்குட்டி மாதிரி போகும் இடம் எல்லாம் கூடவே வரும்,வெகுளியான,தொல்லை என்றாலும் என்றோ காட்டிய அன்பிற்கு நான் அடிமை என்று சிலரும் .கடைசியில் அந்த சிங்கம் சொல்லுமே என்னையே எனக்கு காட்டிய நீ யாரடா? செம வசனம்.

முதல் வெக்கம்,முதல் காதல்,முதல் நட்பு,முதல் அவமானம், சண்டை,அழுக்கை,அக்காவோட பாவடை,அண்ணாவோட புத்தகம்,பல தலைமுறை பயன்படுத்திய ஒரு பொருள் மற்றவருக்கு பொக்கிஷசமாக,வழிகாட்டியாக,வாழ்வின் ஆதரவாக, திருவிழாவில் ஓரகண்ணில் அடித்த சைட்டு பல நினைவை தந்த,தூரத்துசொந்தம்,கோடைவிடுமுறை எங்கேப்பா போனது!

மின்விசிறி,விளக்கு,தனியறை,குளியலறை, கழிப்பறைக்கூட இல்லா காலம் எவ்வளவு இனிமையாக கழிந்த நாட்கள் எங்கே.

 இன்று அனைத்தும் இருந்த இடத்திலே கிடைக்கும்.ஓரு ஐந்து நிமிடம் பேச முடியவில்லை உடன் இருப்பவரிடம், நேரம் இல்லை.இவ்வளவு வேகமாக எதை பிடிக்க செல்கிறோம். குழந்தைகளுக்கும் ஐந்து நிமிடத்தில் சலிப்பு .ஏன்?

இந்த திரைப்படம் மனதோடு பேசி நினைவை அசைப்போட்டு ,கண்கள் கலங்கி,மெய்சிலிர்க்க செய்தது. மறக்க முடியாத பெயர்கள் ,கைக்கோர்த்து பேசி நடந்த பாதைகள்,மனிதர்கள் ஆனால் ஏனோ பல வருடங்களாக பேசிக்கொள்ளவதில்லை.அய்யோ எப்படி மறந்து போனேன், யார் என்று கேட்டேனே! 

கூப்பிட்ட உடனே ,அப்படியே கூடவே வர,நேரத்தை தர, தன்னை தர,எத்தனை பேர் இருப்பர்! 

நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள வேற்றுமை பழகுவதில்லை, மெய்யாக வாழும் வாழ்க்கையில்  பொய்யாக நடிப்பதை எடுத்துக்காட்டி, கொஞ்சம் மறந்ததை ரசிக்க ,அத்தான்- அத்தாச்சி என சொல்ல மறுத்த அழகிய உறவு முறையை நினைவூட்டி, அதோடே மறந்த வரலாற்றை ,வளர்ந்த ஊரை ,உறவை திரும்பி பார்க்க வைத்த படம்.


Saturday, October 5, 2024

மெய்யா! பொய்யா? அழகு by Vidhya Nivash

 


பார்த்தவுடனே கவர்ந்து இழுக்கும் படம்.மெய்யழகன் படத்தை பற்றி எழுத நினைத்தேன்.அதை பார்க்கும் முன்,பலரும் பொழுதுபோக்காக திரைப்படம் பார்ப்பது வழக்கம்.

ஆனால் இந்த படங்கள் நிஜத்தை நிழலில் காட்டியவை. முதலில் வாழை இது அதிகமாக பேசப்பட்டது.ஒரு வாழைப்பழம் தானே என்போம். அது நம் கைக்கு வரும் கதை? ரொம்ப அழகான படம் நட்பு,காதல்,பாசம்,உழைப்பு,கல்வி என அனைத்தும் சேர்ந்த கலவை.அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிக்க, ஒரு மாணவனின் கனவு அதற்கான விலை என்ன? பசி,மானத்திற்கு ஆசைகளும்,கனவும் உணவாகிறது.முதலைகளின்  ஆசைக்கு உயிர் பலி.கடைசியில் பார்ப்பவருக்கு மூச்சு முட்டும் ,ஒரு கை சோற்றை வாயிற்கு கொண்டுச்செல்ல எத்தனை ஆசைகளை ,உயிரை கொடுக்க வேண்டியுள்ளது.அதே சமூகத்தில் என்னாப்பா இவ்வளவு விலை,விஷேச நாட்கள் என்றால் ஏற்றிவிடுவீரே!ஒரு ரூபாய்,அதற்கு எத்தனை வலி,என்ன விலை? 

