Tuesday, March 25, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 கரும்பலகையில் வரைந்த கண்ணீரை

 துடைக்க துடிக்கும் மனம்

நிஜத்திலும் அவ்வழியே


துயர் துடைக்க விழிகளின் போராட்டம்

ஒன்று துடிக்க

ஒன்று துடைக்க


 தாயின் விழிகளிருந்து கண்ணீர் பெருக

நான் செய்த தவறு தான் என்ன?

தன் தவறையும் சேர்த்தே அழிக்க நினைக்கும் சிறுவன்


 கண்ணீரின் காரணத்தை அறிய நினைக்கும் ஒருவனை விட

சிந்தும் கண்ணீரை துடைப்பவன் சிறந்த மனிதன்

- Veena 

சித்திரத்தில் கூட கண்ணீர் சிந்த

 தேவையில்லை!

சரித்திரத்தை மாற்றி

 போடுவோம் அம்மா!

கண்ணீர் கசிய காரணம் நூறு

அதை துடைக்க ஒரு துணை

அதுவும் பிஞ்சு விரல்கள்

 பட்டவுடனே தேகமே பஞ்சு போல்

லேசானது,இதைவிட  வேறென்ன

 வேண்டும்!

- வித்யா



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...