Veena Shankar:
கனா கண்டேன் தோழி
நானும் அந்த நாள் முதல்
இந்த நாள் வரை
சன்னலோரம் அமர்ந்தே
என் வேதனையை கொட்டி கொண்டிருக்கிறேன்
என்னை ஏளனம் பேசியே
என் ஆற்றலை அடக்கி விட்டனர்
நானும் என் மூளையை
சிறிதே முடக்கி விட்டு
ஏச்சு பேச்சுக்களை
தவிர்த்து விட்டு
நானும் எந்த இனம் என்று தெரியாமல்
மெல்ல என் உணர்வுகளை அடக்கி கொண்டு,
மீசை முளைக்குமா?
ஆண்மை புலப்படுமா?
என் உணர்வுகளுக்கு
விடியல் கிடைக்குமா?
என்ற நினைப்போடு
இதோ இது நாள்
வரை கழித்து விட்டேன்
தோற்றத்தில் பெண்மையையும்
உள்ளூர நெஞ்சந்தனில் ஆண்மகனின் கம்பீரதத்தையும்
சுமந்து
கொண்டிருப்பதோடு
உறவுகளின் மத்தியில்
"அடங்காதவள்" என்ற
பெயரோடும்
ஆண் நண்பர்களோடு
உன் பெண்ணை
அங்கே , இங்கே பார்த்தேன் என்றும்
அவள் ஆண் பிள்ளைகளோடு
பழகுவது உனக்கு
தெரியாமல் இருக்குமா?
என்று என் பெற்றவர்கள் மத்தியில் அடுத்தவர்கள் நெருப்பாய் கொளுத்தி போட
என் உடன் பிறந்தவனும்
என்னை அன்னிய
நபராய் பாவிக்க
"நான் யார்"? என்ற எண்ணம்
தலைக்கேறினாலும்
என்னால் செய்ய முடிவது தான் யாது?
என்னை பெற்றவள் மட்டுமே
ஏதும் பேசாமல் மௌனம் காக்க,
என்னையே நான்
பல முறை கேட்டுக் கொண்டேன்
நான் பிறந்தது தான் குற்றமா?
என்னை படைத்தவனின் குற்றமா?
காலம் என்னை மாற்றியதால்
அது காலத்தின் குற்றமா?
இல்லை
காலம் என் துயரை துடைக்காமல்
காத்து நிற்பது குற்றமா?
பருவத்தின் வளர்ச்சி
உண்டெனில் அதுவும் என் கரங்களில் உண்டோ?
முடிந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
இல்லையேல் என்னை
என் போக்கில் விட்டு விடுங்கள்
விற்று மட்டும் விடாதீர்கள்
என் உணர்ச்சிகளை
ஏளனம் காட்டி என்றென்றும்
இந்த சன்னல் மட்டுமே
கண்டிருக்கிறது என்
கண்ணீரை
சன்னல் திரைச்சீலை மட்டுமே
துடைத்திருக்கிறது
என் விழியோரக் கண்ணீரை
காலப்போக்கில் காற்றும் என்
கண்ணீர் துடைக்க
நினைக்கையில் மீண்டும்
சுனாமியாய் அவதூறு எழ,
யாரும் அறிய வாய்ப்பில்லை
என் மனதின் வலியை
மீண்டு வா என்கிறது
என் மனது
மீண்டும் துரத்துகிறது
என் மாறுபட்ட உணர்ச்சி
மீள்வது பற்றி நினைக்கையில்
நீள்கிறது நாட்கள்
Akhila :
படர்ந்து விரிந்த வானமே!!
நீ அளித்த தானம் - இன்று என் முற்றத்தில் தோரணமாய்✨️
விண்மீன்கள் என் கண் முன்னே நீந்த வரம் தந்தாய்🌟
நன்றிகள் பல🙏
அதோடு, எம் தோழியர்க்கு,
மூன்று வரங்கள் தருவாயா?
புவியெங்கும் பூவையர்க்கு பேதைமை யகற்றி
மேன்மை தருவாயா?
அவளைக் கும்பிட வேண்டாம்..
அவளைக் கொஞ்சிட வேண்டாம்..
அவளைக் கொண்டாட வேண்டாம்..
