மெய்யழகன்கள் இந்த நிழற்ப்படத்தை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. அதே தான் அந்த திரைப்படம் தான்.
என்ன படம்? பார்க்கும் முன் பலரும் சரியான அறுவ, பேசிக்கிட்டே இருக்காங்க, என பலவும்.
அட அதை தான் தொலைத்துவிட்டோம் பா,உணர்வின் வெளிப்பாடு,ஒரு அனுபவம் .சிங்கம் போல ,எனக்கு எதுவும் வேண்டாம் நானே ராஜா!என் வழி தனி வழி என பலரும்.ஆட்டுக்குட்டி மாதிரி போகும் இடம் எல்லாம் கூடவே வரும்,வெகுளியான,தொல்லை என்றாலும் என்றோ காட்டிய அன்பிற்கு நான் அடிமை என்று சிலரும் .கடைசியில் அந்த சிங்கம் சொல்லுமே என்னையே எனக்கு காட்டிய நீ யாரடா? செம வசனம்.
முதல் வெக்கம்,முதல் காதல்,முதல் நட்பு,முதல் அவமானம், சண்டை,அழுக்கை,அக்காவோட பாவடை,அண்ணாவோட புத்தகம்,பல தலைமுறை பயன்படுத்திய ஒரு பொருள் மற்றவருக்கு பொக்கிஷசமாக,வழிகாட்டியாக,வாழ்வின் ஆதரவாக, திருவிழாவில் ஓரகண்ணில் அடித்த சைட்டு பல நினைவை தந்த,தூரத்துசொந்தம்,கோடைவிடுமுறை எங்கேப்பா போனது!
மின்விசிறி,விளக்கு,தனியறை,குளியலறை, கழிப்பறைக்கூட இல்லா காலம் எவ்வளவு இனிமையாக கழிந்த நாட்கள் எங்கே.
இன்று அனைத்தும் இருந்த இடத்திலே கிடைக்கும்.ஓரு ஐந்து நிமிடம் பேச முடியவில்லை உடன் இருப்பவரிடம், நேரம் இல்லை.இவ்வளவு வேகமாக எதை பிடிக்க செல்கிறோம். குழந்தைகளுக்கும் ஐந்து நிமிடத்தில் சலிப்பு .ஏன்?
இந்த திரைப்படம் மனதோடு பேசி நினைவை அசைப்போட்டு ,கண்கள் கலங்கி,மெய்சிலிர்க்க செய்தது. மறக்க முடியாத பெயர்கள் ,கைக்கோர்த்து பேசி நடந்த பாதைகள்,மனிதர்கள் ஆனால் ஏனோ பல வருடங்களாக பேசிக்கொள்ளவதில்லை.அய்யோ எப்படி மறந்து போனேன், யார் என்று கேட்டேனே!
கூப்பிட்ட உடனே ,அப்படியே கூடவே வர,நேரத்தை தர, தன்னை தர,எத்தனை பேர் இருப்பர்!
நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள வேற்றுமை பழகுவதில்லை, மெய்யாக வாழும் வாழ்க்கையில் பொய்யாக நடிப்பதை எடுத்துக்காட்டி, கொஞ்சம் மறந்ததை ரசிக்க ,அத்தான்- அத்தாச்சி என சொல்ல மறுத்த அழகிய உறவு முறையை நினைவூட்டி, அதோடே மறந்த வரலாற்றை ,வளர்ந்த ஊரை ,உறவை திரும்பி பார்க்க வைத்த படம்.

No comments:
Post a Comment