Sunday, March 9, 2025

பெண்கள் தின வாழ்த்துக்கள் by Veena Shankar

 


பெண்கள் தின வாழ்த்துக்கள்


அன்பு காட்டும்

பிள்ளைகளுக்கு அன்னையாய்


ஆதரவு கொடுக்கும்

பெற்றோருக்கு மகளாய்


இல்வாழ்க்கையில் பழுதில்லா இயந்திரமாய்


ஈர்க்கப்படும் எதிர்திசை காந்தமாய்


உதவி வேண்டுவோருக்கு கரங்களாய் 


ஊன்றி வளரும் விருட்சமாய் 


எதிலும் கால் பதிக்கும் உருவாய்


ஏற்றம் கண்டு முன்னேற்றும் சதியாய் 


ஐம்புலன்களையும் அடக்கும் மனமாய்


ஒட்டு மொத்த சுடரின் அம்சமாய்


ஓடியே நிற்க மறந்த அலையாய்


எக்காலமும் பொறுமையில் தவழ்ந்து, 


தீர்க்க முடிவிற்காக அமர்ந்து,


கால்பதிக்க சுயமாய்

நின்று, 


முடிவை தேடி ஓடும் 


அனைத்து பெண்களுக்கும்


இந்நாளன்றி எந்நாளும் 

பொன்னாளாக அமைய வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...