Monday, March 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

காதல்

வெயிலில் கருகிவிடுமா?

மழையில் நினைந்திடுமா?

குடையில் ஒளிந்திடுமா?

சிறையில் அடைந்திடுமா?

வளியில் கலந்திடுமா?

வழியில் மாறிடுமா?

எதிர்ப்பில் சிக்கிவிடுமா?

எவர் சிந்திக்க எங்கு 

மலர்கிறது காதல்?

எவர் மயங்க எங்கு 

அடைகிறது காதல்?

சில நேரம் தருவாய்

சில நேரம் எருவாய் 

சில நேரம் உவமையாய் 

சில நேரம் உருவகமாய்

சில நேரம். மறைமுகமாய்

சில நேரம் துணிவாய்

ஏதும் திரை போட்டு

துளிர்ப்பதல்ல காதல்

கண்ணும் கண்ணும்

மனதும் மனதும் 

ஒன்றுவதே காதல் 

மெல்லிய இதழ் விரிக்கும் 

பூ போலே

பூப்பதோ மட்டுமல்ல காதல் அன்றி 

வாழ்நாள் முழுவதும்

தொடர்ந்து வருவதே காதல்

Vidhya :

கோடையின் வெப்பம் தணிக்க

குளுகுளு மொழுமொழு

பூசணிக்கொண்டு குடைப்பிடிக்க 

ஐஸ்ஸாக உருகிய காதல்

 கடற்கரையில் நீராவியாக

 போனது!

மீண்டும் மழையாக வந்து

 உறைந்து போன இதயங்கள்

 நினைவுச்சின்னமாக மெரினா

 கடற்கரையில் குடைப்பிடித்து 

 காட்சி தந்தன!

 



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...