Wednesday, March 11, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



வண்ணங்களின் சங்கமம் 

எதற்காக இங்கே?

பண்டிகை கொண்டாடவா?

வாசலில் கோலமிடவா?

 மனதின் கோலத்தை

வெளிப்படுத்தவா?

அதனதன்  சிறப்பை 

வெளிக்காட்டவா?

மனிதர்களின் நிறம்

காணவா? 

இதில் சமாதானத்தின்

நிறம் மட்டும் அமைதியாய்

உள்ளது

எட்டா உயரத்தில்

- Veena

வண்ணங்களே எண்ணங்களின்

 கோர்வை ,

வண்ணத்தை கன்னத்தில் ஓட்டி

 விளையாட கெஞ்சும் கூட்டம் ,

சிந்திய வண்ண கலவையில்

 மண்ணும் மின்னும் , மகிழ்ச்சியின்

 வெளிப்பாடு வண்ணங்கள்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...