இயற்கையின் அவதாரம் அவள் (மரம்)..!..
சக்தியின் அவதாரம் இவள் (பெண்)..!..
அவள்-விதையில் இருந்து விருட்சம் கொடுப்பாள் ..
இவள்- தன் உயிரில் இருந்து வம்சம்
கொடுப்பாள்..
அவள்- தன் கிளைகள் விரித்து பல
கூட்டுக்கு சொந்தக்காரி..
இவள்- தன் சுயநலம் தவிர்த்து பல
நல்வினைகளுக்கு சொந்தக்காரி..
அவள்-தன்னை வெட்டினாலும் விறகாய் எறிவாள்..
இவள்- தன்னை திட்டினாலும்
திருப்தியாய் மன்னிப்பாள்..
அவள்- நிழலாய் நிற்பாள்...
இவள்- நிஜமாய் நிற்பாள்...💃
மொத்தத்தில் -
அவளுக்கு சளைத்தவள் இவளில்லை..!!..
இவளுக்கு சளைத்தவள்
அவளில்லை ..!!!...

அருமையான விளக்கம்👌
ReplyDeleteSuper kiruthika💕👍💕
ReplyDelete