முகத்தின் வழி புன்னகையில்
கண்களின் வழி பார்வையில்
நாசியின் வழி சுவாசத்தில்
நாடியின் வழி உயிரில்
நாவின் வழி பேச்சில்
தனிமையின் வழி காலத்தில்
வாழ்வின் வழி செயலில்
வடிவத்தின் வழி பயிற்சியில்
சோகத்தின் வழி கண்ணீரில்
இவை அனைத்திற்கும் ஒரே வழி மௌனத்தில்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment