Monday, January 18, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"உள்ளுணர்வு" by Vidhya Nivash

 


வீட்டில் பிள்ளைகளின் செய்கைகளைப் பார்க்கும்பொழுது என்னை நினைவூட்டும் உள்ளுணர்வு ...


தோழிகள் சமைத்துக் கொடுக்கும் உணவில் அம்மாவின் கைமணம் ஞாபகமூட்டும் உள்ளுணர்வு...


கணவரின் அக்கறை பலநேரம் அப்பாவை நினைவூட்டும் உள்ளுணர்வு...


திருமணத்திற்குப் பின்பு தான் உணர்ந்தேன் உன்னுடைய பாசத்தை சகோதரியே எனும் உள்ளுணர்வு...


பல நேரம் கடந்து செல்லும் போது நினைவூட்டும் நாம் எப்பொழுதோ நுகர்ந்த மல்லிகைப்பூ வாசத்தையும் ,வாசனை திரவியம் வாசனையும், முறுக்கு சுடும் வாசனையும் ,கடலைமிட்டாய் வாசனையும் நினைவூட்டும் பல உள்ளுணர்வுகள்..


காலத்தின் கோலத்தால் இழந்த பலரையும் நினைவூட்டிக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுகள் பல....


நெருங்கியவரின் மூச்சுக் காற்று நினைவூட்டும் உள்ளுணர்வுகள் பல...


சொந்தம்,பந்தம்,வாசனை,சுவை,கோபம்,

சண்டை,பயணம்,மழை,சாலை,பள்ளி,ஆடல், பாடல்,அழுகை,வலி,வெட்கம்,அவமானம்,சுகம், பிரிவு...என இறந்த காலத்தையும் ,நிகழ் காலத்தையும் நினைவால் இணைக்கும் உள்ளுணர்வு கூறும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று...


பயத்தில் நடுங்கி , சோகத்தில் துவண்டு, தனிமையில் வாடும்போது இதுவும் கடந்து போகும், உன்னால் முடியும் என்று சொல்லும் உள்ளுணர்வு என்றும் மகத்தானது!!!!




5 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...