Tuesday, March 24, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அழகு உள்ள இடத்தில் ஆபத்தும்

அறிவு உள்ள இடத்தில் அகந்தையும்

நீ என்று சொல்லும் இடத்தில் அதிகாரமும்  

நான் என்று சொல்லும் இடத்தில் தன்னலமும் 

ஆதங்கம் கொள்ளும் இடத்தில் ஏமாற்றமும்

அன்பு கொடுக்கும் இடத்தில் அறிவீனமும் 

இருப்பது நிதர்சனம்

- Veena 

இரண்டும் ஓர் இனம்

ஒன்றில் மற்றொன்று 

எவ்வகையில் வேறுபடும்

பார்வையில் ஒன்று

வலிமையில் வேறு

அத்தனையிலும் வேறு

எதை கொண்டு இவை குணத்தில்

 பாகுபாடு, தொழிலை கொண்டே!

நண்பனும் எதிரியும் ஒன்றே

காலத்துக்கு ஏற்ப மாறும்,

இருவரும் தேவையே வாழ்வில்

 முன்னேற !

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...