அவளை மிதிக்க வேண்டாம்..
மதித்தால் போதும்-
சகாவாக, சமமாகக் கருதும் சமூகம் தருவாயா?
புற அழகை புறந்தள்ளி,
பயத்தினை ஒரங்கட்டி,
மாய வலையினை அறுத்து,
சுயத்தோடு நயமாகப் பேசி,
சுய மரியாதையோடு கைகோர்த்து,
வீரமும் விவேகமும் ஒரு சேர நடை போட,
தெளிவும், தெம்பும்
இரு கண்களாகத் தருவாயா?
-உன் குட்டித் தோழி🤹♀️
Akhila :
நிலாவிடம்🤩
அன்புத் தோழனே!
நேற்று உன் வெற்றிடம் நிரப்ப,
உன் சகாக்கள் துணையாக இங்கிருக்க,
தோரணமென ஆடிப்பாடி, அலங்கரித்தாலும்.....
என் மனம் உன்னையே நாட...
என் கண்கள் உன்னையே தேட...
போதும் இந்த நாடகம் மாதாமாதம்- 'அமாவாசை' எனும் பேரில்!
விரைந்து வா.. நாம் வேற்று கிரகமோ,
வேறொரு பிரபஞ்சமோ பறந்து செல்வோம்-
எல்லா நாளும் "பௌர்ணமியாக்க"🥰
-அன்புத் தோழி❣️
Akhila :
Let me start...
*தொங்கும் தாராக்களுடன் ஏங்கும் தாரகை*
இன்று ஈகைத் திருநாளிலாவது ஆகாயம் ஏவுகணைகளின்று தப்புமா?
-அமீரகக் குட்டி
Veena Shankar:
மாப்பிள்ளைகள் வரிசை கட்ட, என் மனம் ஏனோ எனக்கான ஒருவனை தேடி
கொஞ்சம் எட்டி பிடித்து இலக்கை அடைந்தால் முதல் நிலையை சீக்கிரம் பிடித்து விடலாம். கொஞ்சம் பக்கத்தில் உள்ளதை பற்றினால் மேலே செல்ல காலம் ஆகுமே!
எதிர்கால சிந்தனையில் படித்த இளம் பெண்
எட்டிடுமோ வாழ்வு
தொங்குகுன்றன கனவுகள்
ஏங்குகிறது அதை அடைய
Vidhya Nivash:
விடியலை தேடி
வானின் ஈகைக்காக!
ஒவ்வொரு விடியலும் சிலரின் ஈகையே!
சிலரின் ஈகையில் ஜொலிக்கும் நட்சத்திரம்!
தினமும் வரும் நட்சத்திரத்தை பார்க்க முடிந்தும் விலகி செல்லும் சிலர்,
ஜன்னல் வழியாக உள்ளே வரமுடியாத வீடு,
அலங்கார விளக்கில் மட்டுமே ஜொலிக்கும் நட்சத்திரம்,
அருகில் இருந்தும் தொலைவில், தொலைவில் இருப்பது மறைவில்,
ஏராளமான வழியிருந்தும் விடியா வான்!
இவளின் ஆசைக்காக ஒளி வீச , இருளை நீட்டிக்க !
இப்படியே இருளை விருப்பும் உலகில் விடிந்தும் உறக்கத்திலே கழிய,யாரின் ஈகையோ இது!
Veena Shankar:
விடியலும் வேண்டுமோ?
ஏதும் அறியாதவரை
என் மனதில் மகிழ்ச்சியே!
பற்பல விஷயங்கள் அறிந்து கொண்டபின்
மனிதர்களின் சுயநலம் தெரிந்து கொண்ட பின்
என் வாழ்க்கை
தலைகீழே
அறிந்து கொண்ட விஷயங்களால்
நான் வாதாட தான் கற்றேனா?
இது மட்டுமே விளங்கவில்லை
மண் தன் வளம்
அறியாதவரை சிறப்பே!
அறிந்து கொண்டால்
அதன் விளைச்சலை
நேரடியாக கைப்பற்றிக் கொள்ளுமோ?
எதையும் அறிந்து கொள்ளாததும்
அறிந்தும் அறியாமல் இருப்பதும் சிறப்பே!