Saturday, January 30, 2021

கல்கின் "பொன்னியின் செல்வன்" சுருக்க விளக்கம் முடிவு by Vidhya Nivash

 


இதற்கிடையில் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இளவரசர் இறந்துவிட்டார் என்ற செய்தி தஞ்சை வரை சென்று விடுகிறது.


சுந்தர சோழர் மகளை அழைத்து அவருடைய வாழ்நாள் ரகசியத்தை புலம்புகிறார். என்னுடைய இளமைப் பருவத்தில் இலங்கைக்கு படையெடுத்து சென்றிருந்தபோது அங்கு காட்டிலிருந்த ஒரு ஊமை பெண்ணை தான் காதலித்ததாகவும், அவளுக்கு வாக்குகொடுத்துவிட்டு வந்தாகவும் இங்கு அரசு பொறுப்பேற்பதற்கு உன்னுடைய தாயை திருமணம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பிறகு நீங்கள் எல்லாம் பிறந்து விட்டீர்கள். பொன்னி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பொன்னி நதியே காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுகிறான் உன்னுடைய தமையன் ஆனால் அன்று அவனை காப்பாற்றியது அந்த ஊமைப் பெண் .அன்றிலிருந்து தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் சில காலங்களாக அவள் வந்து என்னை பயம் மூட்டுகிறாள். அன்று அவளை பிரம்மராயர் விட்டு பின்தொடர செய்தேன் கலங்கரை விளக்கத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. அந்த பெண்ணின் உருவம் என்னை பாடாய் படுத்துகிறது என்று வருத்தப்பட்டார்.


இதை குந்தவை வானதி இடம் சொல்லி கொண்டிருக்கும்பொழுது வானதி தற்செயலாகச் சொன்னால் இரவில் நந்தினி மன்னரை பயமுறுத்துவதாக நேரடியாகவே பார்த்ததாகவும் கூறினாள்.


நந்தினி அன்று வந்தியதேவன் உடன் கேட்ட உதவி இதுதான் எப்படியாவது உன்னுடைய தலைவனான ஆதித்ய கரிகாலனை கடம்பூர் அரண்மனையில் தான் சந்திக்க விரும்புவதாக கூறினாள். அதேபோல் ஆதித்ய கரிகாலனுக்கு மதுராந்தகனுடன் சமரசம் பேசுவதற்காக கடம்பூரிலிருந்து அழைப்பு வந்திருந்தது .குந்தவையின் பேச்சை கேட்காமல் ஆதித்ய கரிகாலன் தனியாக அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தார்.நந்தினி அதோடு மட்டும் சும்மா இல்லாமல் கந்தமாறனை தூண்டிவிட்டு ஆதித்த கரிகாலனுக்கு உன்னுடைய தங்கையை திருமணம் செய்து கொடுத்தால் அவள் நாட்டின் பட்டத்து ராணி என்று ஆசை மூட்டி விட்டாள். ஆனால் கந்தமாறன் தங்கையான மணிமேகலை பார்த்த கணத்திலேயே வந்தியதேவன் மீது காதல் கொண்டு இருந்தாள்.


கடம்பூர் வரும் ஆதித்ய கரிகாலனை பாண்டிய ஆபத்துபதவிகள் ஆன பரமேஸ்வரன் ,ரவிதாசன் உடன் சேர்ந்து கொல்ல திட்டமிட்டிருந்தாள் நந்தினி .அந்த நாளும் வந்தது ஆதித்ய கரிகாலன் அவருடைய நெருங்கிய நண்பரிடம் இளம் வயதில் பழகி காதலித்த பெண் தான் நந்தினி முடிசூட்டு விழாவில் பெரியபழுவேட்டரையர் மனைவியாக அவளை பார்த்த அன்றிலிருந்து எனக்கு தஞ்சைக்கு செல்ல விருப்பமில்லை அரச பதவியும் உடன்பாடில்லை என்று புலம்பினார்.


