Wednesday, November 5, 2025

யார் அறிவாளி? - கதை by Veena Shankar

 


யார் அறிவாளி?


"அம்மா! இந்தா, புது விளக்குமாறு" என்று தான் கடையிலிருந்து வாங்கி வந்த வீடு கூட்டும் விளக்குமாறை காண்பித்தான் சுடலை. அவன் காண்பித்ததை மேலும் கீழும் பார்த்த அருக்காணி , " என்னடா இது? பிஞ்சு போன விளக்குமாறை காண்பிச்சி புதுசுன்னு சொல்லுறியே "? என்று கேட்க , "நீதான் சொன்னே கடையிலே விளக்குமாறு வாங்கினா மட்டும் பத்தாது, நல்லா பெருக்குதான்னு பார்த்து வீட்டிற்கு கொண்டு வா ன்னு , அதான் இதை வண்டிக்கு பின்னால கட்டி ரோட்டை பெருக்கிட்டே வந்தேன். பின்னாடி பாத்திட்டே வந்தேன் ரோட்ல ஒரு தூசியும் இல்லை. நான் எவ்வளவு அறிவாளி பார்த்தியா. இன்னும் கடைக்காரனுக்கு காசு கூட கொடுக்கல, நம்ம சின்னா கடையில தான் வாங்கினேன். நாளைக்கு நீ அந்த வழியா போகும் போது காசு கொடுத்துடு" என்று சொல்லி பிய்ந்து போன விளக்குமாறை அம்மாவிடம் ஒப்படைத்து பறக்க முயல, "அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கிற, அன்னிக்கி உன் அப்பன்ட்ட தீக்குச்சி நல்லா எரியுதான்னு பார்த்து வாங்கி வான்னு சொன்னா அவன் எல்லா தீக்குச்சியையும் எரித்து, எரிந்து போன தீக்குச்சிய டப்பால அடைச்சி கொண்டாந்தான். என்னானு கேட்டா தீக்குச்சி நல்லா எரியுதான்னு பார்த்து வாங்க சொன்னதால எரிச்சு பார்த்து கொண்டாந்தேன் ன்னு சொல்றான். எல்லாம் என் தலையெழுத்து . " என சொல்லி தனக்கு வாச்சதையும் பிறந்ததையும் நினைத்து சலித்து கொண்டே சுடலையை நைய புடைக்க அதே பிய்ந்து போன விளக்குமாறை கையில் எடுத்தாள் அருக்காணி. 


எதையும் சொல்வது பெரிதல்ல, அதை விவரமாய் விளக்கி சொல்வதே சிறப்பு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...