Thursday, January 28, 2021

எஸ்.ராவின் "ஒரு பிடி சோறு" -"படித்ததில் பிடித்தது" by Vidhya Nivash


 


அனைவருக்கும் வணக்கம் ,

படித்ததில் இதயத்தை தொட்ட கதை எஸ்.ரா அவர்களின்"கதாவிலாசம்" பல ஆசிரியர்களின் சிறுகதை தொகுப்பு படித்து வருகிறேன் என்று சொல்வதைவிட வாழ்ந்து வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக நாவல்கள் படிக்கும் பொழுது அந்தக் கற்பனை உலகில் மூழ்கி கனவில் மிதந்து கொண்டு இருப்போம். ஆனால் மாறாக இலக்கிய எழுத்தாளர்கள் உடைய புத்தகங்களை படிக்கும் பொழுது சிந்தனைகளால் தூண்டப்பட்டு, இரண்டு கதைகளுக்கு மேல் நம்மால் படிக்க முடியாது .அதுவே நாவலாக இருந்தால் ஆயிரம் பக்கங்களையும் கூட படித்து முடித்து விட முடியும்.


எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களை என்னவென்று சொல்வது ஒரு ஆண்டு காலமாக மட்டுமே புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க சிந்தனைகள் பரந்து விரிகின்றன. மாபெரும் தொண்டு அவர் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர் படித்த அற்புதமான மாணிக்கங்களை அனைவருக்கும் பகிரும் விதம் மிகவும் உத்தமம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.



" கதாவிலாசம் "இப்பொழுது தான் படித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்கவில்லை .விளக்கம் பிறகு பதிவிடுகிறேன் .அதிலிருந்து ஒரு சிறிய மணித்துளி இன்று பதிவிட விரும்புகிறேன் .இந்த புத்தகத்தை எனக்கு படிக்கக் கொடுத்த அகிலாவிற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .புத்தம் புதிதாக இருக்கிறது புத்தகம் அவர் படித்தாரோ இல்லையோ என்று தெரியவில்லை ஆனால் அது எனக்கு பரிமாறும் பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி.இதனுடன் புத்தகத்தின் பக்கங்கள் மற்றும் ஆடியோ இனணத்துள்ளேன்.

Click below to read and hear "ஒரு பிடி சோறு"


ஒரு பிடி சோறு audio book











4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...