Tuesday, March 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 இணை சேரா இரும்பு கம்பிகளுக்குள் 

இணையவும் கற்றதோ இம்மலர்

ஆழ்மனதில் காதல் கொண்டதால்


 ஓர் துளி விஷம் போதும்

உயிரை மாய்க்க 

ஓர் துளி நீர் போதும்

செடி துளிர்க்க 

ஓர் துளி ஈரம் போதும்

புத்துணர்வு கொடுக்க

காற்று போதும் ஓர்

மலர் மணக்க

ஓர் பார்வை போதும்

காதலில் மயங்க

ஓர் கருணை உள்ளம் போதும்

எதையும் அரவணைக்க

பூக்கும் பூக்கள் எல்லாம் மணப்பதில்லை

மனது இருக்கும் யாவையிலும்

 உணர்ச்சி என்பதும்

 இருப்பதில்லை

- வீணா


தண்டவாளத்தில் முளைத்த

 காதல் ரோஜாவோ இல்லை

 பிம்பமா ..

காலமெல்லாம் பிரியாமல் உடன்

 இருப்பாய் என சொன்னாயே

இன்று என் கண்ணீரில் வேகும்

 தண்டவாளம்..

இதே இடத்தில் மலர்ந்த நம்

 காதல் இன்று நெடுந்தூரம்

 சென்றதென்ன..

சொல்லாமல் சென்றாய்

 கண்டிப்பாக என்றாவது மீண்டும்

 இந்த தண்டவாளத்துல காதல்

ரோஜா பூக்கும் என்ற இடத்தில்

 கண்ணீர் பூத்தென்ன ..

நல்ல சேதி கொண்டு வருவாய் என

 காத்திருக்க ..ஏன் இந்த பேரிடி?

உயிரோடு சென்ற நீ இன்று என் உயிரை

 இங்கே ஊசலாடா செய்வதேன்..

பாலமாக இருக்க வேண்டிய இடம்

 இன்று பாரமாக கனக்குதே!

- வித்யா




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...