Saturday, January 31, 2026

இன்றைய சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை


கண்ணீரும் வெளிப்படுவது அவசியமே , மனம் தன் இயலாமையை பிறருக்கு தெரிவிக்க


அண்மையில் காணும் யாவும் சொந்தமுமல்ல தொலைவில் காணும் யாவும் எதிரியுமல்ல


மௌனத்தோடு வரும் விலகல் நிரந்தரமல்ல


நம்பிக்கை கொள்ளும் வார்த்தையே வாழ்க்கை


பிறரால் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளேன் நான், கவலையில்லா இனம் என்று. இப்படிக்கு புன்னகை


சோதனைகளை தாண்டி சாதனைகள் கொண்டால் வேதனைகள் இல்லை, மனம் பக்குவப்படுவதால்


அழுகை கூட அழகாய் இருக்க வேண்டும் நடிப்பில், சிரிப்பு கூட இயல்பாய் இருக்க வேண்டும் நிஜத்தில்


அறிவாய் இருக்கும் ஒருவன் மடத்தனமாய் பேசுவதை கேட்பதை விட , மடத்தனமாக இருக்கும் ஒருவன் அறிவாய் பேசுவதை கேட்கும் போது அதிலுள்ள பொருளை உணர முடியும்.


எதுவும் தேவையே அது கிடைக்கும் வரை சலிப்பும் வருமே தொடர்ந்து கிடைக்கையில்.


ஒருவருக்கு நாம் செய்யும் உதவி மண்ணில் இட்ட விதை போல


செய்த குற்றங்கள் யாவையும் செய்தவரால் மறுக்கப்படுவதை விட மறைக்கப்படுவதே அதிகம்


எதையும் மறுப்பது எளிது, மறைப்பது கடினம். இருப்பினும் மறைப்பது கூட சில சமயம் எளிதாகும் . அதனால் மறப்பது மட்டுமே மிக மிக கடினம்.


எதற்கும் மறுப்பு சொல்லாதவரை இங்கே எவரும் வெறுப்பு காட்டுவதில்லை. வெறுப்பு கொண்ட பிறகு எவரும் எவரையும் நம்புவதில்லை


இன்பதிற்கும் துன்பதிற்கும் என்றும் ஆரம்பமும் உண்டு, முற்றுப்புள்ளியும் உண்டு. அதன் இடையில் இடப்படும் கோடு அவரவர் கையில்

 எதிரிலிருப்பவர் குரல் ஓங்கியிருக்கும் போது அங்கே ஊமை போல் நடிப்பது கூட ஓர் சவாலான விஷயம் தான்.


 முடியாது என்ற நிலையிலிருந்து முடியும் என்ற செயலுக்கு நாம் இடும் பெயரே முயற்சி


வழக்கமாக தொடரும் நிகழ்வுகள் கசந்து போகும் ஓர் நாள் , அது அல்லாதவை கடந்து போகும் என்றும்


பசி என்பது வேண்டும் வெறும் எண் சாண் வயிற்றுகாக மட்டுமல்ல ஆறு அறிவு வளரவுமே


கல்லை தெய்வமாக வணங்கும் இடத்தில் மனிதன் மனிதனாக கூட மதிக்கப்படுவதில்லை என்பது உண்மையே


அடைபடும் எதனாலும் விடுபட முடிவதில்லை அது பாசமானாலும் சரி நாம் கட்டாயத்தின் பேரில் போடும் வேசமானாலும் சரி


தொட முடியாத எல்லையும் விடை அறியா வினாவும் நம் மனதின் அறியாமையாலே தொடரும் எந்நாளும்


சிரம் தாழ்ந்து அடங்கி போவதால் என்றும் எவரும் வீழ்வதில்லை, ஆனால் பிறரை சார்ந்து வாழ்வதை விட வீழ்வது என்றும் சிறப்பே!


ஒன்று தேவை என்று சொல்லும் போது மனதில் ஆசை பிறக்கிறது என்பதே உண்மை. அந்த ஆசையும் பிறப்பதாலே எதுவும் தேவையாய் மாறுகிறது.


மொழிகளியம்பவே வார்த்தை வார்த்தையியம்பவே நாவு 

நாவியம்பவே தெரியும் அகத்தின் அழகு


      25} நாவினின்று பிறக்கும் வார்த்தையின் ஆழம் அது அறியப்படும் விதத்தில்  

            உள்ளது


      26} ஒன்றன் மீதான மதிப்பு அதன் தேவை உள்ள வரை மட்டுமே!


      27} ஒருவரின் மதிப்பு என்பது பெறுவதில் மட்டுமல்ல , பிறருக்கு  

             கொடுப்பதிலும் அமைவதே சிறப்பு


      28} நம் அறியாமை , பொறுமை இவை இரண்டும் சுயநலவாதிகளுக்கு ஓர் 

            சந்தர்ப்பம்



29) அழுகையும் கோபமும் மட்டுமே உணர்ச்சியின் வெளிப்பாடல்ல, அமைதியாய் இருப்பதும் கூட


30) ஒருவரின் அறியாமை என்பதன் நோக்கம் ஒன்றை அறியாது இருப்பது மட்டுமல்ல, அறிந்தும் அறியாத படி இருப்பதும்


31) உன்னை புண்படுத்தியவர்களுக்கு தெரியாது, அவர்களால் நீ படித்தது வாழ்க்கையின் அனுபவ பாடம் என்று.


32) பொறுமை என்பது ஒரு சிறந்த செயலுக்கான ஆயுதம், அமைதி என்பது விவாதத்தை முறியடிப்பதற்கான ஆயுதம்


33) நாம் பற்ற எண்ணும் பொருளுக்கான பட்டியல் நீளுமானால் அங்கே உழைப்பிற்கான முயற்சியும் நீளும்.


34) "முடியாது "என்பதில் "யாது" என்ற வினாவும் அதை "முடி" என்ற விடையும் உள்ளது.

வாழ்வும் இப்படியே மறைமுகமாய் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது


35) வலை பின்னும் சிலந்தி கூட அதனின்று தான் வெளி வர பாதை அமைக்கும் போது மனிதன் மட்டுமே பல மாய வலைகளிலிருந்து வெளி வர தெரியாமல் தவிக்கிறான்


36) மலரின் புன்னகை வாசம் தரும், மனிதனின் புன்னகை சுவாசம் தரும் வாழ்வு சிறக்க.


