*செம்மை*
எந்த சலனமும் இல்லாமல் அதிகாலைவேளையில் செவ்வானம் செங்கதிரவனை பிரசவிக்கிறாள்......
மெல்ல மெல்ல செங்கதிர் தன் கண்களை திறந்து தங்கசரிகையின் மினு மினுப்பினை போல.... செங்கதிர்துகளாய் மண்ணில் விழுந்து.......
அதுவரைதன் இதழ் மூடிய செந்தாமரை ஒரு ஒரு இதழ்களாய் விரித்து மலர்கிறாள்.....
அதுவரை கண்ணிதழ்களை திறவாமல் இருந்த பெண்மணிகள்....
வண்ணக் கோலங்களை போட்டு வரவேற்கிறாள்.....
அதுவரை நாணத்தால் தலைசாய்த்திருந்த செந்நெல் கதிர்கள் தலைநிமிர்ந்து மைலாஞ்சியாய் சிவக்கின்றாள்......
செங்கதிரவனால்!
*வெண்மை*
ஒன்றோடுஒன்று சிரித்து உரசிக்கொண்ட வெண்
மேகங்களின் புன்னகைகளின் சிதறல்துளிகள்.....
புன்னகை
துளிகளாய்..... மழையாய்...... மலைமீது வந்து சேர்ந்து.....
வெள்ளி துகள்களாய் உருகி வழிந்தோடி....... நீர்வீழ்ச்சியாய்....
சமுத்திரத்தில் சங்கமிக்கும்..... புன்னகை துளிகளின் ஓர் மழைத்துளி.....
முத்தாக!
*பசுமை*
எண்ணற்றவை பறவைகளின் எச்சல்களின் தூறாள்களால்..... மயில்தோகையின் அழகினை ஞாபகபடுத்தும்.....ஓங்கி வளர்ந்த மரங்களின் பசுமையான செழுமை......
விழுதுகளால் கடக்காலிட்டு.... அழகான மரவீடாக சாலையின் இரு மருங்கிலும்...... மரங்கள்
எண்ணற்ற பறவைகளின் பசுமையான
இல்லங்களாக...... *மரங்கள்*!





அருமை 👌👏
ReplyDeleteSuper 👌👌
ReplyDeleteWow superb..
ReplyDeleteசிறப்பு👌😇🇭🇺
ReplyDelete