வயலும் வாழ்வும் ஒன்றியது
இங்கே
பசியும் விளைச்சலும் கொண்டது இங்கே
பசுமையும் வலியும் பிறந்தது இங்கே
காதலும் மோதலும் வருவது இங்கே
குடியும் குடித்தனமும் வளர்ந்தது இங்கே
மனமும் மணமும் கூட்டியது இங்கே
நிம்மதியும் வறுமையும்
வாழ்ந்தது இங்கே
வருவதும் போவதும் தெரிவது இங்கே
கள்ளமும் கபடும் நேர்மாறனது இங்கே
நீரும் நிலமும்
பூசிக்கப்படுவது இங்கே
குணமும் சிறப்பும் தொடர்வது இங்கே
தெய்வமும் பெண்ணும் போற்றப்படுவது இங்கே
புலமையும் செயலும் காண்பது இங்கே
உழைப்பும் மனிதமும் சேர்வது இங்கே
காலமும் நேரமும் கரைவது இங்கே
பாதையும் கடனும் நீள்வது இங்கே
இறுமாப்பும் இளமையும் சங்கமிப்பது இங்கே
வருமானமும் அதிகாரமும் ஆட்கொள்வது இங்கே
வசதியும் வாய்ப்பும் உள்ளது இங்கே
இதை விடுத்து
எதை நோக்கி. ஓடுகிறோம் நாம்?
விளங்க வேண்டியது விளங்காமலும்
விலகி நிற்பது கூட
அறியாமலும்
தேய்வில்லாத வாழ்வும் ஏனோ?
தெரிந்த தெளிந்து
தெறித்து விடு உன் ஆற்றலை இன்றே!
விவசாய பூமியில்
உன்னை தாங்கும் அன்னையிடத்து


















