Friday, May 30, 2025

காண அரிது by Veena Shankar

 


காண அரிது


அன்று மாலை என்னவோ சுகமான காற்று வீச, திருமண விசேஷங்களுக்கு சென்று வந்த அசதியில் சுந்தர் தன் வீட்டு திண்ணையில் அப்படியே படுத்து உறங்கி விட்டான். அப்போது சுந்தரின் வீட்டு வழியே வந்த ராஜா, அவன்பக்கம் வந்தான். பக்கம் வரவும் தான் தெரிந்தது சுந்தர் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று . அலைபேசியில் சினிமா பாட்டை ஓட விட்டு அப்படியே அவன் உறங்கி விட்டதாய் யூகித்தான் ராஜா. 


 வெளிச்சம் அதிகம் இருந்ததால் தன் கைகளை குறுக்காக வைத்தாலும் ஏதோ ஒரு வெளிச்சம் அவன் தூக்கத்தை கெடுக்க , அதை மறைக்க வேண்டி தன் அலைபேசியை வைத்து அது விழாமலிருக்க ஒரு குச்சியை முட்டு கொடுத்து நிற்க வைத்திருந்தான் என்பதை அறியாத ராஜாவோ, சுந்தரை லந்து பண்ணுவதற்காக அவன் அலைபேசியை மெல்ல எடுக்க முயல, பதறிப்போய் விழித்தான் சுந்தர். சட்டென்று அலைபேசியை நிற்க வைத்திருந்த குச்சியில் சொருகியிருந்த தேன் மிட்டாயை லபெக்கென்று விழுங்கினான். 

" என்னடா! என்ன முழங்கின? " என்று பயந்தான் ராஜா. அதற்கு சுந்தரோ " தன் வாயை மெல்ல திறந்து " தேன் மிட்டாய்" என்று காட்டினான். " ச்சே! என்னமோ ஏதோ என்று நான் பயந்து விட்டேன். உன்னுடைய விலை உயர்ந்த அலைபேசியை விட இந்த தேன்மிட்டாய் உனக்கு பெரிதாக போய்விட்டதா?" என ராஜா கேட்க , 

" ஆமாண்டா! இப்போதெல்லாம் புதிதாய் வரும் இனிப்பு வகையால் இந்த பாரம்பரிய மிட்டாய்கள் குறைந்தும் ஏன் ஒரு சில மிட்டாய்கள் அழிந்தும் போய்விட்டன என்பது உனக்கு தெரியும் தானே! இதுவும் போன மாசம் நம்ம சசி பொண்ணு கல்யாணத்துல தாம்பூல பையில போட்டு கொடுத்தாங்க இல்ல. அதை பத்திரப்படுத்தி வைத்து சாப்பிடுகிறேன்" என்று சொல்லவும் இவன் என்ன பைத்தியமா என எண்ணினான் ராஜா. அவன் முழியை பார்த்ததும் சுந்தர் தொடர்ந்தான். " நம் பள்ளி பருவத்தில் இதை நாம் சாப்பிடாத நாள் இல்லை. இன்னும் கல்கோணா , கமர்கட்டின் சுவை எல்லாம் நினைக்கும் போது வாயில் உமிழ்நீர் சுரக்கிறதே. ஒன்றிரண்டு காசாக சேர்த்து வைத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரின் முறை என வைத்து நாம் இதை ருசித்து சாப்பிட்டு இருக்கிறோம். அதையெல்லாம் மறந்து விட்டாயா? " என கேட்க, சுந்தரின் அலைபேசியை தூக்குவதற்கு பதிலாக இந்த தேன் மிட்டாயை எடுத்திருக்கலாமோ என்று மனதிற்குள் நினைத்தான் ராஜா.


தற்போது புதியவை எவை வந்தாலும் அதை நாம் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் பழயவை சிறந்தவை என்றால் அவைகளை சுவீகரிப்பதில் நமக்கு சந்தேகம் ஏன்?

