Monday, May 3, 2021

திருப்புமுனை by Veena Shankar

 


திருப்புமுனை



              சிவா ஒரு எம்.பி.. பட்டதாரி. வேலை தேடிக் கொண்டிருக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறான்.. அவன் தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதால் வீட்டிலுள்ளவர்களுக்கு அவ்வளவு பெருமை. அவன் அம்மாவோ தன் பிள்ளை படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்று வாய் நிறைய பீற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது...?


               ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் சிவாவை அழைத்து பாங்கில்  போய் இந்த  பணத்தை  கட்டிவிட்டு வா  என்றார்இவனும் அதை மறுக்க முடியாமல் வாங்கி கொண்டு பாங்கிற்கு போனான். முன் பின் செல்லவில்லை அவன். அதனால் எப்படி பணம் போடவேண்டும் என்பதையும் தெரிந்து  வைக்கவில்லை. ஒருவாறாக நிலைமையை சமாளித்து சலான்  ஒன்றை வாங்கி நிரப்பத் தயாரானான். ஆனால் ஒரு பதினைந்து வயது சிறுவன் வர, கட கட வென  சலானை நிரப்பி வரிசையில் நின்றான். தட்டுத் தடுமாறி இவனும் ஒருவழியாக நிரப்ப வரிசையில் நின்ற சிறுவனிடம் சலானை எப்படி எளிதாக  நிரப்பினாய் என கேட்க, நாங்கள் படிக்கும் போதே எங்கள் பள்ளியில் சொல்லி கொடுத்துள்ளார்கள் என்றான். அச்சிறுவன் பணத்தை பத்திரமாக ஒரு பேப்பரில் மடித்து வைத்திருந்தான்பணம் கட்ட  செல்கையில்  பேப்பரை கீழே போட்டு சென்றான்.  இதை கவனித்த சிவாவோ அந்த பேப்பரை குப்பைத்தொட்டியில் போட சென்றான். பள்ளியில் இதை சொல்லிதரவில்லை போல என நினைத்தான்.  சிவாவோ எந்த புத்தகமானாலும்ஒரு சிறு துண்டு பேப்பரானாலும்  அதை  படிக்காமல்  விடமாட்டான்.  அது அவனுடைய வழக்கம்.


              அப்படி அந்த பேப்பரை எடுத்து கையில் வைத்து கொண்டு பணம் கட்டி முடித்ததும்  அங்கேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான். ஆனால் அந்த பேப்பரில் தான் அவன் எதிர்காலம் இருக்கும் என  அவனுக்கு தெரியாது. பிரித்து படித்தான். அதில் ஒரு சிறுகதை எழுதப்பட்டிருந்தது. சிவாவை போலவே அதில் வரும் கதாநாயகனுக்கும் வேலை இல்லை. பல இடங்களில் வலை வீசி தேடியும் அவனுக்குரிய வேலை கிடைக்கவில்லை.. நீண்ட யோசனைக்கு பிறகு அவனுக்கு ஒரு பொறி உதித்தது. நாம் ஏன் வேலை தேடி அலைய வேண்டும். எத்தனையோ குடும்பங்களில் இருவரும் வேலைக்கு செல்வதால் அவர்களால் பல அரசாங்க வேலைகளையும்வீட்டை  சுத்தம் செய்யும் வேலைகளையும் மற்றும் அவர்களின் சிறு சிறு வேலைகளையும் வேலை பளு காரணமாக அவர்களால்   செய்ய முடியாமல்  போகிறதுஎனவே அப்படிபட்ட ஆட்களை கண்டுபிடித்து அதை ஒரு வேலையாக பார்க்கலாம் என முடிவு செய்தான்.   இதையே நாமும் பின்பற்றலாமே என சிவாவும் முடிவு செய்தான்


மாற்றம் வாழ்க்கையில் மட்டும் வருவதில்லை, எண்ணத்திலும் வேண்டும்அதுதான் திருப்புமுனை.

4 comments:

  1. இது போன்ற கதைகள் ஊக்கம் அளிக்கிறது....

    ReplyDelete
  2. நன்றி அம்மா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...