37) உருவத்தின் அழகு சிறப்பே, அதனின்று அழகு கொள்வது மனதின் சிறப்பே!


38) ஒன்றன் தேவை இருக்கும் போது அதன் குறைகள் மறையும் என்பதே உண்மை


39) பிறரின் சிரிப்பு நம்மை அனிச்சையாய் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்து தெளிந்து நடக்கவும் செய்கிறது


40) ஒரு செயல் உரு பெற காரணம் முயற்சியோடுடைய தெளிர்ச்சி மட்டுமே


41) மதிப்பு என்பது நம் மதியினால் அடுத்தவர் மதியை ஆட்கொள்ள, அதனால் வெளிப்படும் உண்மை தன்மையால் அவர் நம்மை சிறப்பிப்பதேயாகும்


42) மதிப்பு என்பது நம் மதியினால் அடுத்தவர் மதியை ஆட்கொள்ள, அதனால் வெளிப்படும் உண்மை தன்மையால் அவர் நம்மை சிறப்பிப்பதேயாகும்


43) எதையும் சுமப்பதில் உள்ள வலி அதனால் கொள்ளும் நன்மையை சுவைப்பதில் மறைந்து போகும்


44) அறிவும் அழகும் போட்டி போடும் இடமே உலகம். அங்கே இயற்கையும் உண்டு செயற்கையும் உண்டு


45) ஒருவரின் நிழலை பின் தொடர்கையில் அங்கே ஆபத்து இருக்காது. அதுவே நம் கால்களில் நிற்கும் போது அங்கே எவருடைய ஆளுமையும் இருக்காது.


46) ஏமாற்றத்தை எதிர் கொள்வதை காட்டிலும் எதிர்ப்பார்ப்பை குறைக்க நினைப்பது சிறப்பு


47) பொய் சொல்வதையே தவிர்க்க வேண்டும் . இல்லையெனில் அந்த பொய்யை உண்மை என்று நிரூபிக்க பல பொய்கள் சொல்ல நேரிடும்



48) ஆவலோடு பிறக்கும் நாட்கள் வாழ்வின் நிகழ்வுகளை அசை போட வைத்து விட்டு அனுபவ அறிவோடும் நினைவோடும் நகர்கிறது.


49) வினாவிற்கும் விடைக்கும் இடையே உள்ள தூரம் தான் ஓர் உயிரின் நுண்ணறிவு



50) வாழ்க்கையில் வெற்றி பெற பிறரால் அடையும் வலியை ஏற்று மனதில் வலிமை பெறுவது சிறப்பு

Thursday, January 29, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


மழலை கொடுக்கும் ஸ்தானம் அழகு

அதைவிட

அது கொடுக்கும் சிரிப்பு அழகு

அதைவிட

அந்த சிரிப்பில் நாம்

எதனையும் மறப்பது அழகு

அதைவிட

அந்த மறதியும் என்றும் இருக்க நினைப்பது அழகு

அதைவிட

அந்த நினைப்பும் நம்மில் மறவாமல் இருப்பது அழகு

-Veena

நகையும் நகைப்பும் நாடாத மனமில்லை

பகையும் பறக்கும் நகைப்பில்!


இச்சுவை பெறின்,

தேகமும் உயிர்ப்பு பெறும்..

சோகமும் துவண்டு விழும்..

அகமும் மகிழும்..

முகமும் மலரும்.!


இச்சுவை வேண்டின்,

வேண்டாம் பணம்..

வேண்டாம் நாணம்..

வேண்டாம் பதவி..

வேண்டாம் உதவி..

மனம் மட்டுமே வேண்டும், 

மழலை போலே!

-Akhila 

கள்ள சிரிப்பு கொள்ளை அழகு

பால் போன்ற அவளின் சிரிப்புக்கு

 வான் கூட குடைப்பிடிக்கும்,

 தென்னைகள் தலையசைக்க

மைக்கொண்டு தீட்டிய புருவங்கள்

கண்ணை மறைக்க, முத்து

 சிரிப்பில் தேன் சிந்துதே, ரோஜா பூ

 சிவப்பில் கண்ணங்கள் மிளிர,

 திஷ்டிகழிய இவள் அன்னை

 நெற்றியில் பொட்டு இட்டாளோ !

- Vidhya 

Wednesday, January 28, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


இது போதும் எனக்கு.. இது போதுமே🥰


இனிமையான தனிமை,

மென்மையான இசை,

திகட்டாத தேநீர்,

ஓஷோவின் புத்தகம்...


இது போதும் எனக்கு.. இது போதுமே🥰

-Akhila 


 அறிவில் பாதி

அறியாமல் பாதி

சிந்தனையில் பாதி

வேதனையில் பாதி

தெளிந்தும் பாதி

தெளிவிற்கு பாதி

அசதியில் பாதி

வசதியால் பாதி

அச்சத்தில் பாதி

துச்சத்தில் பாதி

அமைதியால் பாதி

அவதியால் பாதி

வந்தும் பாதி

வாராமல் பாதி

விழித்தும் பாதி

தொலைத்தும் பாதி

மடியில் பாதி

மார்பில் பாதி 

அணைப்பில் பாதி

கசப்பில் பாதி


பாதியில் மீதி

இறப்பின் கதியில்


முதலில் தாய் மடியில் உறங்கிய

அதே அமைதியான

உறக்கம்

கல்லறையில் மட்டுமே

அடக்கம்

- Veena 


பிரபஞ்சமே உறங்கும் நேரத்தில்

நித்திரையில் பூத்த அல்லிக்கு

ஒத்திகை எதற்கு!

ஆடை அலங்காரம் தேவையில்லை

இந்த ஒத்தை பூக்கு மேல் என்ன அழகு!

இதழ்களில் மட்டுமா? இல்லை

 கண்களும் உதிர்க்கும் கனவின்

 காட்சியை காண மெய்சிலிர்க்குதே!

