முண்டாசுக் கவிஞன் மிடுக்கான எம் பாரதி!
பெண் அறிவை வளர்த்திடப் பெருமுயற்சி செய்த எங்களின் பாட்டன் பாரதி!
அகண்டிருந்த மகாகவியின் அறிவிற்கு ஆகாயம் பணிந்ததம்மா!
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் எனக்குள்ளும் விதைத்துவிட்டாய்- அமரகவி பாரதி!
செங்கோலை வீழ்த்த எம் எழுதுகோலுக்கு உன்னால் அல்லவா சக்தி கிடைத்தது!
சாதிகள் தொலைத்து புதுயுகம் படைக்க
அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி வழி அஞ்சாமல் வாழ
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் மொழியின் மகுடம் தந்தார்!
வேடிக்கை மனிதரைப் போல- நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற
பாரதீயின்🔥 வேதம் இந்த ஆண்டாளின் ஆண்டாண்டு கால முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் அச்சாணியாய் தொடரும் ஐயா!!!
ஆம்!-பெரிதினும் பெரிது கேட்டு
மானம் பற்றி
ரெளத்திரம் பழகி நான் அனுதினமும் திரிகிறேன்!
பாரதியே உன் போல் என் கண்களும் இரு சூரிய துண்டுகளுக்கு சமம்!
சொல்லிச் சென்றவர்கள் மத்தியில்
சொல்லிச் செய்தவன் எம் செந்தமிழ்த்தேன் பாரதி!
இறப்பு பற்றிய அச்சமில்லை நீ கண்ட புதுமைப் பெண்ணான எனக்கு!
சறுக்கி விழும் மனிதருக்கு 'சரித்திரமே நீதான்' என்றாயே பாரதி!
செய்வது துணிந்து செய்து
சொல்வது தெளிந்து சொல்லி
நாளைய தலைவர்களாகிய அத்தனை மாணவச் செல்வங்களையும் என் வழியாக அறிவாகிய 'பாரதி எனும் தீ' புகட்டி கற்பிப்பேன்!
இப்பொழுதும் எப்பொழுதும்🙏

No comments:
Post a Comment