Monday, January 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



 ஒற்றைப்பூ என்றாலும்

கற்றையாய் புன்னகை பூக்க

ஆற்றும் மனதின் கவலையை

உற்று நோக்கினால் மட்டுமே 

விளங்கும் அதன் பால் 

ஊற்றெடுக்கும் வண்டினங்கள்

காற்றின் வேகத்தில் அசைந்த 

செடியை காண

சற்றே நிமிர்ந்தேன் வான் தொட்டன 

பூவும் பூவையின் விழியும்

ஏற்றத்தின் சூட்சுமம்

அறியாது போனாலும்

ஏற்றைக்கும் வேண்டுமே

இந்த அழகின் பரிசு 

சீற்றம் இல்லாது  

சுற்றிலும் மனங்கமழ எவரையும்

தேற்றவும் நீ மலர்ந்தனையோ?

காதலில் 

தோற்றாலும் உன் 

நாற்றம் மறக்காது

பெற்றவருக்கும் கொடுத்தவருக்கும்

நாற்றமென்றாலும் நறுமணமே பண்டைக்காலத்தில்

குற்றம் இல்லாது கண்ட வளர்ச்சி தானே?

கொற்றன் அவன் கொடியில் 

அலங்கரித்தது போல்

சேற்றில் மலரும் செந்தாமரை 

நிறங்கொண்டு

நெற்றிக்கு இடும் வண்ணம்

கூட உன் பெயர் இயம்பியதோ?

நேற்றைக்கு பூத்த மலரின் மணம் 

மறக்கும் முன்னே

பற்ற வைத்தாய் மனதை

இன்றைய வாசத்தால் 

பொற்றாமரை குளத்தில் கூட 

நீ வளர்ந்து 

பேற்றை பெற்றிருப்பாய் 

ஏற்றுக் கொள்ள முடியாத 

பொய்யல்ல இது

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் 

உன்னிடத்தில் காண

மாற்றுப் பாதையில் கூட

முற்றிலும் மாற்றம் தருவிப்பாய்

வெற்றிடம் காணும் தலைமயிரில் 

வீற்றிருப்பாய் காதலின் அரசியாய்

விற்று தீர்க்கும் வணிகனுக்கும்

உற்ற பொருள் கிடைத்திடுமே!

வேற்றுமை பாராது புகும் மலரே!

என்

முற்றமும் என்றும் அடைத்து 

நிற்க வேண்டுகிறேன்

- Veena 

நான் வளர்ந்தேன் ,

நான்கு சுவர் தாண்டி வெளி உலகை

 காண,எட்டி பார்த்து பல

 நட்பை,எதிர்ப்பை வளர்க்க ,கால்

 பலமாக ,பலர் ரசிக்க கேலி செய்ய,

 காதல் செய்ய வளர்ந்தேன்!

வெட்ட வெட்ட வட்ட வட்டமாய் பூ பூக்க

 வளர்ந்தேன்!

முள் இருப்பது தெரிந்தும் என்னை

 கிள்ளு கின்றனர், அதற்கும்

 வளர்ந்தேன்!

என் ஆணவம் புயல்,மழையில்

 சாயுமோ?

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...