Thursday, May 29, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


தனிமையில் ஓர் தவிப்பு

இணையும் போது

உள்ள ஆனந்தம்

அவன் தன்னை விட்டு போன பின் தனக்கு சொந்தமல்ல

என்றும் எவரும் நிரந்தரமல்ல என்றும் 


வெளிச்சத்தில் உணரும் ஓர் இருண்ட மனம்


புற இருளும் அக இருளும் மறைய 

வேண்டுமெனில் சூழல் மாற வேண்டும்

- Veena Shankar 

Monday, May 26, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 


மண்ணை பிளந்து இதயத்தை தொட்ட மலர்கள்

காண்பதற்கு அருமை

கண்களுக்கு ஆளுமை

மனதிற்கு குளுமை


 நேர்த்தியாய் பராமரிக்கப்பட்ட ஓர் ஓவியம்

மண்ணுக்கும் விண்ணுக்கும்

காட்சியாய் 

அதன் சிறப்புக்கு சாட்சியாய்


 மண்ணை பிளந்து வந்த விதை

கண்ணுக்கு அழகோவியம் அதன் பசுமையில்

பசுமை மாறி உதிர்ந்தாலும் தன் வாழ்விற்கு அர்த்தமாய் 

விட்டு செல்கிறது மீண்டும் பல விதைகளை

- Veena Shankar 

மனதில் தொலைத்ததை

 மண்ணில் விதைத்து அழகு

 பார்க்கிறோம்!

மண்ணில் தொலைத்ததை

 எங்கே விதைத்து மனிதம்

 தேடுவோம்!

மனிதனை ஆளுவதை விட

 மண்ணை ஆளுவது மேல் என்று

அழகுசின்னம் ஆன இதயம்!

எல்லையில்லாமல் படர்ந்து

 செல்லும் அழகு கொடியை மலர்

 வளையம் ஆக்கிய இதயம்..

- Vidhya Nivash 


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 

என்பது போல மனிதருக்கு மட்டுமல்ல 

எங்களுக்கும் அன்பின் வெளிப்பாடு 

இதயம் வழியே......... 


--பிரியா

Saturday, May 24, 2025

செல்ல அம்லு by Veena Shankar


 

செல்ல அம்லு


பஜாரில் உள்ள முக்கிய கடையுள் ஏறி இறங்கி விட்டாள் நித்யா. அவள் தேடிய பொருள் கிடைக்கவில்லை. "பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது மட்டும் தான் வாங்கி வைப்போம். அதுவும் தேவைக்கு மட்டுமே. முன்பெல்லாம் ரொம்ப டிமாண்ட் இருந்துச்சு, இப்ப எல்லாம் நோட்டு புத்தகத்தில் தானே எழுத வைக்கிறாங்க" என்ற பதில் கடைக்காரரிடமிருந்து வந்தாலும் அவள் தன் தேடலை கைவிடவில்லை. இன்னும் சில கடைகளில் விசாரிக்க, கடைசியாய் ஒரு சிறிய கடையில் அவள் தேடியது தொங்கிக் கொண்டிருந்தது. ஆம். அவள் தேடிய சிலேட்டும் அதன் இணை பலப்பமும் கிடைத்தது. அதை வாங்கி கொண்டு எல்லை இல்லா ஆனந்தத்தோடு வீட்டிற்கு வண்டியை விரட்டினாள். 


மறுநாள் காலை சரஸ்வதி பூஜை என்பதால் அன்றே தன் புத்தகத்தோடு தான் வாங்கி வந்த சிலேட்டையும் வைத்தாள். 


மறுநாள் சாமிக்கு பூஜை செய்து முடித்ததும் அவள் செல்ல அம்லுவை சாமி முன் உட்கார வைத்து, கையில் சிலேட்டையும் பலப்பத்தையும் கொடுத்து முதலில் அதை சரியாக பிடித்துக் கொள்ள செய்தாள்.


ஆனால் அம்லுவோ அதை பிடிக்க திணறினாள். பின் நித்யா தானே அம்லுவின் கையை பிடித்து அந்த சிலேட்டில் "அ,, ஆ...." என்று எழுதினாள் . எழுதி எழுதி வடிவம் மாற அதை அழித்து மீண்டும் எழுதி கொடுத்து தானாகவே அம்லுவை எழுத பழக்கினாள். இது எழுதி முடிப்பதற்குள் அம்லுவுக்கு தூக்கம் தூக்கமாய் வந்தது. இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் தமிழ் எழுத்துகளை எழுதினால் மட்டுமே தான் புதியதாக வாங்கி வைத்திருக்கும் நோட்டு புத்தகத்தை தருவதாக அம்லுவிடம் சொல்லியிருந்தாள் நித்யா. சரியென்று தலையாட்டி கொண்டே படுக்கையில் சாய்ந்தாள் அம்லு.


நித்யா நினைத்தது போலவே அவள் முயற்சியால் தமிழ் எழுத்து பயிற்சி இனிதாய் சிலேட்டில் முடிந்தது. நோட்டில் எழுதுவது என்றால் அம்லுவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் முதலில் நோட்டில் எதையும் சரிவர எழுத முடியாமல் சற்றே திணறித்தான் போயிருந்தாள் அம்லு . அதற்காக தான் சிலேட்டில் எழுத பயிற்சி கொடுத்தாள் நித்யா. மறுநாள் புது நோட்டில் எழுதப் போகிறோம் என்ற குஷியில் டி வி முன் அமர்ந்திருந்தாள் அம்லு.  


