Monday, March 23, 2026

படமும் கருத்தும் by winmeengal

  


Veena Shankar: 

எண்ணத்தின் நிறைவே நிறைவு வாழ்வில்

 வட்டத்தின் சுற்றலில் புது வடிவம் முழுமை

முயற்சி கொள்ளும் முழுமை அடையும்

 

ஆதி யார் அந்தமும் யார் இங்கே?

இடும் முட்டைக்கு ஓர் 

கூடமைத்து பாதுகாத்து

புழுக்களாய் மாறும் வரை

உணவளித்து வளர்த்து

இறக்கைகள் முளைக்கும் வரை காத்திருந்து 

பறந்தோடும் பூச்சியே 

நீயும் உன் சக்தி

இதுவென காட்டுகிறாய்

புழு உனக்கே பறக்கும் சக்தி

கொடுத்த இறைவன்

அடிப்பட்ட மனதை

மட்டும் மாற்றும், ஆற்றும் கலையை மனிதனுக்கு 

சொல்லிக் கொடுக்க மறந்தானோ படைக்கும் முன்

சிறப்பு எப்போதும் நம் மீதே

பழி மட்டும் அடுத்தவருக்கானது என்ற 

எண்ணம் உள்ளவரை நாம் வானில் பறப்பது ஊர்தியில் மட்டுமே


Akhila: 

Few of my captions....

(1) Emerging Eminence 

(2) Motivation in the Air

(3) உடைத்தல் நல்லது- எழுந்து பறந்தால்!

(4) 1.2..3..Colourful Escape

(5) "Free"fly(Who named Butterfly 🤔🤔🤔🤪)

(6) Think..Break..Fly 🪰 🪁


 *அற்பப் புழு* 

அற்பப் புழு என்று எண்ணாதே!

உண்டு, கண்டு, வென்று, உடைத்து- 

நான் வெகுண்டு வந்தால் சூறாவளி🌬

நான் சிரித்தால் தீபாவளி✨️

நான் பறந்தால் திருடி😎- 

கட்டாயம் உன் இதயத்தை திருடுவேன்♥️

 மனமே பொறு....

மாயாஜாலம் நடக்கும் விரைவில்!!


 Divya C:

 Dont give up..Beautiful things take time😇


 Vidhya Nivash: 

வலி..வழி..வளி

அடைப்படுவது கடைசியில் பறக்கவே!

சின்ன சிறு வாழ்க்கைல அனைவரையும் மகிழ்வித்து செல்,

எட்டமுடியா இடத்தை எட்டி பிடிக்க பற

சிறகுகள் வலுவிழக்க பயணம் முடியும்!

வலிக்கு பின், வழி பிறக்கும் வளி என்னும் புது பாதை திறக்கும்!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...