Saturday, March 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 எவன் சொல்லி எவன் இயங்க?

காயம் கொண்டால் யார் உறங்குவர் முதலில்?

எவன் சிறுமை கொண்டான் வலிமையில்? 

ஒருவர் உடல் விட்டு நீங்க

இன்னொருவனும் அவன் வழியே

வலி தெரிந்து ஒருவன் வழி மாறுவான்

வலி அறியாமல் வளியில் மிதப்பான் இன்னொருவன்

இவர்களை இழக்க வசதி பொருட்டல்ல

இழந்த பின் மீட்க நினைக்கும் உலகம்

 Veena Shankar: 

குருதி நம்முள் ஓடினால் மட்டுமே 

நம் இயக்கம்

இதை அறிந்த மானுடமும் 

ஒருவரை ஒருவர் 

எதிர்த்துக் கொண்டு,

வெட்டிக் கொண்டு

கொண்ட ஆனந்தத்தில் 

வெற்றி நமதே

என்று பறை சாற்றிக் கொண்டு

இறுதியில் அடைவது தான் யாது?

என் துணையின்றி நீயும்

வாழ்வதில்லை 

உன் துணையின்றி நானும்

வாழ்வது சாபமோ?

நானும் நீயும் சேர்ந்து பயணிப்போம்

உயிர்களின் காலம் உள்ள வரை

நம்முள் ஓடும் குருதியையும் காத்துக் கொண்டு

Vidhya:

தூங்காத மணிகள் இரண்டு

தூங்கினாலும் இயங்கும் கடமை!

நீ பாதி நான் பாதி என்று

 இருந்தும் இரண்டும் சரிவர

 கலந்துக் கொள்ளாததால் வந்த

 கலக்கம்..

நான் நிலை தடுமாறும் போது நீ

 வேகமாக துடிக்க , நீ துடிப்பை

 நிறுத்தும் போது நான் முழிக்க,

இவை இரண்டும் சரிவர

 பழுதுபார்க்க வேண்டும்,

ஒன்று துடிப்பின் மூலம்

 இருப்பதை உணர்த்தினாலும் மற்

றொன்று விளங்காத புதிர் ,அதை

 கவனிக்காத போது சகலமும்

 நின்று போகும்!

புறத்தில் இருப்பது

நொந்தால் அகத்தில் இருப்பது

 பல மடங்கு நோகும்,

மறைந்திருந்து நம்மை

 இயக்கும் இந்த காதலை,அன்பை

 அவ்வப்போது சார்ஜ்

 செய்துக்கொள்ளுங்க

 இல்லையேல்,ரீசார்ஜ் இல்லை

 ஒரேயடியாக காலாவதியாகும்,

செயற்கையாக பரிமாற்றம்

 செய்தாலும் உத்தரவாதம்

 இல்லை!



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...