- Vidhya 

Tuesday, January 27, 2026

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


பல வீடுகள் நிறைந்த தொகுப்பு வீட்டில் நான் குடியிருந்த சமயம் அது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசுவதும், எல்லோரும் அண்டை வீட்டினரை மதிப்பதும் அவர்கள் வீட்டு விழாவில் பங்கெடுத்து கொள்வதுமாய் இருப்போம். எவரும் முகம் சுளித்துக் கொண்டு இருப்பது கிடையாது , ஒரு விஷயத்தை தவிர. ஆம். தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் சமயம் கிணற்று நீரை தெளிய வைத்து இறைப்பதில் மட்டும் மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. இருந்தாலும் அதுவும் பூதாகரமாக வெடிக்காது. பனி போல் விலகி விடும். 


அன்று காலை நான் சமைத்து கொண்டிருந்த சமயம் பக்கத்து வீட்டு சிறுவன் வந்து இனிப்பு தட்டை நீட்டி இன்று தன் அம்மாவிற்கு "வெட்டிங் டே" என்றான். நானும் அவனிடமிருந்து இனிப்பை வாங்கி கொண்டு "என்ன விசேஷம்" என மறுபடியும் கேட்க, அவன் "இன்று என் அம்மாவிற்கு வெட்டிங் டே " என்று சொல்ல, எனக்கு சிரிப்பு வந்தது. "ட் " என்ற தமிழ் எழுத்தின் உச்சரிப்பால் பொருள் மாறுகிறது. ஆங்கில மொழியின் வார்த்தை தமிழில் என்ன பாடுபடுகிறது என்று நினைத்தவாறே அவன் சொன்னதை திருத்தினேன். " தம்பி, அது வெட்டிங் டே அல்ல, wedding day. தமிழில் "வெட்டிங்" என்றால் அது அறுந்து போவது என்ற பொருளில் வரும். ஆனால் அதுவே ஆங்கிலத்தில் உச்சரிப்பு சரியாய் இருக்கும் பட்சத்தில் "திருமண நாள்" என்று பொருள் படும் " என்று தெளிவாக சொல்லி கொடுத்தேன். மேலும் "திருமண நாள்" என்பது உன் அம்மா , அப்பா இருவருக்கும் இணைந்தே வருவது, இதில் அம்மாவிற்கு மட்டும் திருமண நாள் என்று நீ சொன்னது சரியல்ல என்பதையும் எடுத்துக் கூற, அவனும் "சரி அத்தை" என்று தலையாட்டி சென்றான்.


எந்த மொழியிலும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல . ஆனால் இரு மொழிகளை கையாளும் போது பொருள் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

Friday, January 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காக்கை தட்டிய கமண்டல 

நீர் ஆறாய் பாய 

மண் கலனின் நீர்

மட்டும் நிற்குமோ?

நீரின் தன்மை

இலக்கை நோக்கி அல்ல

நிலத்தின் வாட்டத்தை பொறுத்தே!

தன்மையில் இளக்கம் உண்டெனில்

இலக்கும் நம் வசம்


 ஒவ்வொரு துளியும் தாகம் தீர்க்கும்

கலனில் உள்ளவரை 

வீழ்ந்தும் தாகம் தீர்க்கும் 

மண்ணில் ஊர்ந்து

செல்லும் உயிரினங்களுக்கு

வீழ்வது சிறப்பல்ல

வீழ்ந்தும் உயிர்த்திருப்பது சிறப்பே!

உயிர்த்திருந்தும் அடுத்தவரை வாழ வைத்து கரைவது சிறப்பே!

விண்கலம் அல்ல இது

வீழ்ந்து தோல்வியடைய

மண் கலன் தானே

மீண்டும் உயிர்பெறும்

வேறொரு வடிவத்தில்

- Veena 

கண் இமைக்கும் நேரத்தில்

கைதவறிய தண்ணீர் சோம்பு

தவறிய எதுவும் மீண்டும் வரா

சிந்திய ஒவ்வொரு துளியும் 

மண்ணில் கலக்கும்,ஆனால்

 தவறிய நொடி, கொட்டிய

 வார்த்தைகள்,சிந்திய கண்ணீர்

 காலத்தில் மறையும்..

- Vidhya 





Thursday, January 22, 2026

புரியாத கேள்வி by Veena Sharker

 


புரியாத கேள்வி 


அழகான நீண்ட பேருந்து பயணம், நம் எண்ணங்களையும் கனவுகளையும் அசை போட வைக்கும். அதனால் தான் என்னவோ பேருந்தில் பயணிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி தான் ஒரு சமயம் பேருந்தில் பயணிக்க பல விதமான மனிதர்களை என் கண் முன்னே காண முடிந்தது. பிள்ளைகளின் சத்தம், கணவன் மனைவி இடையேயான சிறு சச்சரவுகள், மழலையின் பசிக்கான அழுகுரல், அடுத்த வாகனங்களின் அதீத ஒலியுடன் கூடிய ஒலிப்பான், நடத்துனரின் சில்லறைக்கான, கோபத்துடனான எதிர்ப்பார்ப்பு என பட்டியல் நீளும். 


சக பயணியரிடம் நட்பு பாராட்டி பயணிப்பதும் என் வழக்கம் என்றாலும் முன்பு போல் எவரும் வெளிப்படையாக எதையும் இப்போது சொல்லுவதில்லை. காலத்தின் கோலம் என்பதால் நானும் அதை பெரிதுப்படுத்துவதில்லை. இப்படியே பேருந்து பயணம் ஓட, இருக்கை நிரம்புவதும் அடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்கி ஏறுவதுமாக இருக்க, என் இருக்கையின் பின்னால் ஜோடி ஒன்றின் மெல்லிய பேச்சு என்னை ரசிக்க வைத்தது.


" இன்னிக்கி அத்தை என்னை பூ கட்ட சொன்னாங்க, நானும் நெருக்கமா கட்டி தந்ததை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க" என்று மனைவி சொல்ல, கணவனும் "வெரிகுட்" என்றான்.


"ஏங்க இறங்கியதும் நீங்க என்னை வீட்டிலேயே கொண்டு விடுவீங்களா இல்லை நான் ஆட்டோல போகட்டுமா? " என்று அவள் கேட்க, "எனக்கு பாங்க் வேலை இருக்கு செல்லம். வேணும்னா நீ அப்பாகிட்ட சொல்லி வண்டி ல போயேன். " என்றான். "வேண்டாங்க, பரவாயில்லை அப்பாவை கஷ்டபடுத்த விரும்பல" என்றாள். "சாரி டா" நெக்ட்ஸ் டைம் இப்படி செய்யமாட்டேன்." என்றான் அவன் பதிலுக்கு.