கடம்பூர் அரண்மனையின் பாதாள அறையில் ஆபத்துதவிகள் பதுங்கி இருந்தனர் .ஆதித்திய கரிகாலன் நந்தினியை பார்த்தவுடன் கலங்கினான் .என்னுடைய கணவனைக் கொல்லும் பொழுது உன்னிடம் உயிர் பிச்சை கேட்டேன் ஆனால் நீ எனக்கு கொடுக்கவில்லை என்று அலறினாள். வாக்குவாதம் பலமாக இருக்கும் பொழுது ஆதித்ய கரிகாலனுடைய சகோதரி என்ற புதிருக்கு பதிலை அவன் காதில் கூறினால் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆதித்த கரிகாலன் சிலையாக நின்றான். அவரை காப்பாற்றுவதற்காக வந்த வந்தியதேவன் அங்கே வந்து சேருகிறான் .அங்கிருந்த அரக்கி வந்திய தேவரை அடித்து போட மயங்கி விழுந்தார். நடந்தது என்ன என்பதை அறியாத நிலையில் கத்தியால் குத்தப்பட்டு கீழே கிடந்தார் ஆதித்ய கரிகாலன் .பழி வந்திய தேவர் மேல் விழுந்தது.


அதை பார்த்த மணிமேகலையும் அதிர்ச்சி அடைந்து கத்தினாள்.ஒருபுறம் இளவரசர் இறந்து விட்டதாக செய்தி மறுபுறம் இங்கே ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்டு கடம்பூர் அரண்மனையில் தீ விபத்து. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது தஞ்சை முழுவதும் .


கப்பலில் நடந்த ஆபத்தில் இருந்து எப்படியோ தப்பி ,தன்னுடைய பொறுப்பிலேயே அருள்மொழிவர்மன் கைதுசெய்யப்பட்டு வந்ததும் அவர் இறந்து விட்டதை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட பெரிய பழுவேட்டரையர். அங்கிருந்த கோயில் ஒன்றில் ஒதுங்கி இருந்தார். அப்போது தான் அங்கே ரவிதாசன் பரமேஸ்வரனும் பேசிக்கொண்டதை கேட்டார் தற்செயலாக நந்தினியின் சுயரூபத்தை தெரிந்துகொண்டார் .அவள் மீது பெரும் கோபம் ஏற்பட்டது சோழர்களை பழிவாங்கவே தன்னை பகடைக்காயாக பயன்படுத்தியதை எண்ணி வருத்தப்பட்டு ஆத்திரத்துடன் கடம்பூர் மாளிகை நோக்கி விரைந்தார் .


அருள்மொழிவர்மன் நாகப்பட்டினத்தில் புத்த மடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்தி கேட்டு வானதியும் ,குந்தவையும் சென்று பார்க்க நாகப்பட்டினம் கிளம்புகிறார்கள் . ஒருவழியாக மாறுவேடத்தில் அருள்மொழிவர்மன் தஞ்சைக் கோட்டைக்குள் நுழைகிறார் .அனைவரும் எதிர்பார்த்த பல புதிர்களுக்கு விடை காத்திருக்கிறது .பூங்குழலி அத்தை அங்கு அழைத்து வரப்பட்டு, தப்பி தலைமறைவாக மன்னரின் அறைக்கு அருகில் உள்ள பாதாள அறையில் தங்கி இருக்கிறாள் .மன்னரை கொல்லும் நாளும் குறிக்கப்பட்டது அது எப்படியோ அறிந்து அதில் இருந்து காப்பாற்றத்தான் மந்தாகினி அங்கே தங்கியிருந்தார்.


அருள்மொழி வர்மன் தந்தையை சென்று பார்க்கும் தருணத்தில் அங்கு அனைத்து உண்மைகளும் உடைக்கப்படுகிறது. அப்பொழுதுதான் குந்தவை தன்னுடைய தந்தை அந்த ஊமை பெண்ணை நினைத்து வருந்துவதாக கூறுகிறார் .அந்த ரகசியத்தைக்கேட்ட பிரம்மராயர் உண்மையை கூறுகிறார். உண்மை வெளிவருகிறது பிரம்மராயர் சென்று பார்க்கும் பொழுது கலங்கரை விளக்கத்தில் இருந்து விழுந்த மந்தாங்கினி சாகவில்லை என்றும் அவரை குணப்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக கூறுகிறார். உங்களுடைய நல்லதுக்காகத்தான் செய்ததாகவும் கூறி மன்னிப்பு கேட்கிறார் பிரம்மராயர் .


