Saturday, March 15, 2025

படமும் கருத்துமு by Veena and Vidhya

 




மேல் நோக்கி வளரும் தளிர்கள்

இலையாய் மாறிய பின்

கீழ் நோக்கி காண்பது எதற்கு?

தன்னை ஆதரித்த பூமிக்கு 

நன்றி சொல்லிடவா?

உருமாறிய விதைக்கு 

தன் வளர்ச்சியைக் காட்டவா?

வெயிலின் தாக்கத்தை மறுக்கவா?

மழை மேகத்தின் நீர்த்துளியை பூமியில் இறக்கிடவா?

எறும்புகளின் வாழ்வை காத்திடவா?

பசுமையை என்றும் தாங்கிடவா? 

முதுமையின் காட்சியை உணர்த்தவா?

பொறுமை காத்து தலைகுனிந்து நிற்கவா?

எதுவும் இலக்கணமே

இயற்கையின் வழியில்

- Veena 

எங்க இடம் விளையாட

 போகலாமா..வாங்க மண்ணை 

 பிசைந்து ,பதியம்

 போட்டு,தண்ணீர் ஊற்றி

 வளர்த்த பிள்ளைகள் இரண்டு

 ஒன்று வளரும் மற்றொன்று

 சிரிக்கும்.

 - Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...