Friday, March 7, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya




வானத்தின் கண்ணீர்

பூமியின் தாகத்தை

தீர்க்க மழையாய்

மனிதனின் கண்ணீர்

மனதின் நிலையை

சொல்லாமல் அறிய

விலங்குகளின் கண்ணீர்

உண்மையான போராட்டத்தின் 

விளைவாய் பூத்ததோ?



தாய்மை என்றும் சிறப்பே

அடுத்தவர் விழியின் கண்ணீர் கூட

நனைக்கும் தாயின் விழியில்

பிரிவு என்னும் சொல் கூட 

நனைக்கும் தாயின் விழியை

- வீணா


கண்கள் பேசுதே ..

இவர்கள் கண்ணீர் துடைக்க 

வானமும் பூமியும் எடுத்த முடிவில்

மழை பேசுதே..

ஒவ்வொரு உயிருக்கும் 

உணரச்சிகள் உண்டு என்று

இந்த புகைப்படம் பேசுதே..

எதை சொல்லியும் புரியாத,ஈடாக

 தர முடியாத ஒன்றை,வலியை

 வெடிக்கும் கண்ணீர்

 பேசுது..நாளை என்று

 ஒன்று உண்டேனில் இன்றே

 அழுது தீர்த்துவிடு , மீண்டும்

  புதிதாக பிறப்பாய் நாளை!

- வித்யா



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...