"நான் யூ ட்யூப் ஆரம்பிக்கலாம் ன்னு பிளான் பண்றேங்க. " இது அவள். "வேணாமா. நீ கஷ்டபடாத, உனக்கு இருக்குற வேலையில இது அவசியம் இல்லை" இது அவன்.


"இல்லைங்க. வியூஸ் நிறைய கிடைச்சா நல்ல இன்கம் வரும்ங்க " என்று அவள் சொல்ல, "நோ டியர்" என்றான். 


"ஆமாங்க, வீடியோ கூட எடுத்திடலாம் ஆனா அதை எடிட்டிங் பண்றது ரொம்ப கஷ்டம் ன்னு நினைக்கிறேன்" என்றாள். அவனும் "ம்ம் " என்று ஆமோதித்தான். 


இப்படியே வசனங்கள் தொடர என் நிறுத்தம் வர, நான் இறங்க ஆயத்தம் ஆனேன். இருந்தாலும் இறங்கும் போது அந்த ஜோடியை வாய் நிறைய பாராட்டவும் வாழ்த்தவும் என்றும் இவர்கள் இணை பிரியாது இருப்பார்கள் என்று சொல்லவும் நினைத்தே எழுந்து நின்றேன். அவர்களும் இறங்குவதாக ஆண் சொல்ல என் காதில் விழுந்தது.


 பின்னிருக்கையில் திரும்பி பார்க்க அங்கே ஓர் ஆண் மட்டும் தயாராய் நின்று கொண்டு இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த பெண் தென்படவில்லை . அப்படி நினைத்துக் கொண்டே இருக்கையில் நிறுத்தத்தின் பெயரை சொல்லி நடத்துநர் இறங்க சொல்ல, என்னோடு அவன் மட்டும் இறங்கினான்.


 நானும் என் சந்தேகத்தை தீர்க்க அவனை தடுத்து நிறுத்தி "உன் வீட்டம்மா எங்கேப்பா,? இவ்வளவு சிறு வயதில் இப்படி ஒரு அன்யோன்யமா உங்களிடத்தில். வெரி குட்." என்று நான் சொல்ல, " யாரை கேட்கிறீர்கள் சார்?" என்றான் அவன்.


 "அதன்பா இவ்வளவு நேரம் பின் இருக்கையில் நீங்கள் கணவனும் மனைவியும் பேசி கொண்டு வந்ததை கேட்டு கொண்டு தானே வந்தேன்" என்று நான் அவனுக்கு விடையளிக்க, "அட போங்க சார். எனக்கு கல்யாணமாகி ஆறு மாசத்திலேயே அவ டைவர்ஸ் பண்ணிட்டா. ஒத்த கட்டையா இரண்டு வருஷமும் ஓட்டிட்டேன்" என்று அவன் என்னை வாக்கியத்தில் திணறடிக்க, மீண்டும் நான் பயணித்துக் ஊடே கேட்டதை சொல்ல, "சார் ! அது வேற விஷயம். நான் தனியா இருக்குறதால ரொம்ப போராடிக்குது, பொண்ணுங்க மாதிரி மனதை மாற்றி கொண்டு இருக்க எனக்கு தெரியல . அதான் இப்ப போன்ல கூப்பிட்டா நேர்ல வந்து நம் பேச்சு துணைக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு சம்பளம் வாங்கிட்டு போயிடுவாங்க இல்ல. அது தான் எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. ஆனா அவங்க சம்பளம் என்னால சமாளிக்க முடியாததால அவங்க என்னோட இருந்த டைம்ல பேசுனதை ரிக்கார்ட் பண்ணி வைச்சு அப்பப்ப கேட்பேன் " என்று அவன் சொல்ல, எனக்கு அகிலமே சுற்றியது.  


எங்கே போகுது உலகம்? அட இதுக்கெல்லாம் கிடைக்குற பொண்ணுங்க திருமண பந்தத்தை மட்டும் ஏன் நிராகரிக்கிறாங்க?


 புரியாத கேள்வி, பதில் யார் கையில்?

Wednesday, January 21, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தோள் பாவையாரை ஆட்டுவிக்கும் 

தோள்கள் இங்கே

தான் தோள் நிமிர்ந்து நடக்க

பிறருக்கு தோள் கொடுத்து உதவ


 அறிவியலின் அதீத கண்டுபிடிப்பில்

மறைந்து போன ஆட்டங்கள்

அதை 

மறந்தே போன மனிதர்கள்

அதனால் 

கலைந்து போன கிராமிய கூட்டங்கள்

ஆதலால் 

வறண்டு போன அவர் தம் வாழ்வுகள்


திரைக்கு முன்னாலும் ஆட்டம்

அதன் பின்னாலும் ஆட்டமே

பின்னல்களின் கூட்டணியில்

கரங்கள் கோர்க்க

கதைகள் பிறக்க

செவிகள் ஈர்க்க

காட்சிகள் நிற்க

ரசிகர்கள் களிக்க 

நேரம் கழிக்க

காண்ப வரை மகிழ்விக்க 

வாய்ப்பும் கிடைக்க

கிடைத்த வருவாயில்

வாழ்வை கடக்க

தோள்கள் மட்டுமே 

ஆட்டம் கண்டது

மரணத்திலும்

- Veena 

ஆட்டுவிக்கும் கருவி ஒன்று ஆடும்

 பொம்மைகள் இரண்டு ..

கருவியின் ஒருங்கிணைந்த

 அசைவால் இவை காற்றில்

 ஆடுகின்றன..

கொஞ்சம் தடுமாறினாலும்

 ஆட்டமிழக்க ,கோஷம் எழும்ப

 வேஷம் களையும்..

பலரின் கைதட்டலுக்கு அசையும்

 இவை ,அலை அலையாக

 எண்ணத்தை தூண்டி பல வடிவம்

 பெறும் சிந்திப்பவரின்

 மனதில்,கரையும் இனிப்பாக

 காணாமல் போகும்.

