சில நேரங்களில் சில மனிதர்கள் இங்கே சொல்ல போவதற்கும் இந்த நாவலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதை எழுதியவர் ஜெயகாந்தன். அவர் எழுதிய நாவல்களில் முதலில் படித்தது. இந்த நாவல், இது திரைப்படமாகவும் வெளிவந்தது .அன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு நாவல்.. இப்போது இதுபோல பல திரைப்படங்கள் வந்தாலும் ஆனால் ஏன் இந்த ஆசிரியர் இப்படி ஒரு முடிவை கொடுத்திருந்தார் என்று குழம்பிப் போயிருந்தேன். அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது அவர் அப்/ இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு எதையும் நம்பி ஏமாந்து போக வேண்டாம் குறிப்பாக பெண்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார் என்பதை ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு சின்ன வட்டத்தில் நமக்கு தெரிந்த சமூகத்தில் நம்முடைய வாழ்க்கை ஆரம்பிக்கிறது .சில நேரங்களில் நமக்கே தெரியாமல் சிலருடன் நமக்கு ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது .அது எப்படிப்பட்ட ஈர்ப்பு என்று சில காலம் பழகிய பிறகு தான் புரிய வருகிறது .அந்த ஈர்ப்பு நமக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயம் அது பழக்கவழக்கங்கள் ஆக இருக்கலாம் ஆழ்மன எண்ணங்கள் ஆக இருக்கலாம் நம்மால் செய்ய முடியாத ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது. நம்மை அறியாமல் அவர்களால் ஈர்க்கப்படுகிறோம் இதுவே உண்மை .அது ஆண் ஆணுக்கான நட்பாக இருக்கலாம் பெண்களுக்கான நட்பாகவும் இருக்கலாம் .இது இளம் வயதிலிருந்து முதுமை வரை தொடர்கிறது.
நம்முடைய வட்டத்தில் அது புதிதாக வரும் பொழுது அங்கே பல ஆச்சரியங்களும் மகிழ்ச்சியையும் தருகிறது .ஆனால் அந்த வட்டத்தில் இருந்து காணாமல் போகும் பொழுது அது பல துக்கங்களையும் வருத்தங்களையும் தந்து விட்டே செல்கிறது. இளமைக் காலத்திலிருந்தே சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்து செல்கிறோம் , ஈர்க்கப்படும் மனிதர்களுடன் நெருங்கிய நட்புக் கொள்ளும் வாய்ப்புகளும் கிடைக்கிறது .சில நேரம் நமக்கு அவர்களை தூரத்திலிருந்தே , ஏதோ ஒரு விஷயம் அவர்களிடம் நமக்கு பிடித்திருக்கும் ஆனால் அவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்காது.ஆனாலும் நம்முடைய எண்ணங்களில் அவர்கள் கடைசிவரைக்கும் இருக்கத்தான் செய்வார்கள் .இதில் பழகி விட்டு நம்மை விட்டு பிரிந்து செல்பவர்கள் ஒரு வடுவாக மாறி விடுகிறார்கள் .கடைசியாக அதில் நமக்கு கிடைக்கும் பாடம் என்னவென்று பார்த்தால் இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது கிடையாது. இதுவும் கடந்து போகும் என்பது போல எதுவும் மறந்து போகும். போராட்டங்களை அதன் போக்கிலே விட்டுவிட்டு அதற்கு ஏற்றவாறு நாம் எதிர்வினை புரியாமல் இருந்து மனதின் எண்ணங்களை கவனித்து அந்த நேரத்தில் நாம் அமைதியாக இருப்பதே ஒரே வழி. அது எவ்வளவு தான் நம்மை குழம்பினாலும்,அமைதியாக இருக்க மன எண்ணங்களும் தோற்றுப்போகும். அதுவே உண்மை ,எதையும் கவனிப்பதே நம்முடைய வேலை .
மனிதனை மிருகமாக்கும் இந்த எண்ண அலைகளை இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது நம்மை சுற்றி இருக்கும் வட்டத்துள் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டும் .அவர்கள் நம்மை விட்டு சென்றாலும் அதற்காக வருத்தப்படாமல் நம்மை சுற்றியிருக்கும் அன்பானவர்களுக்கு செவிகொடுத்து வாழ்வோமாக...தனிமை நம்மையறியாமல் பயத்தை விதைக்கும்.
இந்நேரத்தில் ஒரு துறவியின் கதை ஞாபகம் வருகிறது. ஒரு துறவி ஒருவர் ஞானம் பெறுவதற்காக அடர்ந்த காட்டில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியான சூழலில் தவம் புரிய ஆரம்பித்தார். அவருடைய ஜெபம் அவரை சுற்றிலும் ஒரு வட்டமிட்டது. ஒரு எண்ண அலைகடலின் நடுவில் அவர் அமர்ந்து தியானம் புரிந்துகொண்டிருந்தார்.பல காலமாக தியானம் புரிந்தார்.ஏன் ஞானம் கிடைக்கவில்லையே என்ற ஒரு கேள்வி.தற்செயலாக அங்கு வந்து தங்கிய ஒரு திருடன், திடீரென்று மாற்றம் அவன் நினைக்காத போது அவன் அப்படியே மாறி விட்டான். அவன் ஒன்றுமே செய்யவில்லை வெறும் அந்த துறவியின் எண்ண அலைகள் அவனுள் புகுந்து அவன் அறியாமலேயே அவனை மாற்றியது .அந்த துறவி செய்த ஒரே தவறு என்னவென்றால் அவர் அவருக்கு ஞானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் தியானத்தில் ஈடுபட்டார்.
அதுபோலத்தான் எல்லாம் தெரியும் நான் தெளிவாக இருக்கிறேன் என்று ஏமாந்து கொண்டு இருக்கிறோம் . எதிர்பார்ப்பு இல்லாமல் சும்மாவே இருப்பது தான் வாழ்க்கையோ தெரியவில்லையே அப்படித்தான் இருக்கவும் முடியவில்லை .
சில நேரத்தில் சில மனிதர்கள் வந்து பாடங்கள் புகுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.அதை அமைதியாக கவனிப்போம்.ஏமாந்தால் இந்த நாவலில் வருவது போல கடைசியில் நாமே அதற்கு அடிமையாகி போய்விடுகிறோம்.
எத்திசையிலும் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க
எல்லா உயிர்களும் அமைதி பெற
எல்லா உயிர்களும் ஆனந்தமாக இருக்க
இறைவனை வேண்டுகிறேன்.

முற்றிலும் உண்மையான தொகுப்பு. விமர்சனம் + கதை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அருமை
ReplyDeleteநன்றி🙏
ReplyDeleteSo good review..admiring the character ganga...nice conclusion vidhya👸🥰
ReplyDeleteThank you Kalai
ReplyDeleteஎன் மனம் பேசியது போல இருக்கு.அழகான வார்த்தை ,வாழ்க்கை அனுபவங்கள்.
ReplyDeleteஆமாம் தோழி அனைவரின் பொதுவான எண்ண வெளிப்பாடு இதுவே🙏
ReplyDelete