அடுத்து கொட்டுக்காளி படம் பெயரே வித்தியாசமாக இருந்தது.இது முழுக்க ஒரு நாள் பொழுது,ஒரு குடும்பத்துடன் நாமும் செல்லும் பயணம்.பேய் பிடித்த பெண்ணை வைத்து நகரும் படம்.முதலில் கதாநாயகனாக வருவரை பார்த்து பாவமாக இருக்கும்.ஒரு கட்டத்தில் தலைக்கு ஏறும் மூர்க்கத்தை பார்க்கும் போதே அவன் நிஜம் தெரியும்.பெண் அடிமைத்தனத்தை சேவல் மற்றும் கதாநாயகியை வைத்தே நகரும் படம்.பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் அது பலியா? இல்லையா? என நம்மிடமே முடிவு விடப்படுகிறது .மூடநம்பிக்கையை வேர் அறுக்கும் படம்.ஒரு அழகான காட்சி காளை மற்றும் சிறு பெண்ணின் நட்பு,யாருக்கும் அடங்காத காளை அவளுக்கு குழந்தை .இருவரும் அடங்கா விட்டால் சந்தையில் விற்கப்படுவர். இந்த பேய் பெண்ணுக்கு மட்டுமே பிடிக்கிறது ,ஆணுக்கு இல்லை!

அடுத்து கூழாங்கல், இது கரிசல்காட்டு மண்,அதன் உயிரோட்டத்தை காட்டிய படம் இல்லை தாகம்,தாக்கம்.

சிங்கமும்,ஆடும் நண்பர்களாக செல்பி எடுக்கும் காலம் வர,நாமும் பலதை சிந்திக்க வேண்டும்.கல்வி தடையின்றி அனைவரையும் சென்று அடைந்து,அனைவரும் ஒன்றே,யாரும் பலியும் இல்லை,அடிமையும் இல்லை.அதற்கு கல்வி என்ற ஆயுதம் மேலோங்க வேண்டும்.


Friday, October 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நீர்த்திவலையில் பூத்த பூச்சியா?

கண்ணாடியில் செதுக்கிய கலையா?

தோட்டத்தில் பறக்காமல் மெய் மறந்த நிலையா?

தேடியது கிடைக்குமா?

தேடலில் சுகமும் உண்டு

துக்கமும் உண்டு

அது யாவும் அதன் விளைவில்


 தொட்டால் பறி போகுமா நீர்த்திவலை?

தாகம் தீர்க்க ஒரு பானை தேவையில்லை

ஓர் துளி போதும்

அருந்தினால் குளிர்ச்சி

தவற விட்டால் மண்ணில் சுழற்சி

அதுவே தாவரம் வளர 

பூமியில் ஓர் மலர்ச்சி

அதில் துளிர்க்கும் இலையில் 

காலத்தில் மீண்டும் 

ஓர் நீர்த்துளி

அருந்தவும் முடியாமல்

காக்கவும் முடியாமற்

சிந்தனை கொள்கிறது பூச்சியின் மனமும்

தருணம் சரியென்றால் எதுவும் 

படைக்கும் வரலாறு

Thursday, October 3, 2024

பச்சைவெளியே!பாறையா? by Vidhya Nivash

 




விடாமல் பெய்யும் மழையில் உறங்கும் வால்பாறை.தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்திருந்த மனமும்,ஆறும் விடியலுக்காக காத்திருக்க .சூரியன் இல்லா விடியல், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஆற்றை பார்க்க ஆர்வமாக தொடங்கி நடைப்போட கொஞ்ச நேரத்தில் மூச்சிரைக்க.ஆஹா நாம் இருப்பது மலைப்பிரதேசம் என்று மூளைக்கு  எட்டுவதற்குள். புன்னகைப்பூத்த முகத்துடன் ,கூடவே செல்லபிராணியுடம் நடைப்பயிற்சி போகும் பெண்மணி.

அருகில் இருந்த கடகடவென ஓடும் ஆற்றை ரசிக்க ,படபடவென அடித்த இதயம்.கொஞ்ச நேரத்தில் பிடித்த மழை,துரத்தியது விடுதிக்கு..வெள்ள அபாய எச்சரிக்கை,சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி,என அடுத்த பயணம் வீட்டை நோக்கி என்று ஆனது.

