Monday, March 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காக்கி உடையில் வந்து

சிவப்பு திருடனை கைது செய்து 

மக்கள் கூடத்தை கைப்பற்றிய இவர் தன்

விலாசம் தொலைத்தார்


கதைகள் பல பேசின இங்கே

அது தன் முகவரியை இன்று தொலைத்து


தெரு முனையில் காட்சி தந்து

ஊரை விட்டு ஓடிப் போன

சிவப்பு மிராசுதார்


ஆட்சி மாறினாலும் இடம் மாறாத 

பெட்டியை ஒட்டு மொத்தமாக 

ஒழித்துவிட்டனர் ஆட்சியாளர்கள்


 கனவுகள் பல சுமந்து

சென்ற காகிதம்

ஓர் பெட்டியில் அடக்கம்

வகையாய் பிரித்த பின்

பிரிந்தன உறவுகள் அங்கே

இடத்தின் பெயரால் சேர்ந்தன 

என்றாலும் 

கொடுப்பவர் அவர் வருகை 

எதிர்ப்பார்த்து காலையும் மாலையும்

நின்றன மக்கள்

தங்கள் உறவுகளின் செய்தியறிய

 ஒருவர் இட்ட இடத்திலிருந்து

மற்றவர் இடத்திற்கு

தானே பயணிக்க 

படித்து அறிந்ததை விட

படிக்காமல் அவர் சொல்லி 

அறிந்த மக்கள் கூட்டம்

இழந்தது உணர்ச்சி 

 புது வரவால் 

அது சோகமென்றாலும்

சுகமமென்றாலும்

-வீணா

பல கனவுகளை ,அன்பை,

ஏக்கத்தை,காதலை,துக்கத்தை

 பரிமாறிய ,தூக்கி சென்றவன்

 சத்தமில்லாமல் சமதியானன்

மீண்டும் வருவானா எழுத்துக்கள்

 எழுத மறக்கும் முன்! 

- வித்யா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...