Tuesday, January 19, 2021

எஸ்.ரா அவர்களின் "சஞ்சாரம் புத்தக விளக்கம்" by Vidhya Nivash

 


எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களின் "சஞ்சாரம்" சாகித்ய அகாடமி விருதுபெற்ற புத்தகத்தைப் பற்றி.. இது நாதஸ்வரத்திற்கும், கரிசல்மண்ணிற்கும் இடையே உள்ள உறவை விளக்கும் புத்தகம். நாதஸ்வரம் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது கல்யாணம், திருவிழாக்களும் ,கச்சேரிகளில் பட்டு ஜிப்பா, ஜவ்வாது..


ஆனால் இந்த புத்தகம் நாதஸ்வரத்திற்க்கும் ,பாமர மக்களுக்கும் ,கரிசல் காட்டில் கொளுத்தும் வெயிலிலும் இசையை ரசிக்கும் மக்களையும் ,அடுத்த வேலை உணவிற்கு இல்லாதபோதும் இசை மீது உள்ள காதலும் ,உயிரே போனாலும் விட்டுக்கொடுக்காத இசை உணர்வும் மிக அழகாக விளக்கியுள்ளது.ஒருவனுக்கு இசை மீது காதல் இருந்தால் மட்டும் போதும் அங்கே மொழி ,ஜாதி ,ஊர் பெயர்,உடல் இதற்கு இடமில்லை என்று ஆசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். நாதஸ்வரம் பற்றிய பல வரலாறு இதுவரை கேட்டிராதரவற்றை இப்புத்தகத்தில் மிக அழகாக ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.சொல்லப்போனால் இந்த புத்தகத்தின் கதாநாயகனுடன் நானும் கரிசல் மண்ணில் நடமாடி வியர்வையால் நனைந்து இசையில் மூழ்கினேன் என்று தான் கூற வேண்டும். கலை இருக்கும் இடத்தில் மூர்க்கத்தனமும் இருக்கத்தான் செய்கிறது அதையும் தாண்டி அதில் மனிதத்துவத்தை ஆசிரியர் மிக அழகாக காட்டி இருக்கிறார்.வளர்ந்து வரும் நாகரிகத்தில் பலவும் மறைந்து வருகின்றன ஆனால் சாதி நோய் குறையவே இல்லை,பல கலைஞர்கள் குடும்ப நலனுக்காக தடம்மாறி போனாலும்,உண்மையான கலைஞன் இசையை நெஞ்சில் சுமந்து அங்கும் இங்குமாக நடமாடுகிறான் என அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

5 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...