முதல் நாள் அனுபவம்,காலை சிற்றுண்டிக்கு வீட்டு சாப்பாட்டை தேடியது.கிடைத்தது ,ஒரே பெண்மணி ,எத்தனை பேர் வந்தாலும்,எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக பரிமாறி,உடனுக்குடன் சூடாக கொடுத்தார்.வயிறும்,மனமும் நிறைந்தது.

ஒருபுறம் வருக்கி வாங்க சிலர்,மறுபுறம் அம்மாவும்,சித்தியும் அருகில் இருக்கும் முருகனை பார்க்க சித்தம்.கொஞ்சம் படிக்கள் இருந்ததை யோசித்து, பின்பு விஜயம்.கொஞ்ச நேரத்தில் பிடித்த மழை,குற்றால அருவியாக ஓட .காலணிகள் தண்ணீரில் மிதக்க,ஓட்டமாக ஓடி பிடித்து வந்து வைத்த இடம் தவறு,அங்கு வந்த பக்தர் கோவம் கொள்ள. திறுதிறுவென முழித்த நாங்கள்.




அங்கு கவனித்த நொடிகள்,ஒருவர் கூட மழையை பொருள்படுத்தவில்லை.அதில் கூட,கோயில் பராமரிப்பில் கடமையை செய்த வயதான பாட்டி,தண்ணீரை தள்ளிவிட்ட மனங்கள்,வழுக்குது பார்த்து போக சொன்னது.

சிறு பயத்துடன் மழையில்,மலையில் சறுக்குவிட்ட வண்டி,மெல்ல போக.,மனமோ மூடுபனியில் சிக்கியது போல் தவிக்க.

வழியில் கண்ட காட்சிகள் சிந்திக்க செய்தது,கொட்டும் மழையில் கோணிப்பையை தலையில் சுமந்து,அட்டைப்பூச்சி தரும் வலியை உடல்கள் விலக்கி,பலரின் பசியை போக்க வலிமையான மனத்துடன் ,இது ஒன்றும் இல்லை என்று பணிபுரியும் தேயிலை தோட்டத்து தூண்கள்,சாலையை சரிச்செய்யும் சாமிகள்,துப்புரவு தொழிலாளர்கள். அவர்கள் சொன்னது ஒன்றே நீங்கள் வந்தது சுற்றுலாவிற்கு, எங்களுக்கு இதுவே சாமி,ஆதாரம் ,தினம்தினம் ஓர் அனுபவம்.

மழையும்,மலையும் காண்போருக்கு கவர்ச்சி பொருள்.அதில் வாழ்வோருக்கு மட்டுமே தெரியும் அதன் உண்மை போராட்டம், போர்க்களம்.

வால்பாறை, ரம்மியமாக ஒய்வெடுக்க கைநீட்டி காத்திருக்கு, அதை மையப்படுத்தி பார்க்க,ரசிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கு.மீண்டும் பயணிக்க முயற்சிப்போம்...

தேயிலை தோட்டம் வருவதற்கு முன்பு எப்படி இருந்திருக்கும் இந்த மலைப்பிரதேசம்??

விடாமல் திண்டுக்கல் வரை வந்து வழியனுப்பிய மழை,இடையில் திருமூர்த்தி அருவிக்கும் போட்டது தடை.

ஒவ்வொரு பயணமும் ஓர் அனுபவம்,இன்னும் பல காத்திருக்கு ,பயணிக்க,படிக்க,பழக முயற்சிப்போம்.🙏



படமும் கருத்தும் by Kiruthika

 


 Ada..

Yaaroda Mobile ma ithu ..?!!..

Aattukutty Mobile Gift Koduththu..

Kaatu Raajavaiye 

Mayakkiduche ..🤗


 Aval 

Peranbu Kaatta ...


Pasi Maranthu..

Than Nilai Maranthu..

Ivanum ..

Natppu kondaano ..


Anega Maayam Seyyum..

Athu Thaan 

Anbu..

Aathmaarthamaana Anbu 😍😍


 காட்டு விலங்குக்கு

கூட 

விளங்குது...


நாட்டு

மனிதர்க்கு 

விளங்குதல் 

இல்லையே..


இவர்களை...

என்ன 

செய்ய..!?..

காடு 

கடத்தலாமா..??


அய்யோ 

வேண்டாம்..!..


இவர்கள்..

அவர்களை..

