Sunday, February 7, 2021

கவிதை துளி " கடிகாரம்" by Chellammal

 




வாய் வழி விரியும் விந்தை!

 ⏲️⏱️⏰⌚️🕛🕰️🕝🕒⌚️🕰️⏰


உதயம் முதல் 

மறையும் வரை 

உனது பயணம்

மூன்று முட்களோடு..


திருகி விட்டாலும்..

திமிறாமல் இருந்து

முட்களின் சங்கமத்தில் 

சங்கீதம் ஆகிறாய்..


ஓடியோடி 

ஓங்கியடித்து 

ஓங்கார ஓசையோதி 

உனைத் தண்டித்து

எமைக் கண்டித்து  

அண்டத்தை 

அசைவிக்கிறாய்..


கடினமான காரமான

கணங்களையும் காலாறக் 

கடப்பதால்தான் 

கடிகாரமெனப் பெயர் 

சூடிக் கொண்டாயோ?!


-- செல்லா

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...