Wednesday, May 5, 2021

தவறு by Veena Shankar

         


                                        

                                                          தவறு


              வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது எதிர்நீச்சல் போடவேண்டும் என்ற வாக்கிற்கேற்ப பெண்கள் கல்லூரி பேராசிரியையான நான் என்  மாணவியருக்கு அறிவுரை கூறுவதுண்டு. எதுவும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையையும்  ஊட்டி வளர்ப்பேன். இப்படி இருக்க ஓர் நாள் நான் என் மாணவியருக்கு கொடுத்த அசைன்மெண்ட்டை எல்லா மாணவியரும் எனக்கு பயந்து முடிக்க, ஒரு மாணவி மட்டும் முடிக்கவில்லைஇப்படி ஒரு நாள் அவளை மன்னித்து விட்டால் அடுத்த முறை வேறோருவர் முடிக்காமல் வர இது முன்னுதாரணமாக மாறி விடும் என்பதால் அவள் கூறிய காரணம் உண்மையாபொய்யா? என ஆராய செல்லவில்லை நான். வெளியே நிற்க வைத்துவிட்டேன். மேலும் அடுத்த  மாணவியருக்கும் இது எச்சரிக்கையாக இருக்கும் என்றே நினைத்தேன்.


              ஞாயிற்று கிழமைகளில் தான் என் வீட்டு பொருட்களை சுத்தம் செய்வது வழக்கம். வேண்டாத பொருட்களையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து கடத்தி விடுவேன்அதனால் என் வீட்டிற்கு வரும் விருந்தினரும் நான் வீட்டை அழகாக வைத்திருப்பதாக புகழ்வர்பெருமைக்காக சொல்லவில்லை, இதற்காக நிறைய பரிசுகளையும் வாங்கியுள்ளேன். இந்த நாள் இப்படியிருக்க, தேவையில்லா காகிதங்களை கிழித்து போட்டேன். கடைசியில் வீட்டை பெருக்க ஆரம்பித்தேன்அப்போது எதிர் திசையிலிருந்து காற்று   வேகமாக வீச, நான் குவித்து வைத்திருந்த தாள்கள் எல்லாம் பறக்க, வீடே தாள்களால்   நிரம்பியதுஎனக்கும்  சலிப்பு தட்டியது. எவ்வளவு  தான் வெளியே தள்ளினாலும்  இந்த  காற்றின்  வேகத்திற்கு என்னால்  ஈடு கொடுக்க  முடியவில்லை.


              கடவுளின் முன் நம் கணக்கு தப்பாக போகிறதே என நினைத்து கொண்டிருக்கையில் நேற்று நான் வெளியே நிற்க சொன்ன  மாணவியின் முகம் என்  கண்ணில் தெரிந்தது. அவளுக்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நடந்திருக்கும். நாம் தான் சரியான காரணத்தை  தவறாக  நினைத்து  அவளை  தண்டித்துவிட்டோம் என நினைக்கத்  தோன்றியது. என் தவறை சுட்டி காட்டிய கடவுளுக்கு நன்றி சொன்னேன்


              அடுத்த நாள் வர காத்திருந்தேன். அம்மாணவியிடம் கூச்சப்படாமல் மன்னிப்பு கேட்க எண்ணினேன், அதுவும் எல்லா மாணவியரின் முன்னிலையில்அதேபோல் மாணவியரின் தவற்றை தனியாக அழைத்து சொல்ல முடிவேடுத்தேன்.


             தண்டிப்பதில் தவறில்லை. ஆனால் ஆராயாமல் செயல்படுவது தவறு.    தவறு செய்வது இயற்கை. அதை உணர்ந்து மறுமுறை தவறு செய்யாமல் இருப்பது நன்று. 


2 comments:

  1. பல நேரங்களில் நடக்கும் உண்மை👌

    ReplyDelete
  2. Aamanga oru person ta ithu thappu ini panatha nu solli puriyavcha kandipa purinchupanga thaniya sollunga innum avunga marakama punish panalam kadasi varikum manikamaten apdinu solrathu not a human character...

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...