எறும்பின் பயணத்திற்கு
ஓடமானது இலை
மரம் வளர்ந்த பின்
ஓடமாவது அல்ல
இலையும் ஓடமே
பொருளின்
பாரத்தை பொறுத்து
எறும்பிற்கு ஏற்ற ஓடமே
ஓடமும் எறும்பின் பயணத்திற்கே
பயணமும் உணவு தேடியே
தேடுதல் வயிற்று பசிக்கே
பசியும் உயிர் வாழவே
வாழ்வும் சிறப்பாய் அனுபவிக்கவே
அனுபவமும் எதற்கும் பாடமே
பாடமும் கற்பது கையாளவே
கையளவு அறிவும் போதுமே
போதும் என்பதும் நிறைவே
நிறைவும் ஏற்பது நிஜமே
நிஜமும் ஓர் நிகழ்வே
நிகழ்வது யாவும் அவன் முடிவே
முடிவு எதற்கும் இல்லையே
இல்லை என்றும் தோல்வி நம் முயற்சிக்கு
இந்த எறும்பின் நீர்ப் பயணம் போலே
எறும்பின் அறிவும்
இலையின் பரிவும்
நீரின் வேகமும்
காற்றின் அமைதியும்
முன்னவரின் எளிய நிலையும்
பின்னவரின் வலிய நினைப்பும்
ஒருமித்து இருக்கும் போது
பயணம் யாவும் அழகே!
- வீணா
போகும் பாதை தெரியாது!
அடுத்த நொடி என்ன நடக்கும்
தெரியாது!
ஒவ்வொரு அடியும் சவாலே
கண்டிப்பாக இதுவும் கடந்து
போகும்!
ஒற்றை படகில் உல்லாச பயணம்
காற்றின் கையில் இருவரும்
பறப்போமே தவிர
மூழ்கமாட்டோம்!
- வித்யா

No comments:
Post a Comment