- Vidhya 


Tuesday, January 20, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வார்த்தையின் அளவு மூளையின் கட்டளையோடு

இயங்கும்

அதன் பிடியிலிருந்து

நழுவி உதிரும் வார்த்தைகளும்

பிறரின் எண்ணத்தைக் குலைக்கும்

சங்கடத்தை உண்டு பண்ணும் எதுவும்

தொடரும் கதையாகும்

மூளை சுருங்கினாலும்

சரியாய் இயங்கினாலும்


சுட்டும் விரலின் ஆதிக்கம் 

வார்த்தையின் அளவிற்காக

ஆணையின் வெளிப்பாட்டில் 

இயங்கும் இரு 

உணர்ச்சிகள்


 சிலைகள் பேசாது என்றும்

அதை வடிவமைக்கும் போதும்

பேசான் அமைப்பாளன்

அவனின் சுய உறுப்பின் 

ஆணையின் படி அவனும்

- Veena 

மௌனம் காத்தால் காலத்தால்

 காயத்தால் காப்பாற்ற வேண்டிய

 முக்கியமான சில உண்மைகளை

 மண்ணோடு மக்க செய்ய

 முடியும்,அதை கொட்டி என்ன பயன்

 அது மீண்டும் நம்மை கொட்டும்..


நிபசத்தத்தில் வரும்  ராகத்தை

 கேட்க மௌனம்

 கொள்ளுங்களேன்,

சத்தம் போடதே பேச தெரியாத

 மனங்கள் இங்கே மௌன

 மொழியில் பேசுதே..

- Vidhya 



Monday, January 19, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எண் திசைகளும் நமக்கே சொந்தம்

ஆளும் திறமை உண்டு என்றால்


எவர் வாழ்க்கையும் இப்படியே

திசைக்கு ஒன்றாய் துன்பம் வந்தாலும்

நம்பிக்கை என்று இருந்தால் அடைபடும் அவரவர் 

கரங்களில்


வண்டி பாரம்

 பெரியதோ?

இல்லை

மன பாரங்கள் பெரியதோ?

வண்டி பாரத்தை இழுக்க

மன வலிமையும் தேவை

இழுத்துப் பிடிக்க 

இழுவை சக்தியும் தேவை 

இழுத்துக் கொண்டு முன் செல்ல

சில நேரம் பிடி தளர்த்தினால்

அங்கே தேவைப்படும் 

திறனும் குறைவே

- Veena 

கட்டுக்குள் அடங்கா கோபத்தை

 எப்படி அடக்க ,

பாரத்தை விட பலமே தேவை இங்கே

இரண்டு போய் மூன்று,மின்னல்

 வேகத்தில் பறக்கும் குதிரைகளை

 எத்திசையில் பிடிக்க ,திக்கு

 தெரியாத காட்டில் மூர்க்கத்தை

 அடக்கும் மார்க்கமோ?

ஒரு அடி நகரா வண்டி நகரும் வழி

 என்ன ?

- Vidhya 

Sunday, January 18, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இறந்தகால நினைவுகளை பகிரும் நிகழ்கால நண்பன்

எதிர்காலத்தில் உறங்குவான் வாசித்தவர் நெஞ்சினிலே


 அறிய வேண்டியதை 

அறிந்து கொள்ள 

அறிவின் தேடலும்

அறிவியலின் விந்தையும்

இதில் அடக்கமே 

அறிவோம் இதை நாமும்

அறிவிலியாய் இருப்பதால் 

அறியாமல் சாடுகிறோம்

அறிந்தவற்றை எழுதுபவர்

என்றும் உளர் பிறர்

அறிய வேண்டி

- Veena 

படிக்க படிக்க விரியும்

தேட தேட தொடரும்

கேட்க கேட்க சொல்லும்

எழுத எழுத பிறக்கும்

சேர சேர ஊரும்

காண காண போகும்

எடுக்க எடுக்க குறையா 

கொடுக்க கொடுக்க வளரும்

எண்ண எண்ண முடியா

சிந்தனை களஞ்சியம்!

- Vidhya 




Friday, January 16, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



 கூகுள் கூட கண்டுபிடிக்க முடியாத 

கருவறையின் வரைபடம்

இங்கே அழகாய்

எவரும் அறியும் படி

- Veena 

சிசுவின் குரல் கேட்க செவியே

 விலை கொடுத்தாள்,தாயின்

 கருவறைவுடன் வலுவான

 செவியறையின் பிணைப்பு எங்கும்

 அதன் அதிர்வலைகள்

 எதிரொலிக்க ..

- Vidhya 

Wednesday, January 14, 2026

புரியாத கேள்வி by Veena Shankar

 


புரியாத கேள்வி 


அழகான நீண்ட பேருந்து பயணம், நம் எண்ணங்களையும் கனவுகளையும் அசை போட வைக்கும். அதனால் தான் என்னவோ பேருந்தில் பயணிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி தான் ஒரு சமயம் பேருந்தில் பயணிக்க பல விதமான மனிதர்களை என் கண் முன்னே காண முடிந்தது. பிள்ளைகளின் சத்தம், கணவன் மனைவி இடையேயான சிறு சச்சரவுகள், மழலையின் பசிக்கான அழுகுரல், அடுத்த வாகனங்களின் அதீத ஒலியுடன் கூடிய ஒலிப்பான், நடத்துனரின் சில்லறைக்கான, கோபத்துடனான எதிர்ப்பார்ப்பு என பட்டியல் நீளும். 


சக பயணியரிடம் நட்பு பாராட்டி பயணிப்பதும் என் வழக்கம் என்றாலும் முன்பு போல் எவரும் வெளிப்படையாக எதையும் இப்போது சொல்லுவதில்லை. காலத்தின் கோலம் என்பதால் நானும் அதை பெரிதுப்படுத்துவதில்லை. இப்படியே பேருந்து பயணம் ஓட, இருக்கை நிரம்புவதும் அடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்கி ஏறுவதுமாக இருக்க, என் இருக்கையின் பின்னால் ஜோடி ஒன்றின் மெல்லிய பேச்சு என்னை ரசிக்க வைத்தது.


" இன்னிக்கி அத்தை என்னை பூ கட்ட சொன்னாங்க, நானும் நெருக்கமா கட்டி தந்ததை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க" என்று மனைவி சொல்ல, கணவனும் "வெரிகுட்" என்றான்.


