உலகப் பெண்கள்
பெண்கள் தின வாழ்த்துக்கள்
அன்னையின் மடியிலே மயில் போல்
வளர்ந்த பூக்களளே!
பருவ வயதில் பட்டாடைக் கட்டி
பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களே!
பலதுறைகளிலும் பட்டப்படிப்பை முடித்து நான்கு திசைகளிலும் நற்பெயர் எடுத்தவளே!
திருமண பந்தங்கள் புதிது என்றாலும் புன்னகையாய் புகுந்தவர்களே!
தரணி சிறக்க தன்னலமற்ற அறிவைக் கொடுக்க ஆசானாய் அமர்ந்தவளே!
மருத்துவத் துறையிலும் மனம் நோகாமல் மக்களைக் காக்கும் மங்கையர்களே!
எல்லாத்துறைகளிலும் எழில்மிகு வளர்ச்சி பெற்று சிறப்புடன் இருக்கும் எழிலரசிகளே !
இவை அனைத்தையும் திறம்பட செய்து அழகாய் குடும்பத்தை காக்கும் சிங்க பெண்களே!
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

அழகான முதல் கவிதை,அருமை👏👏
ReplyDeleteGreat and beautiful. Keep it up kamatchi. 💞👏👏👏I am happy to see you here.
ReplyDeleteவாழ்த்துக்கள். அருமையான கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் காமாட்சி 🕊
ReplyDelete