Tuesday, March 10, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


முதல் இடத்தை அடைய வேண்டி

நடக்கும் மோதல்

மூளைக்கும் சுத்தியலுக்கும் இடையே

இதில் சிதைந்தது

என்னவோ மூளைதான்

மூளைக்கு எட்டிய

அறிவால் பெற

வேண்டிய இடம்

பேராசையால்

சிதைந்தும் போனதோ?


உன் காயங்களுக்கு

நீயே பொறுப்பு

சுத்தியலையோ சூழ்நிலையையோ

பழிக்காதே

முதலிடம் பிடிக்க

ஆசைப்படு

அதிகாரத்திற்காக அல்ல

பிறரிடம் அன்பு காட்ட

- Veena 

மூளை சலவை செய்ய 

தோற்றுபோன அரசன்!

ஆயுதம் கொண்டு

பணம் கொண்டு

ஜெயிக்க முடியாத நிலை ,

எதை எடுக்க அதன் கையிலே

 அழிவு..

புத்தியை தீட்ட ஆயுதமும்,

 காகிதமும் வேண்டா ,

வெற்றிக்கு ஆளுமை,விவேகம்

 இருக்க அனைத்தும் அதன்

 காலடியில்  கிடக்க 

 தலைநிமிர்ந்து நிற்கும் தலைவி!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...