"ஏங்க இறங்கியதும் நீங்க என்னை வீட்டிலேயே கொண்டு விடுவீங்களா இல்லை நான் ஆட்டோல போகட்டுமா? " என்று அவள் கேட்க, "எனக்கு பாங்க் வேலை இருக்கு செல்லம். வேணும்னா நீ அப்பாகிட்ட சொல்லி வண்டி ல போயேன். " என்றான். "வேண்டாங்க, பரவாயில்லை அப்பாவை கஷ்டபடுத்த விரும்பல" என்றாள். "சாரி டா" நெக்ட்ஸ் டைம் இப்படி செய்யமாட்டேன்." என்றான் அவன் பதிலுக்கு.


"நான் யூ ட்யூப் ஆரம்பிக்கலாம் ன்னு பிளான் பண்றேங்க. " இது அவள். "வேணாமா. நீ கஷ்டபடாத, உனக்கு இருக்குற வேலையில இது அவசியம் இல்லை" இது அவன்.


"இல்லைங்க. வியூஸ் நிறைய கிடைச்சா நல்ல இன்கம் வரும்ங்க " என்று அவள் சொல்ல, "நோ டியர்" என்றான். 


"ஆமாங்க, வீடியோ கூட எடுத்திடலாம் ஆனா அதை எடிட்டிங் பண்றது ரொம்ப கஷ்டம் ன்னு நினைக்கிறேன்" என்றாள். அவனும் "ம்ம் " என்று ஆமோதித்தான். 


இப்படியே வசனங்கள் தொடர என் நிறுத்தம் வர, நான் இறங்க ஆயத்தம் ஆனேன். இருந்தாலும் இறங்கும் போது அந்த ஜோடியை வாய் நிறைய பாராட்டவும் வாழ்த்தவும் என்றும் இவர்கள் இணை பிரியாது இருப்பார்கள் என்று சொல்லவும் நினைத்தே எழுந்து நின்றேன். அவர்களும் இறங்குவதாக ஆண் சொல்ல என் காதில் விழுந்தது.


 பின்னிருக்கையில் திரும்பி பார்க்க அங்கே ஓர் ஆண் மட்டும் தயாராய் நின்று கொண்டு இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த பெண் தென்படவில்லை . அப்படி நினைத்துக் கொண்டே இருக்கையில் நிறுத்தத்தின் பெயரை சொல்லி நடத்துநர் இறங்க சொல்ல, என்னோடு அவன் மட்டும் இறங்கினான்.


 நானும் என் சந்தேகத்தை தீர்க்க அவனை தடுத்து நிறுத்தி "உன் வீட்டம்மா எங்கேப்பா,? இவ்வளவு சிறு வயதில் இப்படி ஒரு அன்யோன்யமா உங்களிடத்தில். வெரி குட்." என்று நான் சொல்ல, " யாரை கேட்கிறீர்கள் சார்?" என்றான் அவன்.


 "அதன்பா இவ்வளவு நேரம் பின் இருக்கையில் நீங்கள் கணவனும் மனைவியும் பேசி கொண்டு வந்ததை கேட்டு கொண்டு தானே வந்தேன்" என்று நான் அவனுக்கு விடையளிக்க, "அட போங்க சார். எனக்கு கல்யாணமாகி ஆறு மாசத்திலேயே அவ டைவர்ஸ் பண்ணிட்டா. ஒத்த கட்டையா இரண்டு வருஷமும் ஓட்டிட்டேன்" என்று அவன் என்னை வாக்கியத்தில் திணறடிக்க, மீண்டும் நான் பயணித்துக் ஊடே கேட்டதை சொல்ல, "சார் ! அது வேற விஷயம். நான் தனியா இருக்குறதால ரொம்ப போராடிக்குது, பொண்ணுங்க மாதிரி மனதை மாற்றி கொண்டு இருக்க எனக்கு தெரியல . அதான் இப்ப போன்ல கூப்பிட்டா நேர்ல வந்து நம் பேச்சு துணைக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு சம்பளம் வாங்கிட்டு போயிடுவாங்க இல்ல. அது தான் எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. ஆனா அவங்க சம்பளம் என்னால சமாளிக்க முடியாததால அவங்க என்னோட இருந்த டைம்ல பேசுனதை ரிக்கார்ட் பண்ணி வைச்சு அப்பப்ப கேட்பேன் " என்று அவன் சொல்ல, எனக்கு அகிலமே சுற்றியது.  


எங்கே போகுது உலகம்? அட இதுக்கெல்லாம் கிடைக்குற பொண்ணுங்க திருமண பந்தத்தை மட்டும் ஏன் நிராகரிக்கிறாங்க?


 புரியாத கேள்வி, பதில் யார் கையில்?

2025 - தேடலும் விடையும் by Vidhya Nivash

 


அன்புள்ள வித்யா,

365 நாட்கள் தந்தேனே என்ன செய்தாய்.

சிலவற்றை கற்றேன்,பெற்றேன்,இழந்தேன்,

கொடுத்தேன்,சில நாட்களை கிழிக்க,

 அழிக்க நினைத்தேன், சிலவற்றை

 ரசித்தேன்,வியந்தேன்,சிலவற்றை

 வெறுத்தேன், இனம்புரியாத காதல்

 ,கோபம்,தாகம் கொண்டேன்,கடைசியில்

 தெளிந்தேன்,சிலவற்றுக்கு இல்லை என்று

 சொல்ல பழகு,பலவற்றுக்கு போதும் என்ற

 எண்ணம் பிறந்தது,முடிந்த வரை யாரையும்

 காயப்படுத்ததே.

இந்த வருடத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும்

 நன்றி.இந்த வருட பாடம்...

நீ கொண்ட பூதவுடல் தாய் தந்தையர் தந்தது, 

உன் பாரத்தை சுமை என்று  நினைத்ததில்லை இப்பூலகு  எப்போதும்,

 கையளவு மனதில் பல குப்பைகளை சுமந்து நிற்கிறாயே!

 எதை கொடுக்கிறயோ ,அது மீண்டும் திரும்ப கிடைக்கும் .

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை

 தாண்டி கிடைக்கும் ஆசிர்வாதகளை

 அனுபவி, ஆராயதே .

