உடலால் சிறைப்பட்ட
மனம் வெளிச்சத்தை
கண்டவுடன்
நாணுகிறது
ஏங்குகிறது
புது உறவிற்காக
நிரந்தரமாய் தன்னை
கொள்பவன் எவனோ
அவனிடம் அடிமைப்பட்டு நிற்க
சிறையில் அடைந்து கொள்ள
காதல் ஓர் ஆயுதமல்ல
எவரையும் தன் வயப்படுத்த
ஓர் உணர்வு அது
இது நாள் வரை
கண்டது காதல் அல்ல
உணர்வும் அல்ல
அங்கங்களின் சங்கமம் தானே!
மனங்கள் சங்கமிக்க
வாய்ப்பும் இல்லை
தேவை முடிந்த பின்
எதுவும் பெரிதில்லை
இருட்டும் பகலும் ஒன்றே!
கட்டிலும் சல்லாபமும் ஒன்றே!
இன்பம் பெறும் மனிதர்களை தவிர
கையில் பணத்தோடு
வருபவன்
தாலியோடு வந்தால்
அவள் மனமும்
ஏற்காதா என்ன?
வலியோடு பிறக்கும் தாகம் தீர்க்க
வழி உண்டு இங்கே
வாயில் வரை மட்டும்
இன்றோ பிறந்தது
நாளைய மறைமுக
தேவைக்காக!
- Veena
கண்களை மூடி நினைவை அசை
போட வரும் சிரிப்பு ,மழை நின்ற
பின் சொட்டும் நீர் தேனை போல்
அழகு,நாணத்தில் சிவக்கும்
கன்னங்களை போல் அழகு,
மொட்டு அவிழ்க்கும் இதழை விட
அழகு அவள் சிரிப்பு ..
- Vidhya

No comments:
Post a Comment