Monday, March 24, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பொன் விளையும் பூமியே இது

பாலையிலும் நீர் சுரந்து 

செடி வளர்ந்து

பூ பூக்கும்


 தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவன் போல

பாலையில் பூக்க 

காத்திருக்கும் செடி 

அது பூத்ததும் வியாபாரத்திற்காக பறிக்க காத்திருக்கும் மனிதனின் காலடி


 வாழ்வை கடக்க பல பாதைகள் இருந்தாலும்

முதலில் பதிக்கும் காலடியே சரித்திரமாகும்

- Veena 

நல்ல வழிகாட்டியின்

பாதச்சுவடில் முளைத்த, அவர்

 தூவிச்சென்ற விதைகளை நீர்

 ஊற்றி பராமரிக்க

 தேவையில்லை அதுவே

 நம்பிக்கை என்ற வேரை ஊன்றி

 முயற்சி என்ற கிளைகளை

 கொண்டு பல வெற்றி கனிகளை

 கொடுக்கும்!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...