Wednesday, March 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


என்றும் பசுமை மாறாமல் 

இருந்திடவும் முடியாது எவராலும்

பசுமைக்கு மறுபக்கம் என்பதும் உண்டு

வீழ்ந்து சருகாகும் இலை போலே

வீழ்ந்த இலைகள் சருகானாலும்

மீண்டும் மரத்தில் 

துளிர்க்கும் இலைகள் பசுமையே 

துவண்ட மனதில் உதிக்கும் 

புது ஞானம் போலே

- வீணா

ஒரு மரம் ஒ‌ன்றரை கோடி பசுமை

பச்சை நிற போர்வையில்

 முளைத்த பச்சை மரகதம் மஞ்சள்

 வெயிலில் ஜோலிக்க ,கண்மூடி

 திறக்க முடியாத குளிர்ச்சி..

உள்ளங்கையில் நரம்புகள் போல

கைக்கோர்த்த கிளைகள்

 பச்சைநிற பஞ்சுமிட்டாய் போல்

 செழித்த இலைகள்..

நிழலைக் கூட தரவிரும்பாத

 நிஜம்!

- வித்யா 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...