அடுத்த நாள் அந்த புது நோட்டில் சில வார்த்தைகளை முன்னமே எழுதி வைத்து அதை அம்லுவிடம் கொடுத்து எழுத சொல்ல, அதை அம்லுவும் ஆசையாய் வாங்கி எழுத தொடங்கினாள். நித்தம் இரண்டு பக்கங்கள் அம்லு எழுதி நித்யாவிடம் காண்பிக்க, வார்த்தைகள் வாக்கியங்களாய் மாறி, பத்திகளாய் உருப்பெற்றது. அம்லுவின் விரல்களும் சற்று பலம் பெற்றதாய் உணர்ந்த நித்யா, மேலும் அவளுக்கு சிறு சிறு கணித பயிற்சியும் கொடுக்க ஆயத்தமானாள். அம்லு எழுத எழுத நித்யாவின் கண்கள் பனித்தன .


பெண் கல்வி முடக்கப்பட்ட அந்த காலத்தில் எதையும் துணிச்சலாக எதிர் கொண்டு, பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவள் தான் இந்த செல்ல அம்லு. எத்தகைய விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தவள். 


ஆம். நித்யா படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்த இரு வருடங்களிலேயே அவளுக்கு பிரமோஷன் கிடைக்க அந்த நேரத்தில் அவள் செல்ல அம்லு அம்மா, ஒரு விபத்தில் சிக்கி, மீண்டு வர முடியாத அளவிற்கு பக்கவாதத்தில் விழ, ஏற்கனவே தந்தையில்லாமல் தன்னை தூக்கி வளர்த்து ஆளாக்கிய தாயை விட எந்த வேலையும் தனக்கு பெரிதல்ல என உணர்ந்து அதை உதறி, சிறு இட்லி கடை ஒன்றை வீட்டிலேயே ஆரம்பித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தாயையும் கவனித்து வந்தாள் நித்யா. 


ஒரு நாள் நித்யா தனக்காக இப்படி இருக்கிறாளே என்று நினைத்து கண்ணீர் சிந்தி, தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்லு மெல்ல தன் கை கால்களை அசைக்க, அதை கவனித்த நித்யா, அன்றிலிருந்து தன் அம்மாவிற்கு சிறு சிறு பயிற்சிகள் கொடுத்து தற்போது அவள் நோட்டில் எழுதும் அளவிற்கு கொண்டு வந்து விட்டாள். 


நித்யா போல் மகள் அமைந்தது தன் அதிர்ஷ்டம் என அம்லு மனதில் அவ்வப்போது சொல்லி வந்தாள். உண்மை தானே? தன் அம்மாவிற்காக தன் வேலையை கூட விட்டு தன் படிப்பிற்கு சற்றும் சம்பந்தமில்லாத வேலையை தற்போது பார்க்கிறாள் நித்யா.  


எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்? பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு திசைக்கு ஒருவராக பொருள் ஈட்ட சென்று, பொருளில் அன்பை தொலைக்கும் காலமு ம் இதுவே .


தேவைக்கு மீறிய எவையும் எப்போதும் எங்கும் ஆனந்ததை கொடுக்காது என்பது உறுதி.

படமும் கருத்தும் by Veena and Vidhya



  உதாசீனப்படாமல் கரங்கள் 

தன்னிச்சையாக செய்யும் செயல்

உதவிக் கரம் வேண்டியவர்களுக்கு கொடுப்பதும்

அதை பெறுவதுமாம்


 கையில் கிடைப்பவை யாவும் அதன்

 அடைக்கலம் என்று நினைத்து விட்டால் 

பற்றிக் கொள்ள கையில் இடமிருக்காது


கரம் கரன்சியை பற்றிக் கொண்டாலும்

சில நேரம் கரன்சியும் 

கரத்தை விட்டு விலகி விடும்

எதிலும் உண்மை இல்லாத இடத்தில்

-Veena 

நம் கையில் இல்லை அது

அதன் கையிலே நாம்..

நம்மை காட்டும் அடையாளம்

உலகில் அது இருப்பவனை விட

 இல்லாதவனே சுதந்திரமானவன்

இருந்தாலும் அது இல்லையேல் 

எதுவும் அசையாது!