கெடுத்து விடுவார்களே..🤗

படமும் கருத்தும் by Veena Shankar

  


மீட்டுபவன் எவனோ அவனே அறிவை மீட்பவன்


 கம்பிகள் உள்ள கருவியை கம்பிகளால் இணைந்த பூவை கம்பீரமாக இசை கொடுக்கும் காட்சி


 கரங்கள் மீட்டும் கம்பிகளாய் கருவியும் கயல் விழியாளும் 

இசைப்பது யாவும் இனிமையே 

மீட்டும் விரல்களை பொறுத்து

கம்பிகளும் வளைவது இசையைக் கூட்டவே

கயல் விழியாளும் 

வளைவது உண்மையான காதலுக்கே 

கம்பிகளில் ஈரம் தொட்டால் கருவியும் வீண் தானே?

கயல்விழியாளின் விழியில் ஈரம் தொட்டால்

யார் வாழ்வும் வீண் தானே?

மீளுவதும் மீட்பதும் மனம் பொறுத்தே


இசைக் கருவியும் வசமாகும் மீட்பவரை பொறுத்து

நீளும் இசையில் மீளும் மனதும்

சொர்க்கம் கூட பக்கம் வரும் ரசிப்பு த்

 தன்மையிருந்தால் 

வருவது வரட்டும்

மீண்ட வரை இலாபம் 

துணையின் வெறுமை இங்கே

துணிவாய் மாறியது இசையின் துணையோடு

Wednesday, October 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆடியில் தெரிவது முகம்

இருவரானதால் அதில் பாகம்

செல்பியில் கொண்ட மோகம்

நெஞ்சில் ஏதோ ராகம்

செயலில் தெரிந்தது தாகம்

எப்போதும் நாம் காணாத ரகம்

வலியில் பிறப்பது சோகம்

வழியில் காண்பது சுகம்

வானம் கொள்ளாதா மேகம் 

நிலம் தாராதா போகம்

எப்போதும் அசராத தேகம்

எந்நாளும் எடுக்கும் வேகம்


 வீரம் ஒன்று அமைதியாய்

அமைதி ஒன்று வீரமாய்

காண்பது யாது மெய்யா?

ஐயம் கொண்டு காண்கிறது

வீரமும் அமைதியும்

வீரத்தின் அமைதி தாக்கவா?

அமைதியின் வீரம் காக்கவா?

கூர்ந்து நோக்கியதில் விளங்கியது

எதுவும் அமைதி கொள்ளாது

அவரவர் சூழ்நிலையில்

எவரும் சிக்கும் போது

 பகைமை கூட நட்பானது கையில் அடக்கமான அலைபேசியால்

 தகுதியும் தேவை இல்லை இங்கே

பகுதி நேர பணிக்கு

பசியும் இல்லை இங்கே

மதி புறம் போனதால்

வெகுமதியும் இல்லை இங்கே

வீரம் மறந்து போனதால்

Tuesday, October 1, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ரணத்தின் காரணம் தெரிந்தாலும்

மகளிடம் மறைத்து

புன்னகை பூக்கும்

வீரனே, தந்தை

மரணத்தை கூட வென்றிடுவான்

தன் மகளின் புன்னகையை ரசித்தவாறே

தந்தையின் வீரத்தை அறிந்த மகளும்

தன் கிரீடத்தை தந்தைக்கு அணிவித்து

அழகு பார்ப்பதும்

சிறப்பே


பல அம்புகள் உடலில் எய்தியிருந்தாலும் 

வம்பு பேசி மகிழும் தந்தை இங்கே

தன் கவலை மறந்து

அவள் பாசத்திற்கு அடிமையாகி

அவள் அழகில் மயங்கி

அவள் பேச்சில் உருகி

அவள் உதிர்க்கும் வார்த்தைக்கு 

தன் உதிரத்தை கட்டுபடுத்தி

உயிரை கையில் பிடித்து

கொள்பவனும் தந்தை என்பவனே!


 மௌனமும் சிறந்தது

வலியை தாங்கும் போது

புன்னகையும் சிறந்தது

ரணத்தை ஆற்றும் போது 

தருணமும் சிறந்தது

மழலை தன்னிடம் அடைக்கலமாகும் போது

தவிப்பும் சிறந்தது

மீண்டும் இது எந்நாளோ என்று நினைக்கும் போது


மனைவி எனும் 

அன்பின் விலகலால் 

அம்பின் வலி கொண்ட தந்தை

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...