நேற்று இருப்பது இன்றில்லை, இன்றுள்ளது

 நாளையில்லை இதற்கு இடையில் வரும்

 எண்ண அலைகளை அடக்கி இதுவும் கடந்து

 போகும் என்று தேங்கி கிடக்க, புழுவே

 வளரும் ,முயற்சி செய் ,முன்னேறி செல்,

 ஓடும் நதி போல எல்லையில்லாமல்

 பாய்ந்து ஓடு...

Monday, January 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



 ஒற்றைப்பூ என்றாலும்

கற்றையாய் புன்னகை பூக்க

ஆற்றும் மனதின் கவலையை

உற்று நோக்கினால் மட்டுமே 

விளங்கும் அதன் பால் 

ஊற்றெடுக்கும் வண்டினங்கள்

காற்றின் வேகத்தில் அசைந்த 

செடியை காண

சற்றே நிமிர்ந்தேன் வான் தொட்டன 

பூவும் பூவையின் விழியும்

ஏற்றத்தின் சூட்சுமம்

அறியாது போனாலும்

ஏற்றைக்கும் வேண்டுமே

இந்த அழகின் பரிசு 

சீற்றம் இல்லாது  

சுற்றிலும் மனங்கமழ எவரையும்

தேற்றவும் நீ மலர்ந்தனையோ?

காதலில் 

தோற்றாலும் உன் 

நாற்றம் மறக்காது

பெற்றவருக்கும் கொடுத்தவருக்கும்

நாற்றமென்றாலும் நறுமணமே பண்டைக்காலத்தில்

குற்றம் இல்லாது கண்ட வளர்ச்சி தானே?

கொற்றன் அவன் கொடியில் 

அலங்கரித்தது போல்

சேற்றில் மலரும் செந்தாமரை 

நிறங்கொண்டு

நெற்றிக்கு இடும் வண்ணம்

கூட உன் பெயர் இயம்பியதோ?

நேற்றைக்கு பூத்த மலரின் மணம் 

மறக்கும் முன்னே

பற்ற வைத்தாய் மனதை

இன்றைய வாசத்தால் 

பொற்றாமரை குளத்தில் கூட 

நீ வளர்ந்து 

பேற்றை பெற்றிருப்பாய் 

ஏற்றுக் கொள்ள முடியாத 

பொய்யல்ல இது

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் 

உன்னிடத்தில் காண

மாற்றுப் பாதையில் கூட

முற்றிலும் மாற்றம் தருவிப்பாய்

வெற்றிடம் காணும் தலைமயிரில் 

வீற்றிருப்பாய் காதலின் அரசியாய்

விற்று தீர்க்கும் வணிகனுக்கும்

உற்ற பொருள் கிடைத்திடுமே!

வேற்றுமை பாராது புகும் மலரே!

என்

முற்றமும் என்றும் அடைத்து 

நிற்க வேண்டுகிறேன்

- Veena 

நான் வளர்ந்தேன் ,

நான்கு சுவர் தாண்டி வெளி உலகை

 காண,எட்டி பார்த்து பல

 நட்பை,எதிர்ப்பை வளர்க்க ,கால்

 பலமாக ,பலர் ரசிக்க கேலி செய்ய,

 காதல் செய்ய வளர்ந்தேன்!

வெட்ட வெட்ட வட்ட வட்டமாய் பூ பூக்க

 வளர்ந்தேன்!

முள் இருப்பது தெரிந்தும் என்னை

 கிள்ளு கின்றனர், அதற்கும்

 வளர்ந்தேன்!

என் ஆணவம் புயல்,மழையில்

 சாயுமோ?

- Vidhya 

Friday, January 9, 2026

UAE saaisha meet


 

நாணயத்தின் இருபக்கமோ இவர்கள்.

கொடுக்க கொடுக்க குறையா வளரும்

 உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின்

 நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும்

 கரங்கள்  விலகாமல் பின்ன பிணைய 

 கூடிய கூட்டம்,இனம்புரியாத நட்பாக

 வளருதே,மொழி தடையில்லை,ஓத்த

 எண்ணங்கள் இணையுதே,உறவாக

 மலருதே.இந்த தலைவன் தலைவியை

கண்டு வியக்க,அவர்களின் நிழல் போல்

 வளரும் விதைகள் விருட்சமாக ,விதைத்த

 இடமெல்லாம் பூத்து குலுங்க, பல

 விழுதுகளை ஊன்ற மண்ணில் துடிக்குதே..

முகமறியா மனங்கள்  நிமிர்ந்து நடக்க,

 இவர்கள் கனவு காண்கின்றனர்.அது

 நினைவாக ஓடும் நதியில் பல கிளை

 நதிகள் கலக்க சமுத்திரமாக பெருக்கு

 எடுத்து ஓட,இனி ஒருவரும் வருந்தா நிலை

 வர வேண்டுவோம்.நோக்கம் ஒன்று

 என்றால் ஏக்கம் மறையுதே,

வலிகள் குறையுதே.

விரிந்த கரங்கள் விரியட்டும்,இங்கே 

 நேரத்தை மட்டுமே விலையாக கொடுக்க

 பலமடங்காக கிடைக்கும்

தன்னம்பிக்கைக்கு

 உத்திரவாதம் !


இன்று அற்புதமான நாள்,சிலரை சந்திக்க

 எந்த காரணமும் தேவையில்லை,எதை

 விரும்புகிறமோ அது தானாக நம்மை வந்து

சேரும்.அது பிரபஞ்ச சக்தி .எப்படி கூடினோம்

என்பதை விட,எதற்காக கூடினோம் என்பதே

முக்கியம், நிறையை மறந்து குறையை தேடி

 திரியும் உலகில், ஆரோக்கியமே

 ஆசிர்வாதம்,பலரின் வலிகள்,வடுக்கள்

 மறைய நேர்மறை எண்ணத்தோடு

 ,தன்னம்பிக்கையோடு வாழ்வை நடைபோட, 

அன்பான குடும்பத்தின் ஆதரவுடன்

இந்த புற்று நோயில் இருந்து

 மற்றும் எந்த நோயிலிருந்தும் விடைபெற,

 தள்ளிப்போட முடியும்.என பல அனுபவத்தை

 பரிமாறிய தினமும்.சாயிஷா குழுமத்தின்

 நிறுவனர்களை சந்தித்த தினம், இந்த குழுமம் 2018 ம்

 ஆண்டிலிருந்து மார்பக புற்றுநோயில்

 பாதிக்கப்பட்டவருக்கு

தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில்

 பருத்தி நூலால் பின்னப்பட்ட செயற்கை

மார்பகங்களை இலவசமாக கொடுத்து

 தொண்டாற்றி வருகின்றனர்.அதில்

 அங்கமான அமீரகத்திலுள்ள

 தன்னார்வலர்களை நேரில்

 வந்து சந்தித்தனர்.முகமறியா பலருக்கு

 இவர்கள் மூலம் வலியை மறந்து

 தன்னம்பிக்கை பிறக்க

 சாயிஷா குழுமம் தொண்டு ஆற்றிவருகிறது.