- Vidhya 



Tuesday, May 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எதுவும் உடைந்த பின் ஒட்டாது, உயிர் கொடுக்காது

உயினத்தின் முட்டையைத் தவிர

 முட்டையை சிதைத்து வெளி வந்த பறவை

பின்னொரு நாள்

தாகத்திற்கு தண்ணீர் தேடியது

போது கிடைத்தது அது பிறந்த முட்டை ஓட்டில் 

இருந்த மழை நீர்

- Veena 

சின்னஞ்சிறு கருவில் உருவான

 உயிர்,முட்டையில் உடலை

 வளர்க்க,சரியான தருணத்தில்

 உடைந்தால் இன்னொரு

 உயிர்,இல்லையேல் பாதியில்

 அழிவும் நிலை!

பிறந்தவுடன் எடுத்த புகைப்படம்,

இதிலிருந்து தான் வந்தேனா?

- Vidhya 

 

Monday, May 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 உருவ வலிமை பெரிதல்ல

சூழ்நிலைக்கேற்ப திறமையே சிறப்பு


 வாழ்வு எனும் ஓட்டத்தில் முன் பின்

இருந்தாலும் ஓட்டம் என்பது மாறாது


 ஒருவர் உண்பதை இன்னொருவர் விரும்பார் 

ஒருவரின் வலிமை இன்னொருவர் அறியார்

ஒருவரின் குணம் இன்னொருவர் மதியார்

ஏன் இந்த ஓட்டம்?

பசி ஒன்று உயிரை மாய்த்து விடும் 

பட்டினிக் கிடந்தால்

இல்லை

மாய்க்க வைக்கும் அடுத்தவரின் உயிரை

பட்டினிக்கு இரையாக

 ஓட்டம்.

வயிற்று பசி ஓட்டத்தில் வேகம் இல்லை உயிர் பசி ஓட்டத்திடம்.


 எதற்காக ஓட்டம்?

பசிக்காகவா?

ருசிக்காகவா?

வீரத்திற்காகவா?

வாழ்விற்காகவா?

பயத்திற்காகவா?

- Veena

வேட்டையில்  விரைவு

இரையின் விவேகம்

எது முந்தும்

ஒன்று உடலை வளர்க்க 

மற்றொன்று உயிரை காக்க 

வெல்வது உயிர் வாழும் !

- Vidhya 




Saturday, May 17, 2025

சமையற்கட்டு by Veena Shankar

 


சமையற்கட்டு 


இவர் கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். இனி வேலைக்கு போக வேண்டாம் என்று. கேட்கிறாரா இந்த மனுஷன். இத்தனை நாள் பிள்ளைகளுக்காக என்று ஒடினோம் . இனியாவது கோயில் குளம் என்று போய் வருவோம் என்றும சொல்லியாச்சு . பிள்ளை சம்பாத்தியமும் இவர் சேர்த்து வைத்த சொத்தும் போறாதா என்ன? 


நல்லா இரண்டு மூணு நாள் ஊர சுத்திட்டு வந்து வயிறு சரியில்லை, கால் வலிக்கிறது என்று பறந்தால் பக்கத்தில் இருக்கும் நான் ஜடமா? அவருக்கு பாடு பார்க்க வேண்டி தானே இருக்கு. தைலத்தை போடுவதும் கடும் டீ போட்டு கொடுக்கிறதும் என எனக்கும் சேர்த்தே வேலை வெச்சுடறாரு. பையன் கல்யாணமாகி வெளிநாட்டுக்கு போனதும் பொண்ணுக்கும் வரன் பார்க்க ஆரம்பிச்சோம். ஆனா இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் நாம் சொல்றத எங்கே கேட்கறதுகள். மேலே படிக்கணும் மேலே படிக்கணும் ன்னு சொல்லி வயசை அதிகமாக்கிடுதுகள். அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை நம்மை இழுக்க அது எங்கே புரியறது? இவர் ஆபீஸ் வேலைன்னு போக பொண்ணு படிக்க போக, நான் மட்டும் தனியா டிவி பார்க்க முடியுமா? செல் போன் வேற வாங்கி கொடுத்துருக்கா? அது என்ன எனக்கு துணையாவா இருக்கு. சொல்லப்போனால் வெறும் தண்டம் தான் அது நல்லது இருந்தாலும் அதுல கெடுதல் தான் அதிகம். எல்லாமே போர் அடிக்கறது.  


