*முதுமை அழகு*
என்
முட்டை கண் தான் அழகு ..
சுருண்ட மேகமுடி தான் அழகு..
மெலிந்த மேனி தான் அழகு..
முத்து பல்வரிசை தான் அழகு..
என நினைத்திருந்தேன்...!..
உன் -
பொக்கை வாய் சிரிப்பை பார்க்கும்வரை..!
பாலைவரிகளாய்
கோலமிட்ட உன் ‘முக’வரிகள் பார்க்கும்வரை..!
குழந்தை சுமக்கும்
தொட்டில்போல் -கம்மல் சுமக்கும் உன் செவியழகை
பார்க்கும்வரை...!
கம்பு பிடிக்க ஏதுவாக
கூன் விழுந்த உன் மென்தேகம்
பார்க்கும்வரை...!
வெள்ளி இழைகளாய்..முளைத்த
உன் கருப்பு வெள்ளை கூந்தல்
பார்க்கும்வரை...!!!..
இதோ-
உன்னை -நீ பாதி மறந்த பின்னும்
மறவாது - உன் பேரபிள்ளைகளை
காணும்போதெல்லாம் சாப்பிட்டாயா என கேட்கும்போது..
உணர்ந்து அறிந்தேன்..
அழகு -
இளமையின் முகத்தில் அல்ல..
முதுமையின் முதுகில் தான் என்று..!!

அழகான சிந்தனை👌
ReplyDeleteArumai Arumai...
ReplyDelete