Monday, March 16, 2026

கொசுவின் ராஜ்யம் by Veena Shankar

 


கொசுவின் ராஜ்யம்

என் மெய்யே சுளீரென்றது

என்னை நானே அடித்து 

வருத்திக் கொண்டதால் அதுவும் அவனாலே 

சில நேரம் செல்லமாய்

சில நேரம் ஆழமாய்

தீண்டினாலும் 

வெற்றி என்பது சம அளவே

ரீங்காரமிட்டவன் அவன் 

மடிந்த பாடில்லை

சிலநேரம் அவனை கொன்றும் வெற்றியில்லை

கத்தியில்லா யுத்தம் ஒன்று 

அரங்கேறியது தான் மிச்சம்

என் உறக்கத்தை கெடுத்ததால் 

என் உதிரத்தையும் இழந்தேன்

வலியும் கொண்டேன் 

நோயும் கொண்டேன்

அசைவில்லா நேரத்திலும்

என்னை அசையச் செய்தான்

மருந்து வைத்து விலக்கினாலும் 

மறவாமல் வாசல் வருவான்

அவனை சிறை பிடிக்க

முடியாமல் அடைபட்டேன் 

நான் அறை என்னும் கூண்டினுள் 

இவனை அடக்க வழி

தெரிந்தால்

கொஞ்சம் சொல்லிவிட்டு போங்க

நான் ஆழ்ந்த உறக்கம்

கொண்டு 

சுறுசுறுப்பாய் மாற 


இப்படிக்கு

கொசுவை அடக்க தெரியாதவன்

 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...