எல்லாம் என் தலை எழுத்து. சரி , நீங்க ரெண்டு பேரும் இருக்குறதால தான் நான் நிம்மதியா இருக்கேன் என சொல்லிக் கொண்டே சமையல் அறைக்கு போய் ஒரு கையில் கரப்பான் பூச்சி மருந்தையும் மறு கையில் துடைப்பத்தையும் ஏந்தி கரப்பானையும் எலியையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தாள் கமலா. என்னதான் எலியை ஒழிக்க பல மருந்துகள் கண்டுபிடித்திருத்திருந்தாலும் அதை அவள் கையால் பிடித்து கொல்லுவது கமலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் வீரா வேசத்தை காட்டும் இடம் சமையற்கூடம் மட்டுமே. ஒன்று ருசியாய் சமைத்து போடுவது, மற்றொன்று ருசியில் மயங்கி தினமும் இரவில் சாப்பிட வரும் அவைகளை கொன்று குவிப்பது. 


பசியில் ருசியறியாது , அதனால் உயிர் போவதும் தெரியாது.

Friday, May 16, 2025

நெகிழி என்னும் நான் by Veena Shankar

 


நெகிழி என்னும் நான்


ஓர் ஆலையில் பல வடிவங்களில் என்னை தயாரித்து அழகாய் அடுத்த ஆலையிடம் விற்று விடுவர். அவர்கள் ஆலையில் தயாரானவற்றை என்னுள் அடக்கி விடுவர். பிறகென்ன அங்கே உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் நான் இடம் பெயர்ந்து செல்வேன். அப்போது எனக்கே என் மீது பொறாமை வரும். எத்தனை பேர் என்னை பயன்படுத்துவார்கள் என்றெண்ணி. மேலும் அங்கே என் மீது அவர்களின் விலாசம் அது இது என்று பலவற்றையும் ஒட்டியும் எழுதியும் என்னை அட்டைபெட்டியில் அடைக்க தயாராவர். அதில் இருக்கும் வரை நான் நன்றாக தான் இருப்பேன். என்னுடன் சேர்ந்து பிறந்தவர்கள் எல்லாம் திசைக்கு ஒருவராக பிரிந்து செல்லும் போது வருத்தமாக தான் இருக்கும்

வெவ் வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றாலும் கடைகளில் எனக்கு எல்லாம் தனி மரியாதை தான். என்னை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தாங்குவர் . தாகத்தோடும் என் சுவையில் மயங்கியவரும் மீண்டும் மீண்டும் என்னுள் இருக்கும் நீரையோ பானத்தையோ அருந்தும் போது பெருமையாக இருக்கும். அதுவும் கோடைக்காலம் என்றால் என் மவுசு தனி தான். இதுவரை சொகுசாகவே பயணப்பட்டு வந்த நான் மக்களின் தாகம் தீர்த்த பின் வீதியில் என்னை எறிவது தான் எனக்கு அவர்களிடம் வெறுப்பை உண்டு பண்ணுகிறது. சரி , நான் பயன்பட்ட பிறகு எறிய வேண்டியவன் தான் என்றாலும் ஓர் குப்பை தொட்டியில் போட்டால் குப்பையோடு குப்பையாக சேர்ந்து விடுவேன். மற்ற குப்பைகளோடு என்னை தரம் பிரித்து ஒதுக்கி விடுவர். ஆனால் இந்த மக்களோ என்னை விளையாட்டு பொருள் என்று நினைத்து கழிவு நீர் ஒடையிலும் சாலையிலும் எறிந்து விடுவதால் கழிவு நீர் ஓடை அடைத்து கொசுக்கள் உற்பத்திக்கு வழி செய்கிறது. சாலையில் வீசப்படும் நான் வாகனங்களில் மாட்டிக் கொண்டு 'சரட் சரட் ' என்ற சத்தத்தோடு பந்தாடப்படுவேன். ஆனால் நடந்து செல்வோர் என்னை சற்றே கையில் அல்ல காலால் என்னை ஓரப்படுத்தினாலும் நான் ஏன் என்று கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் அழகான என் உருவம் அழிந்து போவது எனக்கு சற்று வருத்தமே. என்னை வடிவமைத்தவரை எண்ணும் போதும் மனம் சங்கடப்படுகிறது. ஆம். இப்போது உள்ள நிலையில் என் உருவத்தில் புதுமையை புகுத்தினால் மட்டுமே மக்களால் நான் ஈர்க்கப்படுவேன். அதற்கு எனை உருவாக்கியவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது இந்த மக்களுக்கு எப்போது புரியப் போகிறதோ? இன்னும் என்னை உருவாக்காமல் இருந்தால் உசிதமே. ஏனெனில் என்னுள் அடைத்து வைக்கும் பானத்தில் நான் உருவாக்கப்பட்ட விதத்தில் சில பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து அது மக்களுக்கும் போய் சேரும் போது தீங்கு விளைவிக்க கூடும். எனவே என்னை தவிர்த்து பழைய முறையை கையாண்டால் படிப்படியாக என் தேவை குறைந்து போகும். அதனால் உற்பத்தி குறைந்து நான் அழிந்தே போவேன். என்னாடா, எல்லோரும் வாழ நினைக்கையில் நான் மட்டும் அழிய நினைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதற்காக நானும் அப்படியே இருக்க முடியாதல்லவா! சில நாட்கள் வாழும் எனக்கே இது தவறு என்று தோன்றுகிறது. மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு நான் சொல்கிறேன் .


