Akhila: ஒருவர்: ஏம்பா.. உனக்கு அறிவே இல்லையா? உன் மூளையில் என்ன களிமண்ணா இருக்கு??
மற்றொருவர்: ஆமா … மண் தான்.. கூடவே நறுமணம் கமழும் அரும்பும்🥰 🌷🌱
Akhila: மறந்தான்.. மறந்தான்..
மண்ணை மறந்தான்…
மரமும் மறந்தான்…..
விலை போனது சர்வமும்;
தலைக்கேறியது கர்வமும்;
அதை காலி செய்து,
துளிர்த்தது முதல் மொட்டு🌷
Veena Shankar: வாழ நினைப்பவனுக்கு வழியில் விழியிலிருந்து பூத்த மலர்
வழி தேடிய விழிக்கு இடையில்
கிடைத்த பசுமை
விழி இழந்தாலும் வழி பசுமையானது
மற்ற புலன்களாலே
அடுத்தவருக்கு தானமான விழியும் காண்பது பசுமையை
வழி நீண்ட வாழ்க்கை பயணத்தில்
விழியும் தேவையே!
நல்லதை மட்டும் காண நினைத்தால்
விழியின் வழியும் சரியே!
மாறாய் போகுமென்றால் விழியும் குற்றவாளியாகிடுமே!
சாலையோர பசுமை காண
விழியும் வேண்டுமே!
அந்த விழியும் பசுமையாகும் உயிர் போன பின் அடுத்தவர் வாழ்விலே!
இருப்பது பெரிதல்ல எதையும் துறப்பது கடினமே!
பிறப்பின் பால் நல்லதாய் அமைவது யாவும் சிறப்பே!
Veena Shankar: தேடலின் விடை தெரிந்த பின்னே விழியும்
விலகியது காதலனின் மெய்யினின்று
இங்கே இழந்த விழி
இன்னொரு இடத்தில் பூத்தது
பூத்ததிலும் பலன் உண்டோ? நீரில்லா இடத்தில் உயிர் பெற்றதால் மண்ணின் ஈரம் உள்ள வரை மட்டும் நிலைக்கும்
இந்த காதலும்
அதற்குள் பூப்பறிக்க வருகிறோம் நாங்கள்
Veena Shankar: வெற்றிடம் இருந்தால் மட்டும் பூ பூக்காது
ஈரமும் வேண்டும் தானே
விழி போனதால் வந்த ஈரமும் உயிர் கொடுத்தது இந்த செடிக்கு
Vidhya Nivash:
மொட்டை மாடி காலி... குடியிருக்க வந்த மலர்!
சாம்பலாகி போகும் உடல் மீண்டும் உயிர்ப்பிக்க உறுப்பு தானம் செய்வீர்!
அதுவும் கண்ட கனவு மெய்ப்பிக்க கண்தானம் செய்வீர்!
மீண்டும் அதில் துளிரும் வித்து புது விதைகளை தூவ வழிவகுக்கும் பாதை!
Vidhya Nivash: வயது வளர வளர வளரும் உறுப்புகள் வெளியே புலப்பட...
வளராத உறுப்புகள் ,வெளியே புலப்படா!
ஆனால் அவை உள்ளே மலர,பண்பட என்ன செய்ய?
தியானமா!
தானமா!
Sakthi: இருக்கும் வரை தியானம்,
இறந்தபின் தானம்.
Shanmugapriya: வேற்று கிரக வாசியின்
முதல் பயணம்
பூமியில் வந்து இறங்கியவன்
செடியையும் பூவையும்
அவன் நெற்றி கண்ணில்
பார்த்து அதிசியத்த
காட்சி ….
Kiruthika: இதற்கு மேல்
பார்க்க
விருப்பம் இல்லை
என
எங்கிருந்து வந்தானோ
அங்கேயே சென்றிட
தன்னை
அர்ப்பணித்து விட முடிவெடுத்தான்...
இவன்..!..
தன்
பசிக்கு
புசிக்க தந்த
இயற்கை வள்ளலுக்கு...
தான் எதுவுமே
செய்ய வில்லையே
என
தன்னையே
கடைசியில்
உரமாய்
ஏற்றுக்கொள்
என
கடைசி விண்ணப்பம்
கொடுத்து விட்டு
சென்றான்
ஓர்
புனிதன்...

No comments:
Post a Comment