Tuesday, November 11, 2025

 " உ " வின் பயன்பாடு by Veena Shankar



 " உ " வின் பயன்பாடு


உயிர் கொடுத்தவரை

உணராமல் இருந்தால்

உதாசீனப்படுத்தபடுவாய் 

உன்னுள் பாச 

உணர்ச்சியை உணர்த்திய 

உயரிய செல்வம்

உன் தந்தைக்கு

உண்டி கொடு

உடை கொடு

உயிரும் கொடு 

ஆனால் அவருக்கு

உறைவிடம் மட்டும்

உன் வீட்டில் கொடு 

உதிக்க வைத்தவருக்கு

உறுதுணையாய் இருப்பதே உசிதம்

உயிர் கொடுத்தாலும்

உயரும் வாய்ப்பு

உப்பிட்டவரின் ஆசியால்

உன்னை உளமாற

உணரும் என்றும் இந்த

உணர்ச்சி என்பதை

உலர வைத்த பின்

உயிர் வாழும்

உன் உள்ளத்தில்

உரிய நேரத்தில்

உழைப்பை கையாள

உரிமை பிறக்கும்

உண்ண நினைக்கும் வரை 

உழவும் சிறக்கும்

உண்மையாய் இருப்பதும்

உதிரி பாகங்களாய் 

உடல் ஆன பின்

உதிர்க்கப்படுவதும் உண்டு 

உகுந்த நேரம் 

உண்டு எதற்கும்

உத்தியை கையிலெடுக்கும் வரை

உருவாக்கம் உண்டு

உளி தாங்கும் கல் போல்

உள்ளம் மாறும்

உறுதியாய் உருபெறும்

உவமானத்தில் உள்ள

உண்மை

உவமேயத்தில் உண்டோ?

உதிக்கும் சிந்தனையில்

உதிர்த்த வரிகள்

உருமாறவும் செய்யும்

உற்ற நேரத்திற்கேற்ப

உட்புகுந்து செல்லும்

உத்தம நெஞ்சரின்

உத்தியும் உண்டு

உன்னை உயரம் தொடுவதில் 

உறவாடும் உறவுகள்

உதறி செல்வது ம்

உடன் வருவதும்

உதிரம் உள்ளவரையே

உதிர்ந்த இலைகள்

உள்ளம் தொடா

உவகையோடுள்ள மனது

உன்னதம் கொள்ளும்

உரியவருக்கு துணையாய் உரிமையாய் 

உளமுமாய் இருக்க

உண்டு எதிலும் ஏற்றம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...