ஒன்று அழிய அங்கே மற்றொன்றுக்கு வழி பிறக்கும். புதுமை பிறப்பது வேண்டும் பழமை அழியாமல், பிறருக்கு தீங்கு இல்லாமல்.


இப்படிக்கு


உங்கள் நெகிழி

Thursday, May 15, 2025

கண்ணாடியே by Akhiladevi Kumaran



கண்ணாடியே!

நீ உடைய,

 உருவம் சிதறியது...

 கால், கைகள் பதறியது...

 உன் வில்லைகள் ரத்தத்தை சீண்டியது...

சுவரில் இருக்கும் போது, அழகு காட்டுகிறாய்! 

தவறி இறக்கும் போது, இத்தனை ஆர்ப்பாட்டமா?! 

பலே கள்ளி நீ!

அழகை ஈர்த்து, அழகு பெறுகிறாய்‍! ‍ 

கவனம் அளித்தால், கனிவு..

கவனம் தவறினால், பிரிவா? ‍

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நெருப்பில் பிறக்கும் வேட்கையும்

சிரிப்பில் பிறக்கும் ஆனந்தமும்

வெறுப்பில் பிறக்கும் வார்த்தையும்

தவிப்பில் பிறக்கும் வேட்கையும்


 வெறுப்பில் உள்ள மனம்

நெருப்பை தேடுவதும் உண்டு

இன்னுயிர் மாய்க்க

தன் முடிவை செயல்படுத்திய பின்னே

அறியும் செய்தது தவறு என்றெண்ணி

பொலிவு இழந்த உடலோடும்

களையிழந்த மனதோடும்

வாழ்வது சிரமமே

தேவையில்லாதது மனதில் அடைந்தால்

அதுவும் என் செய்யும்?

பகிர ஆள் இல்லாத மனமும்

தன் ஆழ் மனதில் உதிக்கும் நினைப்போடு தன்

நிகழ்காலத்தையும் தொலைத்து

எதிர்காலத்தை பற்றுவது ஏன்?

திருந்து மனமே!

நெருப்பு என்றும் உஷ்ணம் உமிழும்

நம் தேவையில்லா வார்த்தை போலே

எண்ணமும் செயலும் ஒன்றாக

கலங்கும் கண்களை

துடைத்திடு 

உன் சிரிப்பாலே!

புன்னகை ஒன்றே ஆயுதம் 

கலங்கிய நீரை தெளிய வைக்கும்

படிகாரக் கள் போலே

-Veena 

நெருப்பிடம் விளையாடதே அது

 உன்னை விழுங்கும் பேய்!

தொட்ட இடம் எல்லாம்

 பற்றிக்கொள்ளும் ,அது போல்

 அலைபாயும் எண்ணத்திற்கும்

 இரையாகதே அது உன்னை

 விழுங்க காத்திருக்கும் நெருப்பு

அதன் முன் அனைத்தும்

 சாம்பலாகும்.

- Vidhya 

Monday, May 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஈவதும் பெறுவதும் பெருமையே அன்றி

சிறுமையில்லை ஆங்கே

ஈபவரின் உள்ளத்தினூடே பிறக்கும் ஞானத்தால்


 பெறுபவர் குறைந்தால்

கொடுப்பவர் குறைவர் 

கொடுப்பவர் குறைந்தால்

பெறுபவர் நிறைவர் 

குறையும் நிறையும் ஒன்றானால்

சமரசம் என்றும் வாழ்வில்

- Veena 

இதை தான் பாத்திரம் யோசித்து பிச்சை எடு என்று சொல்வாரோ! யாசிப்பதிலும் யோசிக்க வேண்டும்!

 நானும் உன்னை போலே இருப்பதை பகிர்ந்து கொள்வோம்,காலியிடமே நிரம்பின, நிறைவில் நிறைவடைய முடியுமா!

கொடுப்பதிலும் பல வரையறை வைத்திருப்பவர் இடம் பெறுபவதில் பலனில்லை!

எதிர்பார்ப்பு இல்லா கொடுத்தலும் பெறுதலுமே வளரும்! 

