Thursday, October 3, 2024

பச்சைவெளியே!பாறையா? by Vidhya Nivash

 




விடாமல் பெய்யும் மழையில் உறங்கும் வால்பாறை.தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்திருந்த மனமும்,ஆறும் விடியலுக்காக காத்திருக்க .சூரியன் இல்லா விடியல், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஆற்றை பார்க்க ஆர்வமாக தொடங்கி நடைப்போட கொஞ்ச நேரத்தில் மூச்சிரைக்க.ஆஹா நாம் இருப்பது மலைப்பிரதேசம் என்று மூளைக்கு  எட்டுவதற்குள். புன்னகைப்பூத்த முகத்துடன் ,கூடவே செல்லபிராணியுடம் நடைப்பயிற்சி போகும் பெண்மணி.

அருகில் இருந்த கடகடவென ஓடும் ஆற்றை ரசிக்க ,படபடவென அடித்த இதயம்.கொஞ்ச நேரத்தில் பிடித்த மழை,துரத்தியது விடுதிக்கு..வெள்ள அபாய எச்சரிக்கை,சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி,என அடுத்த பயணம் வீட்டை நோக்கி என்று ஆனது.

முதல் நாள் அனுபவம்,காலை சிற்றுண்டிக்கு வீட்டு சாப்பாட்டை தேடியது.கிடைத்தது ,ஒரே பெண்மணி ,எத்தனை பேர் வந்தாலும்,எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக பரிமாறி,உடனுக்குடன் சூடாக கொடுத்தார்.வயிறும்,மனமும் நிறைந்தது.

ஒருபுறம் வருக்கி வாங்க சிலர்,மறுபுறம் அம்மாவும்,சித்தியும் அருகில் இருக்கும் முருகனை பார்க்க சித்தம்.கொஞ்சம் படிக்கள் இருந்ததை யோசித்து, பின்பு விஜயம்.கொஞ்ச நேரத்தில் பிடித்த மழை,குற்றால அருவியாக ஓட .காலணிகள் தண்ணீரில் மிதக்க,ஓட்டமாக ஓடி பிடித்து வந்து வைத்த இடம் தவறு,அங்கு வந்த பக்தர் கோவம் கொள்ள. திறுதிறுவென முழித்த நாங்கள்.




அங்கு கவனித்த நொடிகள்,ஒருவர் கூட மழையை பொருள்படுத்தவில்லை.அதில் கூட,கோயில் பராமரிப்பில் கடமையை செய்த வயதான பாட்டி,தண்ணீரை தள்ளிவிட்ட மனங்கள்,வழுக்குது பார்த்து போக சொன்னது.

சிறு பயத்துடன் மழையில்,மலையில் சறுக்குவிட்ட வண்டி,மெல்ல போக.,மனமோ மூடுபனியில் சிக்கியது போல் தவிக்க.

வழியில் கண்ட காட்சிகள் சிந்திக்க செய்தது,கொட்டும் மழையில் கோணிப்பையை தலையில் சுமந்து,அட்டைப்பூச்சி தரும் வலியை உடல்கள் விலக்கி,பலரின் பசியை போக்க வலிமையான மனத்துடன் ,இது ஒன்றும் இல்லை என்று பணிபுரியும் தேயிலை தோட்டத்து தூண்கள்,சாலையை சரிச்செய்யும் சாமிகள்,துப்புரவு தொழிலாளர்கள். அவர்கள் சொன்னது ஒன்றே நீங்கள் வந்தது சுற்றுலாவிற்கு, எங்களுக்கு இதுவே சாமி,ஆதாரம் ,தினம்தினம் ஓர் அனுபவம்.

மழையும்,மலையும் காண்போருக்கு கவர்ச்சி பொருள்.அதில் வாழ்வோருக்கு மட்டுமே தெரியும் அதன் உண்மை போராட்டம், போர்க்களம்.

வால்பாறை, ரம்மியமாக ஒய்வெடுக்க கைநீட்டி காத்திருக்கு, அதை மையப்படுத்தி பார்க்க,ரசிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கு.மீண்டும் பயணிக்க முயற்சிப்போம்...

தேயிலை தோட்டம் வருவதற்கு முன்பு எப்படி இருந்திருக்கும் இந்த மலைப்பிரதேசம்??

விடாமல் திண்டுக்கல் வரை வந்து வழியனுப்பிய மழை,இடையில் திருமூர்த்தி அருவிக்கும் போட்டது தடை.

ஒவ்வொரு பயணமும் ஓர் அனுபவம்,இன்னும் பல காத்திருக்கு ,பயணிக்க,படிக்க,பழக முயற்சிப்போம்.🙏



1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...