Thursday, March 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 மீட்டும் விரல்கள்

 மட்டுமே அறியும்

சுவரத்தின் லயத்தை 

மனதின் பிரதிபலிப்பாய்


மீட்டும் விரல்களில் மிரட்டும் சுவரங்கள் 

அழகே!

மீளும் அமைதி அழகே!

மீறும் மனமும் அழகே!


 கம்பிகளின் அமைப்பில் தந்திரமா?

கைவிரல்களில் படைக்கும் மந்திரமா?

யாரையும் அணைக்கும் சுதந்திரமா?

மீட்டும் பாவையும் இயந்திரமா?

மெய் மறக்க கண்களும் அயர்ந்திடுமா ?

கேட்ட பின் ஆசையும் உயர்ந்திடுமா?

கம்பிகள் பற்றிய விரல்களை

 மென்மையாய் பற்ற விரைந்திடுமா?

- Veena 

விரல் நரம்பை மீட்ட காத்திருக்கும்

 வீணாபதி..

விரலுக்கு  வலிக்காமல்

 நரம்புக்கும் வலிக்காமல்

 உருவான பிள்ளை எல்லோர்

 காதுகளிலும் ஊடுருவ

 பிறக்கும் இசையாக.. 

மிகுந்த வலியோடு வெடிக்கும்

 முத்தாக மனதில் ..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...