Thursday, March 6, 2025

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


மண்ணில் துளிர்க்கும் செடி போலவே

மனிதனின் ஆசை

மனதில் நாளுக்குள் நாள் வளர

அந்த 

வளர்ச்சியும் ஓர் நாள்

வளர்ந்த மரம் போலே தானாய் நின்று விடும்

சுகம் தந்த யாவும்

அகம் சுருக்கும்

உடலின் முதிர்வால்

வாழ்ந்து விடு உனக்கான வாழ்வை இக்கணம்

செவி சாய்க்க முடியாது

ஆவி பிரிந்த பின்

காற்றின் அதி வேகத்தில்

மரம் வீழ்வது போலே

- வீணா


துளிர் விடும் அழகோ அழகு

நீ மெல்ல மெல்ல விரிகிறாய்

நான் மெல்ல மெல்ல

 உதிர்கிறேன் அன்பே!

காற்றை அடக்கி,இருளை குடித்து

 உன்னை மேலே தள்ளி நான் கீழே

 போகிறேன்!

நன்றாக வேரூன்றி தழைத்து பல

 நூறு என்னை மீண்டும்

 மண்ணில் உதிர்..

இப்படிக்கு விதை!

- வித்யா


ஐந்தறிவு ஜீவியின் மூக்கணாங்கயிறை கழற்றி 

ஓரறிவு கிளையில் சுருக்கி 

ஆறறிவு ஜீவி யோசித்துக் கொண்டிருந்தது 

சட்டென்று கீழே பார்த்தவுடன் 

இந்த சிறு விதைக்குள் ஒரு விருச்சகம் 

வைத்திருக்கும் இறையருள் 

நம்முள் எவ்வளவு அதிசயங்களை 

வைத்திருக்கும் என்று எண்ணியவாறு 

சுருக்கை கழற்றி 

ஐந்தறிவு ஜீவியின் மூக்கினில் 

கயிற்றைக் கட்டி

ஆறறிவு ஜீவி நடை போட்டது


-- பிரியா

  

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...