Saturday, January 31, 2026

இன்றைய சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை


கண்ணீரும் வெளிப்படுவது அவசியமே , மனம் தன் இயலாமையை பிறருக்கு தெரிவிக்க


அண்மையில் காணும் யாவும் சொந்தமுமல்ல தொலைவில் காணும் யாவும் எதிரியுமல்ல


மௌனத்தோடு வரும் விலகல் நிரந்தரமல்ல


நம்பிக்கை கொள்ளும் வார்த்தையே வாழ்க்கை


பிறரால் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளேன் நான், கவலையில்லா இனம் என்று. இப்படிக்கு புன்னகை


சோதனைகளை தாண்டி சாதனைகள் கொண்டால் வேதனைகள் இல்லை, மனம் பக்குவப்படுவதால்


அழுகை கூட அழகாய் இருக்க வேண்டும் நடிப்பில், சிரிப்பு கூட இயல்பாய் இருக்க வேண்டும் நிஜத்தில்


அறிவாய் இருக்கும் ஒருவன் மடத்தனமாய் பேசுவதை கேட்பதை விட , மடத்தனமாக இருக்கும் ஒருவன் அறிவாய் பேசுவதை கேட்கும் போது அதிலுள்ள பொருளை உணர முடியும்.


எதுவும் தேவையே அது கிடைக்கும் வரை சலிப்பும் வருமே தொடர்ந்து கிடைக்கையில்.


ஒருவருக்கு நாம் செய்யும் உதவி மண்ணில் இட்ட விதை போல


செய்த குற்றங்கள் யாவையும் செய்தவரால் மறுக்கப்படுவதை விட மறைக்கப்படுவதே அதிகம்


எதையும் மறுப்பது எளிது, மறைப்பது கடினம். இருப்பினும் மறைப்பது கூட சில சமயம் எளிதாகும் . அதனால் மறப்பது மட்டுமே மிக மிக கடினம்.


எதற்கும் மறுப்பு சொல்லாதவரை இங்கே எவரும் வெறுப்பு காட்டுவதில்லை. வெறுப்பு கொண்ட பிறகு எவரும் எவரையும் நம்புவதில்லை


இன்பதிற்கும் துன்பதிற்கும் என்றும் ஆரம்பமும் உண்டு, முற்றுப்புள்ளியும் உண்டு. அதன் இடையில் இடப்படும் கோடு அவரவர் கையில்

 எதிரிலிருப்பவர் குரல் ஓங்கியிருக்கும் போது அங்கே ஊமை போல் நடிப்பது கூட ஓர் சவாலான விஷயம் தான்.


 முடியாது என்ற நிலையிலிருந்து முடியும் என்ற செயலுக்கு நாம் இடும் பெயரே முயற்சி


வழக்கமாக தொடரும் நிகழ்வுகள் கசந்து போகும் ஓர் நாள் , அது அல்லாதவை கடந்து போகும் என்றும்


பசி என்பது வேண்டும் வெறும் எண் சாண் வயிற்றுகாக மட்டுமல்ல ஆறு அறிவு வளரவுமே


கல்லை தெய்வமாக வணங்கும் இடத்தில் மனிதன் மனிதனாக கூட மதிக்கப்படுவதில்லை என்பது உண்மையே


அடைபடும் எதனாலும் விடுபட முடிவதில்லை அது பாசமானாலும் சரி நாம் கட்டாயத்தின் பேரில் போடும் வேசமானாலும் சரி


தொட முடியாத எல்லையும் விடை அறியா வினாவும் நம் மனதின் அறியாமையாலே தொடரும் எந்நாளும்


சிரம் தாழ்ந்து அடங்கி போவதால் என்றும் எவரும் வீழ்வதில்லை, ஆனால் பிறரை சார்ந்து வாழ்வதை விட வீழ்வது என்றும் சிறப்பே!


ஒன்று தேவை என்று சொல்லும் போது மனதில் ஆசை பிறக்கிறது என்பதே உண்மை. அந்த ஆசையும் பிறப்பதாலே எதுவும் தேவையாய் மாறுகிறது.


மொழிகளியம்பவே வார்த்தை வார்த்தையியம்பவே நாவு 

நாவியம்பவே தெரியும் அகத்தின் அழகு


      25} நாவினின்று பிறக்கும் வார்த்தையின் ஆழம் அது அறியப்படும் விதத்தில்  

            உள்ளது


      26} ஒன்றன் மீதான மதிப்பு அதன் தேவை உள்ள வரை மட்டுமே!