அதோடு மட்டும் இல்லை அவள் கீழே விழுந்தில் அவளுக்குப் புத்தி ஞாபகம் இல்லாமல் போய்விடுகிறது. அவள் போன படகில் தான் பாண்டிய மன்னன் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது . இரண்டு வருடங்களுக்கு பிறகு அவள் கர்ப்பமாகிறாள் அப்போது அவளை பார்த்துக் கொள்ள முடியாமல் அவளை கொண்டு வந்து அவளுடைய சகோதரி வீட்டில் விடுகிறார் தந்தை.அப்பொழுதுதான் செம்பியன் மாதேவியும் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி ,வாணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது .அவளுடைய அக்காவிற்கு ஒரு பெண் குழந்தையும் ,ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. அங்கே இருக்கும் பிரம்மராயருக்கு அனைத்தும் தெரியும் .செம்பியன்மாதேவி நம்பி வீட்டில் கொடுத்து பெண் குழந்தையை வளர்க்க சொல்கிறார். அந்த ஆண் பிள்ளை பாண்டிய நாட்டிலும்,இத்தனை வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை இறந்து பிறக்கிறது செம்பியன்மாதேவிக்கு ,வாணிக்கு பிறந்த குழந்தையை எடுத்துக் கொள்கிறார்கள் யாருக்கும் தெரியாமல், வாணிக்கு பிறந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாக வளர்க்கிறார் .இறந்ததாக நினைத்த குழந்தையும் உயிர் பெற்று விட்டது .அந்த குழந்தைதான் சேந்தன் அமுதன் அடுத்த மன்னன் ஆகக்கூடிய உரிமை உள்ளவன் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது .


ஆதித்த கரிகாலன், நந்தினி அவர்களுக்கு இடையே உள்ள நட்பு காதலாக மாறுவதை கண்டு,நந்தினியை பாண்டிய நாட்டிற்கு நாடு கடத்தி விடுகிறார்கள் .இதற்கிடையில் குறித்து வைக்கப்பட்டது போல் மன்னர்மீது கத்திப் பாய்கிறது அதை கவனித்த மந்தாங்கினி ஓடிவந்து அதை வாங்கிக் கொள்கிறாள் .அந்த இடமே இருட்டாகி விடுகிறது சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் மன்னருடைய மடியில் மந்தாங்கனி வைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார் .அதுவரை அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் அவளை பார்த்த உடன் துடித்துப் போய்விட்டார் சுந்தர சோழர்.


அனைத்து உண்மைகளும் அங்கே வெளிப்படுகிறது. உத்தமசோழன் என்னும் சேந்தன் அமுதன் அடுத்த அரசராகப் பதவி ஏற்கிறார் . சேந்தன் அமுதன் ,பூங்குழலி மீது தீராத காதல் வைத்துத்திருந்தான் ஆனால் அவளுக்கு தான் அவர் மீது ஈடுபாடு இல்லை. பிறகு அவன் மீது ஒரு பாசம் இடையில் அவன் அவளை கவனித்துக் கொள்வதில் பாசம் வருகிறது. இருவருக்குமிடையே காதல் பிறக்கிறது. பூங்குழலியும் அரசியாக மாறுகிறாள் .எல்லாம் கேட்ட நந்தினியும் காட்டில் சென்று கோவத்துடன், எப்படியோ அவளை கண்டுபிடித்து விட்ட பெரிய பழுவேட்டரையார் அங்கே செல்கிறார் .தலைவிரி கோலத்தில் இருக்கும் நந்தினி பாண்டிய ஆபத்துவதிகளுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றுவிடுகிறாள். சுந்தரசோழர் வயதான காலத்தில் இறந்துவிடுகிறார்.