- Vidhya

படமும் கருத்தும் by Jeyabaskar

  


சிலரால் மனது உடை படும் போது முகத்தில் தெரியுது மனசு உடைந்த கோரம்.🫥


 புற அழகை காட்டும்‌ கண்ணாடி காட்டுவது இல்லை மனதில் உள்ள அழகை.😍


 சுக்கு நூறாக உடைந்தது கண்ணாடி அல்ல கண்ணே .....நீ இருந்த என் மனசு.தெரிந்தும் வருந்தினாய் உடைந்த கண்ணாடிக்கு மட்டும்.

Friday, May 9, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


உயிரோட்டத்தின் மூலத்திற்கு முன்னே

இரு உடல்களின் சங்கமம் அமைதியாய்


இருவர் தாங்க ஓர் இதய வாசல் போதுமோ?

ஆம். இருவரின் எண்ணங்கள் ஒன்றான பின்

எதுவும் சாத்தியமே!


அழகு எது ?காதலியை அணைப்பதா?

இல்லை

அவளை தன் இதயத்தில் தாங்குவதா?

குருதிகளின் வகையும்

மனிதனின் இனமும் வெவ்வேறானலும் 

உடலில் உணர்வது காதல் எனும் கருவியே!

Thursday, May 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கடலின் ஆழமென்ன

புயலின் வேகமென்ன

அலையின் சீண்டலென்ன 

வாழ்வில் உயிரென்ன

துணையின் துணிவில் 

ஓர் மரத் தக்கையின் பலத்தில் 

ஒட்டு மொத்த இன்னல்களின் 

காட்சியே படமாய்

அலைபேசியில்


அளைல் மிதந்த போதும்

நிலையான காதல்

அரங்கேறும் வேலை

அடுத்த நொடியின் வாழ்வு

தெரியாத போது

இந்நொடிக்காக வாழ்ந்து, மகிழ்ந்து 

இருக்கும் மனமே அருமை


 மிதவை கப்பலிலிருந்து வெளி வந்த 

மிதக்கும் உயிர்கள்

வளியின் வேகத்தை

உணர்ந்தே வழி தேடின

விழி மூடினாலும் 

வலி போவதில்லை

உயிர் மிதக்கும் வேளையிலும்

ஓர் அற்ப சந்தோசம்

அலைகளின் நடுவே

அலைபேசியில் பேச்சிற்கு ஊடே

- Veena 

சாவைக்கூட விட்டுவைக்காமல் செல்ஃபி எடுக்கும் நேரம்..

கவிழ்ந்த கப்பலும் நானும் வரேன் என்று வேகமாக வர.. முறிந்த காதல்! வெள்ளம் வந்து அடித்து சென்றது!

- Vidhya 

Wednesday, May 7, 2025

படமும் கருத்தும் by Jeyabaskar



 கண்ணே நீ இருந்த என் இதயம்நீ விலகிச் சென்றதும் தற்கொலை செய்தது‌ உடைந்த உடைந்த கண்ணாடி 💕

 கண்ணில் கண்டு

இதயம் உள்ளே சென்று 

உறவில் நுழைந்து 

உண்டான காதல் சின்னம்.

- Jeyabaskar

Tuesday, May 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வடிவைத்தை மாற்றும் முகங்கள் பல

வடிவம் மாறும் வரை புண்படுத்தும் மனிதர் பலர்

நிஜம் இழக்க கற்பனையில்

ஓர் வாழ்வு காணும் நெஞ்சங்கள் சில

கற்பனையில் கூட ஆனந்தத்தை இழக்க

செய்யும் ஆதிக்க மனிதர் பலர்

உடைவது முகம் மட்டுமல்ல

உள்ளமும் தான்

எதுவும் வீணே அதை 

சமன்படுத்தும் முயற்சியில்

அவமானங்களே அடையாளாமாகிப் போனது

இதுவும் கடந்து தான் போகிறது

காலத்தின் போக்கிலே


 நொறுங்கிய கண்ணாடியில் காணும்

பிம்பமும் நொறுங்கியே காட்டும்

அழகானவர்களோடு பயணிக்க நம் பயணமும் இனிமையே

- Veena 

நொறுங்கிய கண்ணாடியில்

 விழும் ஒவ்வொன்றும் பலவாக

 பிரதிபலிக்க,அதில் தெரியும்

 பிம்பம் பல கோணத்தில் சிரிக்க,

 எதையும் கவனமாக கையாள..

 விரிசல்கள் விழாமல்,விழுந்தால்

விலக பழகாமல்,நொறுங்கியதை

 ஒட்ட முயற்சித்தால் அது வீணே! 

