ஆதங்கப்படுத்தும் பாரம் அல்ல இது
அன்புக்காக ஏங்கும் பாரங்கள்
சுமப்பவன் ஒருவனே அறிவான்
இந்த தந்திரத்தை
வென்றவன் அதிர்ஷ்டசாலி
எப்பாரத்தை இறக்கி வைக்க?
அன்போடு வளர்த்த
பெற்றவர்களையா?
அன்பால் என்னை மாற்றிய துணைவியையா?
அன்பின் அடையாளமாய் பிறந்த செல்வங்களையா?
தாங்கி பிடிக்க பாரியாள்
உண்டென்றாலும்
அவளிடம் பாரத்தை பகிரவும் முடியாதே
என் பின் தொடரும் செல்வங்களை நானே
சுமக்க நினைக்க
மனக்கசப்பும் வருகிறதே உறவிற்குள்
நான் மட்டுமே அவர்களுக்கு
பிடிமானம் என்பதால்
கட்டுண்டு கிடக்கும் என்
கரங்களை திறக்க வழி தெரியாமலும்
அவ்வப்போது சாவியை
தொலைத்தும் விடுகிறேனே
திறக்கவும் முடியாமல்
இறக்கி வைக்கவும் முடியாமல்
விலகி நிற்கவும் தெரியாமல்
துறக்கவும் மனம் இல்லாமல்
நான் தாங்கும் பார மும்
இன்பமே!
என்னை மீட்க எண்ணி
அவர்களை தொலைப்பதும் நியாயமோ?
காற்று சுவாசிக்க மட்டும் அல்லவே!
வேள்வியை வளர்க்கவும் செய்யுதே!
அங்ஙனமே வாழ்வு யாரும் தொடர
- Veena
குடும்ப வாழ்வில் தராசு போல
சரிசமமாக நடந்தால்
தொல்லையில்லை !
அடுத்தத்தலைமுறைகளுக்கு
வழிகாட்ட நியாயமான,
நடுத்தரமான ,உண்மையான
அனுபவமே தேவை!

No comments:
Post a Comment