உத்தம சோழன் தலைமையில் அரச கூட்டம் கூட்டப்படுகிறது .பலரின் முன் ஆதித்ய கரிகாலனுடைய கொலை பற்றி விவாதம் வர பெரிய பழுவேட்டரையர் குற்றணர்ச்சியில் அங்கு அவர் இன்னொரு உண்மையையும் போட்டு உடைக்கிறார். ஆதித்ய கரிகாலனை தவறுதலாக கொன்றது நான் தான். கடம்பூர் மாளிகைக்கு சென்றேன் ஆத்திரத்தில் நந்தினி மீது வாளை தூக்கி எறிந்தேன். அது ஆதித்ய கரிகாலன் மீது தவறுதலாக பட்டுவிட்டது என்று கூறி அழுததோடு அந்த இடத்திலே வாளை எடுத்து தன்னை குத்தி உயிரை நீக்கிக் கொண்டார்.


மதுராந்தகன் உண்மையான வாரிசு இல்லை அவன் ஒரு பாண்டியன் என்று அறிந்து பாண்டிய நாட்டிற்கு தப்பி ஓடி விடுகிறான் .செம்பியன் மாதேவியின் கணவரும் சத்தியம் வாங்கிய இறந்திருப்பார் மதுராந்தக சோழன் அரியணையில் ஏற கூடாது .அவனை சிவபக்தியில் ஈடுபடுத்து என்று .


அனைத்து புதிர்களும் விளக்கப்பட்டது கடைசியில் நந்தினி ஒரு பக்கம் சென்று விட்டாள், குந்தவையும் வந்தியத்தேவனும் திருமணம் புரிந்து கொண்டனர் .அருள்மொழி வர்மனுக்கும் ,வானதிக்கும் திருமணம் நடந்தது .தான் கோயில் கட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் அதற்காக ஊர் மக்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் வந்திய தேவரின் துணையுடன் கிளம்புகிறார் .


இதற்கிடையில் வந்தியத்தேவனை நினைத்து காதலில் உருகி செயலற்று கிடக்கிறாள் மணிமேகலை .அவளை காண்பதற்காக வந்தியதேவன் கடம்பூர் செல்கிறார் .அவருடைய மடியிலேயே மணிமேகலை தன்னுடைய உயிரை பிறிக்கிறாள் .இதனுடன் நாவல் முடிவடைகிறது பேராசிரியர் வந்தியத்தேவனை வைத்தே கதையை தொடங்கி மற்றும் கதையை முடித்திருப்பார். மிகவும் அற்புதமான ஒரு காவியம்.


மறக்க முடியாத தருணங்கள் வானதிக்கும் பூங்குழலிக்கும் வரும் காதல் போராட்டங்கள் யார் ஜெயிப்பார்கள் என்ற போட்டியில் அருள்மொழிவர்மன் தன்னுடைய மனதில் இருக்கும் காதலையும் வெளிப்படுத்த முடியாமல் தமக்கை சொல் மீற முடியாமல் தவிப்பதும் ,சொந்த ஊருக்குள்ளே மாறு வேடமிட்டு வரும் காட்சிகளும், பாதாள அறைக்கு உள்ளே நடக்கும் திடுக்கிடும் தருணங்களும் ,ஆச்சரியங்களும் .மணிமேகலையின் வந்தியத்தேவன் மீது வரும் காதலும் ,வந்தியதேவன் குந்தவியின் காதலும் ,ஆதித்த கரிகாலனுடைய மரணம் காட்சி யாராலும் மறக்க முடியாது ,நந்தினி, பெரிய பழுவேட்டரையர் மீது வரும் இரக்கமும் என பல அடுக்கிக் கொண்டே போகலாம். அழகான கற்பனையுடன் கூடிய சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றைக் கூறும் உத்தமமான காவியம் .



Click below link for Ponniyin selvan audio book



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...