- Vidhya 

Monday, May 5, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கரத்தில் தாக்கிக் கொள்ள இது பனிக்கட்டியல்ல

இதயத்தை இதயத்தால் தாங்குவதே சிறப்பு


 மூடினால் சுருங்கி விடும்

விரித்தால் உருண்டு விழும்

காட்டினால் துடிப்பு வரும்

வெட்டினால் பிளந்து போகும் 

தாங்கினால் காதல் தரும்

தூங்கினால் அமைதி பெறும்

கையடக்க இதயம்

வாயடைக்க வைக்கும் காதல் மொழி பேசி

தாங்குவதும் அதை தாக்குவதும்

அடுத்தவரின் பொறுமை குணத்தாலே

சதி கொண்டும்

சாதி என்றும் சொல்லி பிரிக்கும் மனத்தாலே

இதயமும் மணம் இழக்குமே


 இதயத்தின் நிறமோ சிவப்பு

அதை தாங்கும் கரமோ வெளுப்பு

துவண்டு போனாலும்

அதை காக்கும் மனமோ சிறப்பு

என்றும் அன்பின் அடையாளத்திற்கு போட வேண்டாம் தடுப்பு

பகிர்வது பகிராமல் போனால் அங்கே தவிப்பு

கொஞ்சுவது கெஞ்சும் வரை போனால் 

மிஞ்சுவது வெறுப்பு

அதனால் வருவது தவிர்ப்பு

இணைந்து வாழவே வேண்டும் இதயங்களின் பிணைப்பு

- Veena 

அன்பை பரிமாற ,சின்ன கைகுலுக்கல் மூலம் இதயத்தை திருட, ஒத்த உணர்வுக்கள் சிறு உரசலில் தொடங்கும்..

- Vidhya 

Friday, May 2, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


பெண் மயிலின் மையலால்

உருவான மயில் இது

தலைமயிர் தவழும் இடத்தில்

ஓர் ஆக்கிரமிப்பு சத்தமில்லாமல்

அடுத்த பெண்டிரின் கயல் விழிக்கு புதிதாக

ரசிக்கும் ஆடவரின் பார்வைக்கு பரிசாக

நிஜ மயில் தோகை விரிக்க மறுக்க

குலமயில் இடம் கொடுக்க

கற்பனையில் உதித்த

சித்திரத்தில் உருவம்

உயிர்பெற்றது புற முதுகில் 

நாகரிகத்திலும் நளினம் வெளிப்பட்டது வெளியிலும்

வேலைபாட்டிலும்


அழகு பெண் மயில் கூந்தல் முடிய

ஆனந்த மயில் நான் தோகை விரிக்க

இன்றளவும் மயில் பெண்ணை கவர

ஈதென்ன உறக்கம் என காளை விழிக்க

உன்னால் அரங்கேற்றிய கலையை 

ஊரறிய காட்டுவேன் பகட்டை நானும்

என்னாலும் எந்நாளும் முடியுமே

ஏடு கூட மேடை ஏறும் தானே என்ற

ஐயப்பாடு கூட இல்லாமல்

ஒட்டியே பிணைந்தேன் கன்னியின் பின்னாலே பின்னலை 

ஓரமாய் தள்ளி விட்டு

புறமுதுகு காட்டினாலும் வெற்றி என்பது என் வசமே

Thursday, May 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 



 நகைப்பு இப்போது

 இறந்த பின் மட்டுமே

மலரும்


 ஏதும் சரியாக இல்லாத போது

இதழில் மட்டுமே

புன்னகை உண்டெனில்

இறப்பே சிறப்பு


புவிக்கு மேல் இருந்து

தான் அடைந்த துன்பத்தை நினைத்து

பூமிக்கு அடியில் புதையுண்ட உடல் சொன்னது

"அமைதியும் சிரிப்பும் உண்டு இங்கே எவரும் தனிமைபட்டதால்"

- Veena 

சிரித்த முகத்துடன் இறப்பது

 என்பது ஆசிர்வாதம்,

மனநிறைவுடன் எந்த

 எதிர்ப்பார்ப்பும்

 இல்லாமல் நாட்களை

 எண்ணாமல்,நாட்களை

 தள்ளிப்போடாமால்,இயற்கையா

ன மரணம் புன்னகையுடன்

 முடிந்தால்  எவ்வளவு சிறப்பு!

பிறப்பின் அடையாளம் அழுகை

 குரல் ..

இறப்பின் அடையாளம் ஏன்

 சிரிப்பாக இருக்க கூடாது?

எலும்புக்கூடு என்றுமே

 நகைச்சுவையானது அல்ல

 நமக்கான அடையாளம்,அது

 இல்லையேல் எதுவும்

 சாத்தியமில்லை.

- Vidhya 


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...