Tuesday, March 17, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


 உயிர் எழுத்து


அகந்தையை ஒழிப்போம்

அறிவீனம் விலக்குவோம் 

ஆற்றலை அறிவோம்

ஆக்கம் அடைவோம்

இரக்கம் கொள்வோம்

இறைவனை வணங்குவோம் 

ஈதல் செய்வோம்

ஈரம் காட்டுவோம்

உரிமை கொடுப்போம்

உந்துதலாய் இருப்போம்

ஊக்கம் கொள்வோம்

ஊழ்வினை மாற்றுவோம்

எதிரியை மதிப்போம்

எதிர்காலத்தை சீராக்குவோம்

ஏமாற்றத்தை தடுப்போம்

ஏற்றம் தொடுவோம்

ஐயத்தை சிதைப்போம்

ஐவிரல்கள் இணைப்போம்

ஒழுக்கம் பேணுவோம்

ஒன்றிணைந்து  

உயர்வோம்

ஓதுவதால்

சிறப்போம்

ஓய்வினை தவிர்ப்போம்

ஒளடதம் குறைப்போம்


 "அ" வின் தொடக்கம்


அரிதாரம் இன்றி தோன்றும் முகம் சில சமயம்

அகம் காட்ட மறுக்குமே!


அவசியமானது என்று நினைக்கும் ஒன்று மனதில் 

அலட்சியம் காட்டுமே! !


அறியாமையால் செய்யும் செயல் உள்ளூர உழன்று

அடி வாங்க செய்யுமே!


அகந்தையில் உருவாகும் வார்த்தைகள் யாவும் அளவில்லா

அழிவை கொடுக்குமே!


அப்பழுக்கில்லா குணம்

எங்கும் எப்போதும்

அனைவரையும் ஈர்க்குமே!


அச்சத்தில் பிறக்கும் யாவும் சிறப்பு கொடுக்காது

அவசரமாய் மறையுமே!


அடுத்தது என்ன என்ற கேள்வி என்றும் செயலில்

அறிவீனம் விலக்குமே!


அதிசயிக்க வைக்கும் எதுவும் ஆராவாரத்தோடு

அமர்க்களப்படுத்துமே!


அழகாய் தோன்றும் காட்சிகள் யாவும்

அபரிமிதமான மகிழ்ச்சி கொடுக்குமே!


அசாத்தியமான செயல்கள் எதுவும் மனதில் 

அசை போட வைக்குமே!


"அ " வின் பிறப்பு மொழிகளின் தொடக்கம்


ஆண்டுகள் பல கடந்தும் நின்று வியாபிக்கும்


இயல்பாய் அறிவிக்கும் மொழியின் எளிமையை 


ஈர்க்கும் "ழ" கரம் என்றும் சிறப்பு இதனுள் 


உதவிடும் " ந" கரமும் கூட்டிடும் உச்சரிப்பை 


ஊக்கியாய் இருந்து கூர்ந்து பொருள் பட வைக்கும் 


எவருக்குமான ஆற்றல் மொழியினை அறியும் வேகத்தினிலே 


ஏற்றம் இல்லாத இடத்தில் மாற்றம் வெளிப்படா 


ஐயம் கொள்ளேன் இதில், எங்கும் சிறப்பே மொழிகளின் ஆதிக்கம்


ஒன்றும் என்றும் மறவா கற்ற கலையை


ஓங்கி உரைக்கும் மேன்மை கொடுக்கும்


உரைத்தது உறைந்தது மனதில் பனி போலே அதுவும் என் பணியே


காப்போம் மொழியை அறிய முற்படுவோம் நம் அறிவின் கண்


- Veena


"அ"


அறிந்திராத அந்த அறிவு-


ஆட்டிப்படைக்கும் அந்த அறிவு-


இல்லாததை மெய்யாக்கும் அந்த அறிவு-


இருப்பினும் பொய்யாக்கும் அந்த அறிவு-


பலர் உழைப்பை பன்மடங்கு குறைக்கும் அந்த அறிவு-


பலர் பிழைப்பில் கைவைக்கும் 

அந்த அறிவு-


அத்தனையும்

இயற்கையாகத் தோன்ற வைக்கும் 

அந்த அறிவு-


பட்டையை கிளப்பினாலும், 

நட்டத்தை மீட்டாலும்,

பட்டத்தை வென்றாலும்,

மனிதத்தை வென்றாலும்,

கணிதத்தை வென்றாலும்,

எத்தனை அவதாரம் 

எடுப்பினும், 


செயற்கை நுண்ணறிவாம் அந்த அறிவு-

இயற்கை ஆகாது!!

உப்புக்கல் வைரக்கல் ஆகாது!!!


- Akhila 


 எழுத்துகளின் வலிமை❤️💖


கருவறையில் இருந்த என்னை 'வெளியே வா...ஜெயிக்க!' என்று சீராட்டினாள் என் 🩷அன்னை✨


ஆண்டுகள் கடந்தும் அயராது தொடர்கிறேன் நம் தமிழை தூரதேசத்தில் இருந்தபடி...🩷✨


இயலாது என்ற சொல் துறந்து

முயற்சி, உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றால் நிரப்புங்கள் நம் உள எண்ணங்களை✨


ஈதல் சிறப்புதான்; அதனினும் சிறப்பு அந்நிலை அடைந்தவரை மீண்டும் மீண்டும் 🫴பெறும் இடத்திலேயே விட்டுச்செல்லாமல் வாழ்வில் சிறக்க உதவுதலே!!


தேடல்தான் பற்பல வினாக்களின் விளக்கங்களை நம்மிடம் சேர்க்கும் 💯

தேடலோடு தொடரலாம் அத்தனை பொழுதுகளிலும்🙏😇-ரேவதி சக்தி


- Revathy Sakthi 


அ என்ற எழுத்தில் அண்டமும் அடங்கும்,

ஆடியில் வீசும் காற்றும் தமிழ் மொழி

 பேசும்,

இப்போதும் எப்போதும்,

ஈரிதழ் ஒட்டியும் ஓட்டாமலும்  ,

உதடுகள் பிளக்க, 

ஊன்றிய முதல் மொழி

எம்மக்கள் கொண்டாடும் ,

ஏற்றம் பெற்ற மொழி ,

ஐயனும் ஐயையும்

சொல்லில் விளையாடிய மொழி,

ஒற்றுமையில் ஓங்கி உயர்ந்த ,

ஒளவியம் இல்லா  சிறப்புமிக்க மொழி, 

அஃதே எங்கள் தமிழ் மொழி!

-Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...