Monday, March 10, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: 

ஓர் வேரில் 

ஓர் கிளையில்

இரு வேறு பரிணாமங்கள்

காண்பதும் அரிதே

ஓர் தாயின் 

ஓர் வயிற்றில்

இரு குணங்கள் கொண்ட 

பிள்ளைகள் போல்

 Veena Shankar: 

காயும் கனியும் போலவே வாழ்க்கை

சில நேரம் மாங்காய்

 போல புளிக்கவும் செய்யும்

சில நேரம் மாம்பழம் போல இனிக்கவும் செய்யும்

பேச்சில் கனி போலும்

 பேசினாலும் காய் போல புளிக்காமலும்

பேசுவது சிறப்பு

 Veena Shankar:

 நிறம் மாறும் நிஜங்கள்

உண்டு இங்கே

நம் விழி நம்மை ஏமாற்றி

அதன் மேல் பற்றுற 

சொல்கிறதே 

சொல்வது சிறப்பு

செய்வது அமைப்பு

காயும் கனியும்

ஏற்புடையதே

நம் மனதிலும்

Vidhya 

காயா பழமா

பல நேரத்தில் சிலருக்கு காயும்

பலருக்கு பழமும் பிடிக்கும்

ஒரே கிளையில் ஒன்று சீக்கிரம்

 பக்குவம் அடைந்து முதிர்க்கிறது

மற்றொன்று நேரம் எடுத்தாலும்

முழுவதுமாக வளர்ச்சி அடைந்து

 முதிர்வதால் பலன் அதிகம்..

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த

 இரு வேறு குணம் பார்பவருக்கு

 மட்டும் அது வேறுபடும்,

படைத்தருக்கு இரண்டும் ஒன்று 

தான்!

காயோ பழமோ சரியான

 நேரத்தில் சந்தைக்கு, வெளியே

 வரவில்லை என்றால் வீணே!




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...