      27} ஒருவரின் மதிப்பு என்பது பெறுவதில் மட்டுமல்ல , பிறருக்கு  

             கொடுப்பதிலும் அமைவதே சிறப்பு


      28} நம் அறியாமை , பொறுமை இவை இரண்டும் சுயநலவாதிகளுக்கு ஓர் 

            சந்தர்ப்பம்



29) அழுகையும் கோபமும் மட்டுமே உணர்ச்சியின் வெளிப்பாடல்ல, அமைதியாய் இருப்பதும் கூட


30) ஒருவரின் அறியாமை என்பதன் நோக்கம் ஒன்றை அறியாது இருப்பது மட்டுமல்ல, அறிந்தும் அறியாத படி இருப்பதும்


31) உன்னை புண்படுத்தியவர்களுக்கு தெரியாது, அவர்களால் நீ படித்தது வாழ்க்கையின் அனுபவ பாடம் என்று.


32) பொறுமை என்பது ஒரு சிறந்த செயலுக்கான ஆயுதம், அமைதி என்பது விவாதத்தை முறியடிப்பதற்கான ஆயுதம்


33) நாம் பற்ற எண்ணும் பொருளுக்கான பட்டியல் நீளுமானால் அங்கே உழைப்பிற்கான முயற்சியும் நீளும்.


34) "முடியாது "என்பதில் "யாது" என்ற வினாவும் அதை "முடி" என்ற விடையும் உள்ளது.

வாழ்வும் இப்படியே மறைமுகமாய் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது


35) வலை பின்னும் சிலந்தி கூட அதனின்று தான் வெளி வர பாதை அமைக்கும் போது மனிதன் மட்டுமே பல மாய வலைகளிலிருந்து வெளி வர தெரியாமல் தவிக்கிறான்


36) மலரின் புன்னகை வாசம் தரும், மனிதனின் புன்னகை சுவாசம் தரும் வாழ்வு சிறக்க.


37) உருவத்தின் அழகு சிறப்பே, அதனின்று அழகு கொள்வது மனதின் சிறப்பே!


38) ஒன்றன் தேவை இருக்கும் போது அதன் குறைகள் மறையும் என்பதே உண்மை


39) பிறரின் சிரிப்பு நம்மை அனிச்சையாய் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்து தெளிந்து நடக்கவும் செய்கிறது


40) ஒரு செயல் உரு பெற காரணம் முயற்சியோடுடைய தெளிர்ச்சி மட்டுமே


41) மதிப்பு என்பது நம் மதியினால் அடுத்தவர் மதியை ஆட்கொள்ள, அதனால் வெளிப்படும் உண்மை தன்மையால் அவர் நம்மை சிறப்பிப்பதேயாகும்


42) மதிப்பு என்பது நம் மதியினால் அடுத்தவர் மதியை ஆட்கொள்ள, அதனால் வெளிப்படும் உண்மை தன்மையால் அவர் நம்மை சிறப்பிப்பதேயாகும்


43) எதையும் சுமப்பதில் உள்ள வலி அதனால் கொள்ளும் நன்மையை சுவைப்பதில் மறைந்து போகும்


44) அறிவும் அழகும் போட்டி போடும் இடமே உலகம். அங்கே இயற்கையும் உண்டு செயற்கையும் உண்டு


45) ஒருவரின் நிழலை பின் தொடர்கையில் அங்கே ஆபத்து இருக்காது. அதுவே நம் கால்களில் நிற்கும் போது அங்கே எவருடைய ஆளுமையும் இருக்காது.


46) ஏமாற்றத்தை எதிர் கொள்வதை காட்டிலும் எதிர்ப்பார்ப்பை குறைக்க நினைப்பது சிறப்பு


47) பொய் சொல்வதையே தவிர்க்க வேண்டும் . இல்லையெனில் அந்த பொய்யை உண்மை என்று நிரூபிக்க பல பொய்கள் சொல்ல நேரிடும்



48) ஆவலோடு பிறக்கும் நாட்கள் வாழ்வின் நிகழ்வுகளை அசை போட வைத்து விட்டு அனுபவ அறிவோடும் நினைவோடும் நகர்கிறது.


49) வினாவிற்கும் விடைக்கும் இடையே உள்ள தூரம் தான் ஓர் உயிரின் நுண்ணறிவு



50) வாழ்க்கையில் வெற்றி பெற பிறரால் அடையும் வலியை ஏற்று மனதில் வலிமை பெறுவது சிறப்பு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...