அதிலிருக்கும் ஒவ்வொரு நல்

 உள்ளங்களுக்கும் நன்றிகள் பல,

நம் கூடவே இருக்கும் பலருக்கும் இந்த

 நம்பிக்கை தேவைபடலாம்,இந்த ஆதரவை

 கொடுத்து பலரை காப்பாற்ற,

 எச்சரிக்கையாக இருக்க வைக்க முடியுமே!

முடியும் வரை காப்பாற்ற

 முயல்வதும், பலரின் மடிதலை

 தடுக்குமே .

- Vidhya Nivash











Thursday, January 8, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பார்த்து பார்த்து அலுத்துப் போனதோ ?

கேட்டு கேட்டு புளித்துப் போனதோ?

அழுத்தி அழுத்தி விரல்கள் மரத்துப் போனதோ?

அமைதியை தேடி மனம் அலைந்ததோ?

மெய்யின் உருவம் மாறிப் போனதோ?

ஏன் இந்த நிலை ?

அலைபேசியை தூர வைத்தால்

அழுத்தம் குறையுமே!

அளவிற்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சே!

- Veena 

சோகத்தில் பாதி ஏக்கத்தில் மீதி

துரோகத்தில் பாதி தேகத்தில் மீதி

இளமையில் பாதி தனிமையில் மீதி 

வறுமையில் பாதி வெறுமையில்

 மீதி

நினைவில் பாதி கனவில் மீதி

துக்கம் பாதி தூக்கம் மீதி

மொத்தத்தில் பாதி முத்தத்தில் மீதி

 கழிந்தன ..

- Vidhya 

Wednesday, January 7, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எரியூட்டினாலும் அணையாமல் எறிந்து கொண்டு இருக்கும் நெருப்பு வெளியில் மட்டுமல்ல மனதிற்குள்ளேயும்

 ஜனனும் மரணமும் யார் கையில் உண்டு?

குளிரும் அனலும் யார் மனதில் உண்டு?

அழகும் அறிவும் யார்

வடிவத்துள் உண்டு?

விவாதமும் விடியலும் யார் பேச்சில் உண்டு?

நிரந்தரமில்லா உலகில் எதுவும் எவர் கையிலுமில்லை

- Veena 

தீயாக நீ இருக்க ,

தீண்டா நிலையில்,

 சாம்பலாக சமாதி நிலையில்

 அமைதி கொள்ள ,

யார் வந்து அழைக்க, அழிக்க

 முடியாத நிலை.

- Vidhya 

Tuesday, January 6, 2026

படமும் கருத்தும் by Veena Shankar



திரண்ட வெண்மேகக் கூட்டங்களின் 

காட்சி வெண்ணை போலவே

பெண்மையும் ஓரிடத்தில் பொழிவது போலவே பொழியும் பூமியிலே 

பெண்ணின் கரங்கள்

மறைத்தாலும் 

பரிதியும் வாரா 

வெளிச்சமும் தாரா


 வெண்மையும் பெண்மையும்

பேசும் நேரத்தில்

மாசுக்கள் தெரியா


 ஓடும் மேகங்களையும் நிறுத்த நினைக்கும் பெண்மை

அடைபடுவது ஓர் ஆணின் உள்ளத்தில்


Monday, January 5, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



மான் பிடிக்க மனிதம் போக

மயில் உறங்க மந்தி காவல்

இங்கே

காதலால் வந்த காவல்

மீண்டு வந்தது

ஒரு வழியாய்


தூரிகை அழகென்றால் கலையும் அழகே 

காட்சியும் தெளிவே

- Veena 

கனவில் அவன் வருவான் என

 உறங்க சென்றனையோ ..

அல்ல பொய் உறக்கம் கொண்டு

 மாயனை அழைக்கும்

 தோரணையோ?

- Vidhya 

Thursday, January 1, 2026

எதற்கு எது விலங்கு? by Veena ,Akhiladevi and Vidhya



 எதற்கு எது விலங்கு?


மதுவை அருந்தாமல் இருக்க கைக்கு விலங்கா?

கையில மது அடைபடூம் என்பதில் மதுவிற்கு விலங்கா?


இரண்டு விலங்கிற்கும் காரணம்

மாது


எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்

பூட்டப்பட்ட விலங்குகள் திறக்கலாம்

பாதையும் மாறலாம்

மனம் என்னும் மந்தி 

மரம் விட்டு மரம் தாவுவது போல்

எதிர்மறை விடுத்து நேர்மறை

சிந்தனையை அணுகும் போது

ஆக்கம் பிறக்கும் நோக்கத்தோடு

ஆதிக்கம் செய்யும் எதனையும்

- Veena 


பலதையும் மறக்க இவன் வசமாக

 கடைசியில் இவனை மறக்க

 முடியாத கூட்டம்...

எதையும் விலங்கிட முடியா,

விளங்கிட முடியா கூட்டணி,கூட்டம்

 கலையும் போதே மாட்டிக்

 கொண்டது புரியும்.

- Vidhya 


கலரும், காலரும் கவரும் காதலில்🫶


கதறும் குடும்பம் 

கண்ணை மறைத்தாலும், 

உடல் காட்டிக் கொடுக்கும் விரைவில்😔


கண்ணாடி உடைத்து 

விலங்கிலிருந்து தானே விடுதலை பெறுவர்!

- அகிலா


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...